பாரதி தமிழ் சமுதாயத்தில் பெரிய கவிஞனாய் மட்டுமல்லாது, எல்லாவற்றுக்கும் தீர்வு சொன்னவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சீர்திருத்தவாதி. அவன் பேசாத விஷங்களே இல்லை. சாதி, தீண்டாமைக்கு எதிராகப் பதிவு செய்திருக்கிறன் என்றெல்லாம் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர் - பாரதி ஆதரவாளர்கள்.
இந்த விஷயத்தில் பொதுவுடைமைக் கட்சியின் பங்கு அளவிற்குகரியது. அதுவும் ஜீவா போன்றவர்கள் திட்டமிட்டே இதைச் செய்தனர். இன்றும் இவர்கள் , பாரதியின் பார்ப்பனச் சார்புத் தன்மையௌ ஒத்துக் கொள்வதாக இல்லை. மனித விரோத கருத்துகள் ஊறிக் கிடக்கின்ற வேதங்கள், பகவத் கீதை, மநுதர்மம், புராணங்கள் இவற்றின் ஆதரவாளராகவே பாரதி கடைசிவரை இருந்திருக்கிறார் என்பதை ஆதாரபூர்வமான அழகிய நயமான நடையில் தந்திருக்கிறார் வே.மதிமாறன்.
..
அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய "ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்" என்ற நூலில் , பாரதியின் பார்ப்பனப் போக்குப் பற்றி பல்வேறு ஆதாரங்களை தெரியப்படுத்திருந்தார். 'ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி , இந்தியாவை ஆரியருக்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி, பாரதியிடம் நிறைந்து இருந்திருக்கிறது' என்கிறார்.

பெரியார், அம்பேத்தகர் போன்றவர்கள் தம் வாழ்நாளில் சாதி , மதம், புராணங்கள், சடங்குகள் எனப் பார்ப்பனிய சுரண்டலுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, பாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போலி சீர்திருத்த கருத்துகளைத் தன் பாடலில் சொல்லியதை வைத்து 'மகா சீர்திருத்தவாதி, புரட்சிக்காரன்' என்று பெத்தப் புகழ்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இப்படி பாரதி ஆதரவாளர்களையும், பாரதியையும் அம்பலப்படுத்தி வந்த இந்த நூலை, இரண்டாம் பதிப்பாகக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

முதல் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் நீண்ட இடைவெளி இருப்பினும், தற்போது இந்நூலைக் கொண்டு வருவதன் மூலம், பாரதியின் போக்கினை சொல்வதோடு அல்லாமல், பார்ப்பனியச் சிந்தனை - பலர் மூளையில் ஆணி அடித்து உட்கார்ந்திருப்பதை விடுவிக்க உதவும் என்பதாலும் இதனை வெளியிட்டு மகிழ்கின்றோம்.

இந்துத்துவ பார்ப்பனியம் தனது நச்சுக் கிளைகளைப் பரப்பி நம்மில் ஊடுறுவும் இக்காலத்தில் - அதற்கு எதிராக கோடரி போடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
தோழமையுடன்,
ஞா. டார்வின் தாசன்.
ஆசிரியர்: வே.மதிமாறன்
வெளியீடு: அங்குசம் ,
15, எழுத்துக்காரன் தெரு,
காலடிப்பேட்டை,
திருவெற்றியூர்,
சென்னை - 600 019
விலை: ரூ 50
"பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்"
"பண்டிதர்களின் தமிழை பாமரர்களின் தமிழனாக்கினான். அத்தமிழின் கையைப் பிடித்து பாமரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து சேர்த்தான் என்பது வழக்கமாக பாரதிக்கு அவர் சீட கோடிகள் வைக்கும் ஓபனிங் ஷாட். அது உண்மையானால் வயக்காடுகளில், வரப்புறங்களில் ஓங்கிய பனை உச்சியில் விரிந்த கடல் பரப்போரங்களில் ஓயாத உழைப்பினூடே பாடும் பாமரனுக்கு பாட்டெழுதினார்களே. பாட்டைச் சொல்லிக் கொடுத்தார்களே அவர்களெல்லாம் யார்? அவர்கள் கற்றவர்கள் இல்லை, எனவே கவிஞர்களும் இல்லை. அப்படித்தானே.
..
ஆனால், இவர்கள் சொல்வது போல் மக்களுக்காக பாட்டெழுதிய பாரதி எங்கே எழுதினார்? படிப்பு மறுக்கப்பட்டதால் நூற்றுக்குத் தொன்னூறு பேர் தற்குறிகளாக இருந்த ஒரு தேசத்தில் படிப்பாளிகளும், வாசகர்களும் அக்ரஹாரங்களில் மட்டுமே நிரம்பி வழிந்த, சென்ற நூற்றாண்டில் அவர்களையே இலக்கு மக்களாக்கி நடத்திய சுதேசிமத்திரன், இந்தியா, விஜயா பத்திரிகைகளில்...''
..
பதிப்புரையில்
..
ஆசிரியர்: மருதையன்,வே.மதிமாறன்
..
வெளியீடு: குடியரசு பதிப்பகம்
இரண்டாம் பதிப்புநூல்
..
கிடைக்குமிடம்:
******************
12/1, முகமது உசேன் சந்து,
ராயப்பேட்டை, சென்னை 600 014
.பக்கங்கள்: 64 .
விலை ரூ.25.
போன்: 9444337384 டார்வின்தாசன்
..
வெளியீடு: குடியரசு பதிப்பகம்
இரண்டாம் பதிப்புநூல்
..
கிடைக்குமிடம்:
******************
12/1, முகமது உசேன் சந்து,
ராயப்பேட்டை, சென்னை 600 014
.பக்கங்கள்: 64 .
விலை ரூ.25.
போன்: 9444337384 டார்வின்தாசன்
No comments:
Post a Comment