பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, August 1, 2007

"புதிய ஜனநாயகம்" ஆகஸ்ட் 2007 இதழ்

..
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நீர்க்குமிழி பெருத்தால்...
------------------- தலையங்கம்
"எந்தவிதமான அதிகார வர்க்கத் தடைகளுமின்றி, அந்நிய மூலதனத்தையும், அதி உயர் தொழில் நூட்பத்தையும் இறக்குமதி செய்வது; ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அந்நியச் செலவாணி ஈட்டுவதை உயர்ந்துவது; வேலை வாய்ப்பைப் பெருக்குவது" ஆகிய நோக்கங்களுக்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்குவதாக இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால்,சிறப்பு பொருளாதார மண்டலங்களால், இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றன.
..
நக்சல்பாரி 'அபாயம்' அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?

அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்ந்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டுமாம். ஆனால் ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம் !


'நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது 'தீண்டாமை ஒழிப்பு', 'லஞ்ச ஒழிப்பு', 'மதவெறி ஒழிப்பு', நடவடிக்கையில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலையவேண்டிய தேவையே இல்லாமல் கண் முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?


'நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதாட முடியாது. நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டன் எழுப்பும் அரசியல் கேள்விக்கு கூட எந்த ஓட்டுப் பொறுக்கித் தலைவனாலும் பதில் சொல்ல முடியாது. நக்சல்பாரிகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. எனவேதான் அச்சுறுத்துகிறது. அவதூறு செய்கிறது. மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது.


மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும், தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி மக்களின் சார்பாகப் புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளார்கள் 'ஒண்டிக்கு ஒன்டி' நடத்தும் சண்டையும் அல்ல. ஆனால் மக்களுக்கு விடுதலை 'வழங்க பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதம் இப்படிதான் கருதிக் கொள்கிறது.


உண்மைதான் ஆளும்வர்க்கத்தின் அடியாட்படையான அரசு எந்திரமும் அதிரடிப்படையும், மக்கள் அனைவரின் பொது எதிரி எனபதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அந்த எதிரிப்படை தன்னை நாயகனாகச் சித்தரித்துக் கொள்ளவும், தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் மாவோயிஸ்டுகளின் இந்த நடவடிக்கை எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது புரட்சிக்கு ஏற்படும் இழப்பு என்பதை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா என்பதுதான் கேள்வி.

அடுத்தத் தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு !


அரசியல் கொள்கைகள், முழக்கங்கள், போராட்டங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி சேர்க்கைகளில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் பா.ம.க. இராமதாசு நம்பத் தகுந்தவர் அல்ல என்று வன்னிய மக்கள் பலருக்கும் நன்கு தெரியும்.


"என் சொந்தக் காசை வைத்துத்தான் இயக்க வேலை செய்வேன்; அமைப்பிடமிருந்து ஒரு சல்லிக்காசு கூட வாங்க மாட்டேன். நானோ எனது குடும்பத்தினரோ எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டோம்; அப்படிச் செய்தால் என் கையை வெட்டுங்கள்" என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் சவடாலடித்த இராமதாசு. தனது மகன், மனைவி, மருமகள், பேத்தியைக் கூட கட்சி மற்றும் துணை அமைபுகளின் பொறுப்புகளில் இருத்திக் கொண்டார்.


இலஞ்ச ஊழல் செய்து கருப்பு பணத்தைக் குவிப்பதில் வாழப்பாடி இராமமூர்த்தியோடு அவர் பங்காளிச் சண்டை போட்டு நாடே நாறியது. கருணாநிதி,ஜெயலலிதா கட்சிகளைப் பல பிரச்சினைகளிலும் விமர்சனம செய்தபோதும், அவர்களது குடும்ப அரசியலை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, ஏன்? பா.ம.க வே இராமதாசின் குடும்ப அரசியல் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது; அதற்காகதான் அவரது வன்னிய சொந்தகளாகிய தீரன் போன்றவர்கள் கூடத் தூக்கியேறியப்பட்டார்கள் எனபதை இன்னும் பா.ம.க வில் உள்ள பிழைப்புவாதிகள் தவிர, அனைவரும் அறிவர்.

..
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா? சாதி வெறியர்களின் குலதெய்வத்துக்கு வக்காலத்து வாங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சீரழிவு.

..
ஏற்கெனவே இராமதாசுடன் 'தமிழ்ப் பாதுகாப்பு' கூட்டணி அமைத்து வன்னியர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் 'காப்பாற்றி' விட்டார்கள். இப்போது தேவர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் 'காப்பாற்ற' போர்த்தந்திரம் வகுக்கிறார்கள் போலும் நல்ல முன்னேற்றம்தான் !

..
சிங்கூர்: சி.பி.எம்-இன் கிரிமினல் அரசியல்

புரட்சி பேசும் சி.பி.எம் கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவ கட்சியாக - பாசிச பயங்கரவாதக் கட்சியாகச் சீரழிந்து விட்டது. சி.பி.எம் கட்சியும், ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டுருந்தால், கேரளத்திலும் மே.வங்கத்திலும் நடந்துள்ள அண்மைக்கால நிகழ்வுகளே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்து விடும்.

..

மேலும்

  • காசுமீர்: 'தேச பக்தி'யால் மறைகப்படும் சமூக அவலங்கள்
  • பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்
  • வளர்ச்சியில் சீனா: அவலத்தில் தொழிலாளர்கள்
  • ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்கள்
  • அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள் -பத்தாம் பகுதி

(இது கட்டுரையிலிருந்து சில பகுதிகள் மட்டுமே; முழுக்கட்டுரையும் பத்திரிக்கையில் படிக்கவும்.)

புதிய ஜனநாயகம்

மார்க்சிய -லெனினிய அரசியல் ஏடு

தொகுதி: 22

இதழ் 10

ஆகஸ்ட் 2007


விலை ரூ 5

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •