தனியார்மயம் - தாராளமயம் - உலகமயத்தால்
வளர்ச்சியா, வீழ்ச்சியா?
இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை
************************************************************
நெடுமரமாய் வீழ்ந்து கிடக்கிறது மக்களின் வாழ்க்கை. முளைத்தெழுகின்றன ஓட்டுண்ணிகள். பத்து சதவீத பணக்காரர்களுக்கான இந்தியா ஒளிர்கிறது. வண்ணக்குடைக் காளான்களாய் மினிக்கிறது.
வாங்கும் சக்தியுள்ளவனே வாழத்தகுந்த இந்தியன்; ஏங்கும் சக்தியுள்ள்வர்களே இறந்து போங்கள் - என ஆணையிடுகிறது உலக வங்கி.
நாட்டை விழுங்கும் ஏகாதிபத்தியங்களை நக்கிப் பிழைக்க முடிந்தவனே நாலும் தெரிந்த குடிமகன்; அவர்கள்தான் மக்கள்; அவர்களே தேசம். நீயே கடவுள்; நீயே சகலமும் என ஒளிர்கிற இந்தியாவைப் பார்த்து நம்மையும் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்கின்றன காட்சி- செய்தி ஊடகங்கள்.
பொருளாதாரத்தை அலசிப் பார்த்தால் வளர்ச்சியின் வரைபடக் கோடு யாருக்கானது என்று புரியும். வீழ்ச்சியின் ரேகைகள் உழைக்கும் மக்களின் உள்ளங்கையில் ஓடுவது புரியும்.
ஏகாதிபத்திய எடுபிடிகளின் புள்ளிவிவர சதவிகித சதிராட்டங்களைத் தோலுரித்து இருண்ட இந்தியாவின் உண்மை நிலையை இந்நூல் படம் பிடித்துக் காட்டும்.
பக்கங்கள் 156
விலை ரூ60
புதிய ஜனநாயகம் வெளியீடு
கிடைக்குமிடம்
------------------------
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
தொலைபேசி எண் : 044-28412367
No comments:
Post a Comment