பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, April 1, 2007

"இயேசு அழைக்கிறார்"










நான் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கமாட்டேன் ! காணிக்கை கொடுத்துவிட்டால் , செய்த பாவம் கரைந்துவிடும் என்பது மாபெரும் மோசடி" - என்று பாதிரியார் மார்ட்டின் லூதர் எதிர்ப்பு முழக்கமிட்டார்!

அவர் குரலைக்கேட்டு ஐரோப்பாவே அதிர்ந்தது !

பக் 8





இந்த நாட்டின் சமூகக் கொடுமையால் வயிறு காய்ந்த, தலைகாய்ந்த மக்களைப் படம் பிடித்துக் கொண்டு , வெளி நாட்டிலே காட்டி "இந்தப் பிச்சைக்கார மக்களிக்கு உதவுங்கள் " என்று கேட்டு. லட்சம் லட்சமாக வாங்கி , வாங்கி பணத்தை கொண்டுவந்து , மாடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்கிற இவர்களையா இயேசு அழைப்பார்?

பக் 12




இன்றைய உலகத்தில் வாழும் 600 கோடி மக்களில் சகோதரன் தினகரனை மட்டுமே இயேசு தேர்ந்தெடுத்து, இவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஓட்டல்களைத் தேடிப் போய் காட்சியளிக்கிறார், மீதி உள்ள 599 கோடியே, 99 லட்சத்து, 90999 பேரும் தினகரனைப் போல இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல என்று இயேசு நினைக்கிறார் என்றால் , இது இயேசுவையே தினகரன் அவமானப்படுத்தும் செயலா? இல்லையா?


பக் 16


மலைகளையும், மாநதிகளையும், கடலையும் படைத்த கர்த்தர், கேவலம் ஒரு பல்கலைக் கழகத்தை உண்டாக்க தினகரனிடம் கெஞ்ச வேண்டுமா? என்னெ, தினகரனின் வல்லமை! தினகரனின் துணிச்சல் !


பக் 22


உலகத்தில் பல லட்சம் பேர் இவரால் நோய் நீங்கி சுகவாழ்வு வாழ்கிறார்கள் என்றால், இவர் ஏன் தனக்கு " கிட்னி ஆப்ரேஷன்" செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார்?


பக் 34



அப்படிப்பட்ட நீர், உமது அற்புத சுகமளிக்கும் ஜெபத்தை செய்து கொண்டு, பொதுமேடையில் மின்சாரக் கம்பியைத் தொடுவதற்குச் சம்மதிக்கிறீரா?




உமது ஜெபத்தால் குருடன் விழிப்பான் , ஊமை பேசுவான் என்றால் , உமது ஜெபத்தால் மின்சக்தியும் கட்டுப்படும் தானே ?


மின்சாரகம்பியைப் பொது மேடையில் தொட்டு உமது சரீர , ஆத்மீக அற்புதத்தைக் காட்டினால் உம்மைக் கர்த்தரின் சக்தி படைத்தவர் என்று ஒப்பலாம் !


பக் 37





சகோதரன் தினகரனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அதற்காக 1985-ல் அமெரிக்கா போய் கிட்னி ஆபரேஷன் செய்து கொண்டார் என்று செய்தி வெளியாயிற்று.


ஆனால் , தினகரனோ அப்படி எந்த நோயும் தனக்கு இல்லை என்றும், ஆப்ரேஷன் எதுவும் நடக்கவில்லை என்றும் மேடைக்கு மேடை மறுப்புச் சொல்லி வந்தார்.


ஆனால் , 21-5-1986 அவர் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பயங்கர கார் விபத்து போது தினகரனின் மகன் பால் தினகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டியின் போது -


"என் தந்தை சென்ற ஆண்டு கிட்னி ஆப்ரேஷன் செய்து கொண்டார்" என்று உண்மையைச் சொல்லிவிட்டார்.


"எல்லாருக்கும் நோய் போகஜெபிக்கும் தினகரனுக்கே மகப் பெரிய நோய் ஏன் வந்தது ? " - என்று மக்கள் கேட்டு விடக் கூடாதே என்ற பயத்தில் தான், தினகரன் தனது நோயை பற்றி பொய் சொல்லி வந்திருக்கிறார்.




பக் 89

வங்கிப் பணியை உதறிவிட்டு "இயேசு அழைக்கிறார்" கூட்டங்களில் கோடீசுவரரான டி.ஜி.எஸ்.தினகரன், 1962-இல் இயேசுவை 3 மணி நேரம் கண்டாராம் ! 1981-இல் ஒரு தேவதூதன் காருண்யா பல்கலைக்கழகத்தின் வரைபடத்தைக் கொடுத்தானாம் ! ஒரு லட்சம் பேர் கூடுகின்ற நற்செய்திக் கூட்டங்களுக்குத்தான் தினகரன் போவாராம் ! அங்கே இவரது ஒலி-ஒளிப் பேழைகள் மட்டும் விற்கப்படுமாம் ! தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பதற்கு 1000 ரூபாய் கட்டணமாம். மனைவி, மகன், மருமகள், பேரன் - பேத்தி அனைவரும் பெண்கள், வாலிபர், சிறார் கூட்டங்களை நடத்த, பத்திரிக்கை, தொலைக்காட்சி, பல்கலை, ட்ரஸ்ட் என்று பன்னாட்டு நிறுவனமாய்ச் சுரண்டி நிற்கும் பகற்கொள்ளைக்காரன் டி.ஜி.எஸ். தினகரனைத் தோலுரிக்கிறார் நாத்திகம் இராமசாமி.







ஆசிரியர்:நாத்திகம் இராமசாமி

நாத்திகம் வெளியீடு

97/55, என்,எஸ்.கே சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை-- 600 024


விலை 20

8 comments:

Anonymous said...

Nathigam Ramasamy started his political career with Periyar.
Once in a libel case he was fined Rs 500.Periyar paid that money for him. Later joined congress and supported Kamraj and Congress to the hilt.He was editing
a daily Nathigam that was known
for sharp comments and seething
critiques.He was critical of DMK
regime headed by Karunanidhi. He was a vocal supporter of Kamraj and
campaigned for congress in 1971 .After the death of Kamraj in 1975 he was not as active as before. He produced and directed one film in 77/78.It is nice to know that he still writes and publishes.

Anonymous said...

Hi,

If you are supporting this statement given in the book. Please let me know, I have proper answer for every questions

புத்தகப் பிரியன் said...

அனானி அவர்களின் வருகைக்கும் ,தெரிவித்த விவரங்களுக்கும் நன்றி.

மற்ற பதிவு களை படித்தும் பின்னுட்டம் இடவும் .

தங்களை அறிமுக படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்,

புத்தகப் பிரியன் said...

வாங்க stan , தாராளாமாக மறுத்து பதில் இடவும், நாங்க அததான் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

>நான் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கமாட்டேன் ! காணிக்கை கொடுத்துவிட்டால் , செய்த பாவம் கரைந்துவிடும் என்பது மாபெரும் மோசடி" - என்று பாதிரியார் மார்ட்டின் லூதர் எதிர்ப்பு முழக்கமிட்டார்!
அவர் குரலைக்கேட்டு ஐரோப்பாவே அதிர்ந்தது !
பக் 8
>

I just want to know when did Dinakaran sold pavamannippu sheet..?

>இந்த நாட்டின் சமூகக் கொடுமையால் வயிறு காய்ந்த, தலைகாய்ந்த மக்களைப் படம் பிடித்துக் கொண்டு , வெளி நாட்டிலே காட்டி "இந்தப் பிச்சைக்கார மக்களிக்கு உதவுங்கள் " என்று கேட்டு. லட்சம் லட்சமாக வாங்கி , வாங்கி பணத்தை கொண்டிவந்து , மாடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்கிற இவர்களையா இயேசு அழைக்ப்பார்?
பக் 12
>

I can just say God has blessed them. If a person like me who hardly pray expecting a good luxurious life, will God not give his servent who is praying 24 hours for other all the blessings in this world..? I very well know the ministry of Jesus calls ministry accounts. Dinakaran's never take money from thier ministry accounts. There are some people who sepcificall send money to Dinakarran's and not to their minstry, and that money only they are using,..

>இன்றைய உலகத்தில் வாழும் 600 கோடி மக்களில் சகோதரன் தினகரனை மட்டுமே இயேசு தேர்ந்தெடுத்து, இவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஓட்டல்களைத் தேடிப் போய் காட்சியளிக்கிறார், மீதி உள்ள 599 கோடியே, 99 லட்சத்து, 90999 பேரும் தினகரனைப் போல இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல என்று இயேசு நினைக்கிறார் என்றால் , இது இயேசுவையே தினகரன் அவமானப்படுத்தும் செயலா? இல்லையா?

பக் 16
>
Dinakaran never send He is the only person who has/could met god..I can show you 1000's of other who has meet God. Even I ahve myself personally experienced Jesus..What do you say for this..?

பக் 16
மலைகளையும், மாநதிகளையும், கடலையும் படைத்த கர்த்தர், கேவலம் ஒரு பல்கலைக் கழகத்தை உண்டாக்க தினகரனிடம் கெஞ்ச வேண்டுமா? என்னெ, தினகரனின் வல்லமை! தினகரனின் துணிச்சல் !

>
So How do you expect a College to be started..? You want a college to be created just like other mountains in a single day..?..God uses his servent to do his work.

More to follow...

புத்தகப் பிரியன் said...

stan ,

யாரும் 'நான் பாவ மன்னிப்புச் சீட்டு விற்க்கிறேன், ஒன்று 100 ரூபாய்' என்று கூவிக்கூவி விற்ப்பது இல்லை. ஆனால் மக்களின் பாவங்களைப் போக்குவதாகக் கூறிக்கொண்டுதான் பிரச்சாரம் செய்து பணம் கொழிக்கிறார்கள். தினகரன் பாவமன்னிப்புச் சீட்டு விற்க்கவில்லை என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள், ஆனால் அவரது பிரச்சார போஸ்டர்களும், பிரசுரங்களும் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து பல பாவங்களைச் செய்து பாவமூட்டையைச் சுமக்கும் எல்லோரையும் தங்களது பாவமூட்டையை இறக்கிவைக்க அழைக்கின்றனவே இதற்க்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

தினகரனைப் போன்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே சுகபோகமாக வாழலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அப்படியானால் மற்றவர்கள் வாழ அருகதையற்றவர்களா? அப்படியென்றால் இன்றைக்கு சென்னை காய்கறி வியாபாரத்தை நசுக்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை பறிக்க வரும் ரிலையன்ஸ் அம்பானி, சங்கர மடம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ள சங்கராச்சாரி, இன்னும் ஊரைக் கொள்ளையடிக்கும் இவர்களைப் போன்ற மற்ற எல்லோரும் தினகரனை விட அதிகமாக இரட்சிக்கப்பட்டவர்களா?

அசுரன் said...

இயேசுவின் தூதர் - தினகரன் மக்களுக்கு என்ன நற்செய்தி சொல்கிறார் என்று திரு 'so and so' இங்கு குறிப்பிட்டால் அதையும் நாம் சேமமாக விமர்சிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அசுரன்

-L-L-D-a-s-u said...

அருமை ...
புத்தகம் எங்கே கிடைக்கும்?

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •