கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம்; சர்வாதிகாரம் என்றால் அங்கு தேர்தல்கள் இருக்காது: என்ற மகாமட்டமான பொய்யைத்தான் முதலாளித்துவ அறிஞர்களும், பத்திரிகைகளும் பாமர மக்களின் மூளையில் திணித்து வைத்துள்ளார்கள். ஆனால்,சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூட, தேர்தலின் மூலம்தான் சோவியத் யூனியனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை.
1937 மற்றும் 1946 -ஆம் ஆண்டுகளில் தோழர் ஸ்டாலின் தேர்தல்களில் போட்டியிட்டபொழுது, பொதுமக்களின் முன் ஆற்றிய இரு உரைகளைக் கொண்ட இச்சிறுநூல், முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் தேர்தலுக்கும், சோசலிச ரசியா வில் நடைபெறும் தேர்தலுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாடு என்ன? சோசலிச ரஷ்ய மக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை எப்படியெல்லாம் கட்டுபடுத்த முடியும்; கண்கானிக்க முடியும் என்பதை விளக்குகிறது.
புதிய ஜனநாயகம் வெளியீடு
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
விலை ரூ 10
No comments:
Post a Comment