பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, April 22, 2007

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !



பிரசுரத்தின் உள்ளே :


காய்கறிக் கடையும் மளிகைக் கடையிம் நடத்த நமக்குக் கற்றுக் கொடுக்கத்தான் அம்பானியையும் அமெரிக்காக்காரனையும் இங்கே அழைத்து வருகிறதா இந்த அரசாங்கம்? ரிலையன்ஸ் கடை வைக்காததால் சென்னையி பிரஷ்ஷான காய்கறிகள் கிடைக்கவில்லை என்று இந்த அரசாங்கத்திடம் மக்கள் முறையிட்டார்களா ?


நன்கொடை என்று கொள்ளையடிக்கின்றன தனியார் பள்ளிகள்; புதிதாக அரசுப் பள்ளிகள் துவங்குவது இல்லை, இருக்கின்ற பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை.



கழுத்தில் கத்தி வைத்துப் பணம் பறிக்கின்றன தனியார் மருத்துவ மனைகள்; அரசு மருத்துவமனைகள் இல்லை. இருக்கின்றன மருத்துவமனைகளிலும் மருந்தில்லை. சின்னம்மைக்குத் தடுப்பூசி இல்லை, நாய்க்கடிக்குக் கூட மருந்தில்லை.


போதுமான பேருந்துகள் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வக்கில்லை. கோடை வந்தால் குடிநீரில்லை, கொசுவை ஒழிக்கத் துப்பில்லை. அவசரத்துக்கு ஒதுங்குவதற்குத் கூட சாலையோரங்கிளில் கழிப்பறை இல்லை.


இவையெதற்கும் எதுவும் செய்ய வக்கில்லாத அரசாங்கம் "மக்களுக்கு பிரஷ்ஷாகக் காய்கனிகள் கிடைக்கவில்லையே" என்று ரொம்பவும் கவலைப்பட்டு "ரிலையன்ஸ் பிரஷ்ஷை" அழைத்து வந்திருக்கிறது.



படித்த இளைஞர்களுக்குக் கூட வேலை தர வக்கில்லாத அரசாங்கம், மக்கள் தானே முயன்று, கையை ஊன்றிக் கரணம் போட்டு, வாழ்வதற்கு ஒரு வழி தேடிக்கொண்டால் அதில் மண் அள்ளிப் போடுவதற்கு அம்பானியையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் அழைத்து வருகிறது,



சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை ? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கிறன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத்தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவிடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்காக பேர் இருக்கிறார்கள்.இவர்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள் ?
***********************************************************

***********************************************************

நன்கொடை ரூ 5/-

-----------------------------------------------------------------------------------

பிரதிகள் கிடைக்குமிடம் :

புதிய கலாச்சாரம்

16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600 083.

-----------------------------------------------------------------------------------

7 comments:

ஜயராமன் said...

ஆகாய விமானம் வருவதற்கு முன்னால் மக்கள் பிரயாணம் செய்யாமல் இருந்தார்களா?

தொலைபேசிக்கு முன்னால் மக்கள் தொலைதொடர்பு நடத்தாமல் இருந்தார்களா?

ரிலயன்ஸ் வருவதற்கு முன்னால் மக்கள் கறிகாய் கடை இல்லாமல் இருந்திருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது வினோதம்!!! தங்கள் உவமை சிறிதும் பொருத்தமில்லை.

ரிலயன்ஸ் மற்றும் வால்மார்ட் கம்பெனிகள் "விளைநிலம் முதல் வீடு வரை" என்ற குறிக்கோளுடன் விவசாயிகளுக்கு பயிரட ஏற்பாடு, பயிர்களை பாதுகாக்கி அவற்றை தரமாக எளிதாக சந்தைக்கு கொண்டு வர ஏற்பாடு என்று பின்புல ஏற்பாடுகளை செய்கின்றன.

சந்துமுனை வியாபாரி செய்வானா?

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தகுந்த ஏற்பாடு பதனப்படுத்துதல் இல்லாமல் வீணாகும் விளைபொருள்கள் எத்தனை கோடி மதிப்பு தெரியுமா? இவை இம்மாதிரி பெரும் வியாபாரங்களால் குறையும்.

இவை வருவது - முதலில் விளைஞர்களுக்கு மிக்க லாபம். இரண்டாவது நுகர்வோருக்கு மிக்க லாபம். சந்துமுனை வியாபாரிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. உடனடியாக கொஞ்சம் பிரச்சனைகள் இருந்தாலும் நாளடைவில் அவை மறையும் என்று நான் நம்புகிறேன்.

தங்கள் பதிவு கருத்தை நான் முழுதுமாக மறுக்கிறேன்.

நன்றி

புத்தகப் பிரியன் said...

ஜயராமன் ,

மக்களுக்கு கல்வி, மருத்துவம் , குடிநீர், வேலை எதைவும் செய்து தர வக்கில்லாத அரசாங்கம் , மக்கள் தாங்களே முயன்று வாழ்வதற்கு ஏற்படுத்திய சிறுகாய்கறி கடைகளை அழித்து லட்சக்கனக்கான மக்களை குப்பையாக வீசியெறிகிறது, என்னடா என்று கேட்டால் சம்மந்தமில்லாமல் உவமை அது...இது.... என்கிறீர்கள்.

அவன் 14 கடைகள் திறந்து இருக்கும் போதே கோயம்பேட்டில் 40 % வியாபாரம் குறைந்து விட்டதுயா .

//இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தகுந்த ஏற்பாடு பதனப்படுத்துதல் இல்லாமல் வீணாகும் விளைபொருள்கள் எத்தனை கோடி மதிப்பு தெரியுமா? இவை இம்மாதிரி பெரும் வியாபாரங்களால் குறையும்.
//

வீணாக போவது உண்மை, அதற்கு அரசே கிடங்கை ஏற்படுத்தி கொடுக்கனுமா ? இல்லை கோடிக்கனக்கான சிறுவியாபாரிகளின் வாழ்வாதரத்தை அழித்து ரிலயைன்ஸிடம் கொடுக்கனுமா ?

வெளியீடை வாங்கி முழுமையாக படித்து முடிந்தால் மறுக்கவும்.

Anonymous said...

அன்பு ஜயராமன் அவர்களே,

எப்பொதும் எந்த தொழிலிலும் நிறைய போட்டி இருந்தால் தான் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும். அதை விட்டு மோனோபோலியாக ரிலையன்சு மொத்த தொழிலையெ தன் கையில் வளைத்துக் கொண்டால் ஏழை மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். அவன் ஒருவன் தான் விலை நிர்னயிப்பான். அது மட்டுமல்ல் அவன் ஒருவன் மட்டுமே மொத்தக் கொள்முதல் சய்வதால் அவன் தான் கொள்முதல் விலையும் நிர்னயிப்பான். இதை பங்கு சந்தையில் விட்டு கன்ட படி விலையேற்றம் லாப வெறியே நோக்கமாகிப்போகும். எனவே இவனை வனிக, வியாபாரிகள் மட்டுமால்ல் நம் போன்ற நடுத்த்ர வர்கமும் சேர்ந்தே துரத்தி அடிக்க வேன்டும்.

புத்தகப் பிரியன்-க்கு வாழ்துக்கள். கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.
இப்படிக்கு திப்பு சுல்தான்

Anonymous said...

I don't know why there is lots of opposition for Reliance and Walmart. Already there are few chain of stores are operating all over the country such as Spenser, Subiksha etc.

I don't think some one question them or some one told they are spoiling the other business people.

Let them to come, finally you and me are spending our money, If these chain of stores reduce the price we all will welcome, if not we will find some one who gives us for lower price.

End of the day who ever gives better product and better price can survive in this world.

It is a matter of minute to switch over from Reliance to local vendors.

said...

குளிர்பதன பெட்டியை விட்டு வெளியே எடுத்து வைத்தால அரை மணிநேரத்தில் கருகிபோகும் ரிலையன்ஸின் பிரஷ்சான காய்கறிகள் குறித்து ஏற்கனவே ஊரெல்லாம் நாறிக்கொண்டிருக்கிறது.. எந்த ஒரு தொழில்நுட்ப வசதியுமே இல்லாமல் நேற்று விளைவித்த காய்கறி நாளை அழுகிவிடுமே என்ற நெருக்கடியில் இன்று விற்கிறானே நமது வியாபாரி அதுதான் பிரஷ்சான காய்கறி, மாறாக புழலிலுள்ள தனது கிடங்குக்கு ரிலையன்ஸ் எடுத்துவந்து அதனை சில நாட்கள் குளிர்பதன பெட்டியில் வைத்திருந்து பளபளப்பாக துடைத்துவிற்றால் அது பிரஷ்சான காய்கறியா? விலை குறைத்து கொடுக்கிறானாம்.. சந்தையில் போட்டி இருக்கும் வரைதான் அதன் காரணமாக விலை குறைவாக இருக்கும் என்பதை ஜயராமன் போன்ற அறிவாளிகள் ஏன மறந்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்று கேட்பதுபோல நமது கண்ணுக்குமுன்னாலேயெ இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் இருக்கிறது அதுதான் கோகோ-கோலா.. காளிமார்க், கோல்ட்ஸ்பாட் போன்ற நமது குளிர்பானங்கள் 200ml 5ரூபாய்க்கு விற்று கொண்டிருந்த போது கோகோ-கோலா 300ml 3.50க்கு விற்றது.. இன்று கோகோ-கோலா 200mlலாக குறைக்கப்பட்டுவிட்டது விலை 7ரூபாயாக ஏற்றப்பட்டுவிட்டது காரணம் என்ன? காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர், கோல்ட்-ஸ்பாட் ஒழிக்கப்பட்டுவிட்டது... நாளை இதே நிலைதான் நமது தரைகடை தள்ளுவண்டி வியாபாரிகள் ஒழிக்கப்பட்டவுடனும் ஏற்படும்.. இப்படி விற்பனை எனும் ஒற்றை முனையை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம உற்பத்தி விவசாயம் எனும் இன்னொரு முனையை கைப்பற்றிக்கொள்ள துடிக்கின்றன வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களும்.. சரி இவரகள் வருவதால் இவர்கள் ஏற்படுத்தி தரும் ஒப்பந்த விவசாய(contract farming) வசதிகளால் விளைஞர்கள் செழித்விடுவார்களா? இதோ IIMன் CENTER FOR AGRICULTURE MANAGEMENT அதற்கான பதிலை தருகிறது...

"ஒப்பந்த விவசாயமென்பது தன்னுடைய இலாபத்தை பெருக்குவதற்காக விவசாயத்தில்
நடக்கும் முதலாளித்துவ ஊடுருவல்(CAPITALIST PENETRATION)
விவசாயவணிக(AGRIBUSSINESS) நிறுவனங்கள் மூலமாக விவசாயத்தில் நடக்கும்
சுரண்டல்"

ஆக உற்பத்தி, விற்பனை இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதால் முதலில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் ஒப்பந்த கூலிகளாக மாற்றப்பட்டு அவர்கள் சுரண்டப்படுவார்கள், அவர்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விளைவித்த பொருட்களுக்கான விலையும் குறைக்கப்படும்.. நுகர்வோரும் விலையேற்றம் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்...

இல்லையில்லை இதனால் நன்மைதான் ஏற்படும் என்று ஜயரமான் போன்றவர்கள் சொல்வார்களேயானால் அதனை அரசாங்கமே செய்யலாமே என்பதுதான் எங்கள் கேள்வி... இன்று சென்னையில் சின்னம்மை பரவிக்கொண்டிருக்கிறது அதற்க்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை, நாய்கடிக்கு மருந்து இல்லை, எங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கவழியில்லை... வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு எங்கள் சொந்த தேசத்திலேயே வாழ வக்கில்லாதவர்களாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் அரசு ரிலையன்ஸை அழைத்துவந்து மக்களுக்கு பிரஷ்சான காய்கறிகள் தரவேண்டுமென்று இறங்கியிருக்கிறது இதனை வெளிப்படுத்தும் கீழ்காணும் வரிகளை வசதியாக மறைத்து விட்டு ஜயராமன் அவர்கள் உவமை என்று புலவர் பட்டய மாணவர் போல புலம்பித்திரிகிறார்....

//நன்கொடை என்று கொள்ளையடிக்கின்றன தனியார் பள்ளிகள்; புதிதாக அரசுப் பள்ளிகள் துவங்குவது இல்லை, இருக்கின்ற பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை.


கழுத்தில் கத்தி வைத்துப் பணம் பறிக்கின்றன தனியார் மருத்துவ மனைகள்; அரசு மருத்துவமனைகள் இல்லை. இருக்கின்றன மருத்துவமனைகளிலும் மருந்தில்லை. சின்னம்மைக்குத் தடுப்பூசி இல்லை, நாய்க்கடிக்குக் கூட மருந்தில்லை.

போதுமான பேருந்துகள் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வக்கில்லை. கோடை வந்தால் குடிநீரில்லை, கொசுவை ஒழிக்கத் துப்பில்லை. அவசரத்துக்கு ஒதுங்குவதற்குத் கூட சாலையோரங்கிளில் கழிப்பறை இல்லை.

இவையெதற்கும் எதுவும் செய்ய வக்கில்லாத அரசாங்கம் "மக்களுக்கு பிரஷ்ஷாகக் காய்கனிகள் கிடைக்கவில்லையே" என்று ரொம்பவும் கவலைப்பட்டு "ரிலையன்ஸ் பிரஷ்ஷை" அழைத்து வந்திருக்கிறது.//


ஸ்டாலின்

Anonymous said...

Looking at it, Reliance is replacing the business of the small street vendors,
this would be admissible only if the Government provide sustainable alternative employment conditions to all the affected small-size vendors, I dont see any iota of consideration given to their future by the government or by Reliance.
2) Also when you have 100's of street vendors, when they procure their produce, you have atleast 10's of intermediate agents, WHAT happens with Reliance, they'll eat-up everyone's share, what will they do for living?

By nature Businesses just care about Revenue, but what about the Government, It's not a business right?

Anonymous said...

பெயர்: அசுரன்

பெயர் காரணம்: சில ஆயிரம் வருட பொருளாதார, கலாச்சார அடக்குமுறைக்கெதிரான
அடையாளமாக எனது எழுத்துக்களை முன்னிறுத்தி இன்று அந்த அடக்குமூறையும்,
அதற்கெதிரான யுத்தமும் தீர்மானகரமான ஒரு நிலையை நோக்கி சென்று
கொண்டிருப்பதை பிறருக்கு குறிப்பால் உணர்த்தும் பெயராக இந்த அசுரன்.
பார்ப்ப்னியத்தின் பரம்பரை எதிர் என்ற அடையாளத்துக்காகவும்.

வயது: சுமார் ஒரு 27 இருக்கும்.

கல்வி: Under Graduation (Marxian Phiolospophy), Diplomo (Marxian
Economy), Post Graduation (Marxian Socio Economy) தற்போது படித்துக்
கொண்டிருக்கிறேன்.

பணி: அரசியல் விழிப்புணர்வுக்காக, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு
அவற்றை இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

தமிழ்மணத்தை தாண்டி திண்ணையில் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளும்,
கீற்றுவில் ஒரு சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இது தவிர சில
குழுமங்களில் எழுதி வருகிறேன். இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது
இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும்,
புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும்
நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை
கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து
கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி
இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து
ஆரம்பித்தது. இந்த நோக்கத்தை கடந்து எழுதும் தேவை இன்று வரை
ஏற்ப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இன்னும் கிட்டவில்லை.

கம்யுனிச குடும்ப பின்னணியில் பிறந்தாலும் கூட எனது கல்லூரி இறுதி ஆண்டு
வரை என்னை கம்யுனிஸ்டு என்று பிறர் சொல்வதை மறுத்தே வந்துள்ளேன். ஏனேனில்
எனக்கு அப்பொழுது கம்யுனிசம் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும்
இருந்திருக்கவில்லை அந்த காலத்தில். பிறகு, வெகு சன ஊடகங்களில் உண்மைக்கு
மாறாக, யாதார்த்ததில் நான் பார்க்கும், அனுப்விக்கும் ஒரு உலகத்திற்க்கு
மாறாக பொய்யான சித்திரத்தையே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தும் முரன்பாடு
எனக்குள் ஒரு தேடலுக்கான வித்தை ஊன்றியது. மக்களை, அவர்களீன் வாழ்க்கையை
யார் பேசுகிறார்கள் என்ற கேள்வியும், அப்படி பேசாமலேயே அந்த மக்களை
ஊடகங்கள் சுரண்டுவது குறித்த கோபமும் இந்த தேடலின் விதைகளாக இருந்தன.

அந்த தேடல் மக்கள் பிரச்சனைகளையும் ஊடகங்களின் மக்கள் விரோத தன்மையையும்
புரிந்து கொளவதில் வந்து நின்றது. இந்த நேரத்தில்தான் கம்யுனிசம்
அறிமுகமானது. கம்யுனிசத்தை கற்றுக் கொள்வதற்கு மனரீதியாக தயாரான
நேரத்தில் கம்யுனிசம் அறிமுகமானது நல்ல விசயம்தான்.

இங்கு எழுதும் பிறரைப் போல எனக்கு இலக்கியத்திலோ அல்லது இலக்கணத்திலோ
அதிக அறிமுகம் கிடையாது. எனது வாசிப்பை எனது கேள்விகளே தீர்மானிக்கின்றன.
எனது கேள்விகள் நடைமுறைப் பிரச்சனைக்கு பதில் தேடுவதாக இருப்பதால்
அதற்க்கு தோதானவற்றையே வாசிக்கிறேன். வரலாறூ, பொருளாதாரம், அரசியல்,
தத்துவம் இவைதான் நான் அதிகம் வாசித்தவை. கலை இலக்கிய வாசிப்பனுபவம் கூட
இந்த தேவைக்கு உட்பட்டவைதான். ரசனைக்காக என்று வாசிக்க தோன்றவில்லை.
தமிழ்மண அனுபவம் எனக்கு நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்த அனுபவமாக மனதில்
நிற்கிறது. எனது நிலைப்பாடுகளின் மீது வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகள்
புதிய விசயங்களை கற்றுக் கொள்ள உதவின. ஆயினும், தமிழ் மண செயல்பாடுகள்
என்னிடம் ஏற்படுத்திய நெகடிவ் விளைவுகளையும் நான் குறீபிட்டே தீர
வேண்டும்.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும்
ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.
இவற்றினால் நானும் பாதிக்கப்பட்டேன். மீண்டு வந்தேன். எனது இந்த கெட்ட
அனுபவங்களை இங்கு குறிப்பிடுவதன் மூலம் சக வலைப்பதிவர்கள் இந்த
பிரச்சனைகள் குறித்த எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என்றூ
நம்புகிறேன். குறிப்பாக சமீபகாலத்தில் கம்யுனிசம் குறித்தும், முற்போக்கு
அரசியல் குறித்தும் எழுத வந்துள்ள பல இளம் வலையுலக தோழர்கள் இந்த
பண்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ப்தே இங்கு
வெளிப்படையாக இவற்றை அறிவிப்பதின் நோக்கம்.

வாழ்த்துக்கள்,
அசுரன்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •