பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Monday, January 8, 2007

தமிழ் மக்கள் இசை விழா



தமிழ் மக்கள் இசை விழா
----------------------பதினான்காம் ஆண்டு


மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டுப்
படையெடுப்பிற்கெதிரான போர் முழக்கம்.


பிப்ரவரி 24, 2007
சனிக்கிழமை

தஞ்சை-திருவள்ளுவர் திடல்

காலை : கருத்தரங்கம்
மாலை : கலை நிகழ்ச்சிகள்

காலனியாதிக்க எதிர்ப்பு மரபு !
மற்காலனியாக்கம் எதிர்த்து முழங்கு !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு
எதிரான சுதந்திரப் போர் ,
தென்னகத்தில்தான் முதன்முதலில் மூண்டெழுந்தது.
திப்பு, மருது , கட்டபொம்மன், ஊமைத்துரை.
சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, தூந்தாஜி வாக் என
எண்ணற்ற வீரர்கள் இந்த விடுதலைப் போரில் உயிர் துறந்திருக்கின்றனர்.

இது மன்னர்களும் படைவீரர்களும் மட்டும் நடத்திய போர்
அல்ல; ஆயிரக்கணக்கான மக்களும் விவசாயிகளும்
பங்கு கொண்ட மாபெரும் மக்கள் போர்.
1800-01 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் நடைபெற்ற இந்தப்போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.
ஆனால் பெருமை மிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.

1806 வேலூர் சிப்பாய் புரட்சி என்பது இந்த முதல்
சுதந்திரப் போரின் வீரமிக்க முடிவுரை. அந்த வீரம் செறிந்த
வேலூர் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு.

வட இந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பற்றிப்
படர்ந்து ஆங்கிலேய அரசையே அலறவைத்த 1857
சுதந்திர போருக்கு இது 150ஆம் ஆண்டு.

வ.உ.சி யின் 'சுதேசிக் கப்பல் கம்பெனி'
துவங்கப்பட்டதற்கு இது நூற்றாண்டு.
விடுதலைப் போரின் விடிவெள்ளி, பகத்சிங்கின்
பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டு.

நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய
மறுகாலனியாதிக்கம் இன்று நம் நாட்டை அச்சுறுத்திக்
கொண்டிருக்கும் சூழலில், அன்றைய விடுதலைப் போரின்
வீரமரபை இந்த இசைவிழாவில் நினைவு கூர்கிறோம்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் போன்ற எல்லாத் தரப்பு மக்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.














1 comment:

Arasu Balraj said...

மட்டற்ற மகிழ்ச்சி தோழர்...
இசை விழாப் பிரசுரத்தை முழுமையாக unicode செய்தால் (ஓவியங்களோடு) நன்றாக இருக்கும்.
forwrd செய்ய வசதியாகவும் இருக்குமல்லவா?
இது எனது தாழ்மையான கருத்து.
தொடரட்டும் உங்கள் பணி!

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •