கர்நாடகத் தேர்தல் முடிவு:
குஜராத் பாணி 'மோடி'த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி!
------------ தலையங்கம்
தொழில் வளர்ச்சி:
கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவர்ச்சிவாதம்
----------- அட்டைப்பட கட்டுரை
பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களின் சூறையாடலுக்காக நாளொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மறுகாலனிய 'தொழில் வளர்ச்சி' யைச் சாதிக்கத் துடிக்கும் கருணாநிதி. உலகவங்கியின் திருத்தப்பட்ட மறுகாலனியக் கொள்கைப்படி, இலவச - கவர்ச்சி திட்டங்களால் அதிருப்திக்கு வடிகால் வெட்டும் கருணாநிதி.
மறுகாலனியாக்கத்தால் வாழ்விழந்து நிற்கும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் அறுவடை செய்து ஓட்டுப் பொறுக்க வேண்டும்; மக்களுக்காகத் குரல் கொடுத்துப் போராடுபவரைப் போல காட்டிக் கொள்ள, அடிக்கடி சவடால் அடித்து அறிக்கை வெளியிட்டு அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்க்க வேண்டும்; தமிழகத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக நாடகமாட வேண்டும்; இவற்றின் மூலம் அடுத்த தேர்தல் கூட்டணியிலும் ஆட்சியிலும் அதிக பங்கு கோர வேண்டும் என்பதற்கு மேல் பிழைப்புவாத இராமதாசிடம் வேறு கொள்கையோ, திட்டமோ கிடையாது. அவரது பச்சோந்தி அரசியலைக் கவனித்து வரும் தமிழக மக்கள், இனி அவரை நம்பி ஏமாறவும் முடியாது.
சிறு தொழில்களின் மெளனச் சாவு
-------மூலப்பொருட்களின் விலையேற்றம், டாலர் மதிப்புச் சரிவினால் சிறு தொழில்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளன.
அரசின் முற்றுகை தூள்! தூள்!!
------"எங்களது நிலங்கள் வேண்டுமானால், இறுதிவரை நீஙகள் எங்களிடம் போரிட்டாக வேண்டும்" , என்று பட்னா கிராம மக்கள் போஸ்கோவிற்கு சவால் விட்டுள்ளனர்.
மேற்கு வங்கப் பஞ்சாத்துத் தேர்தல்:
"வன்முறையே வெல்லும்!"
------மார்க்சிஸ்டுகளின் தேர்தல் கொள்கைநவீன் பிரசாத் கொலைதமிழகப் போலீசின் நரபலி------நக்சல்பாரிகள் பற்றி அவதூறுகள் பரப்புவதன் மூலம், அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம்; அரசு பயங்கரவாதத்தை ஏவி விட்டு, நக்சல்பாரிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கனவு காண்கிறார் மு.க. ஆனால் வரலாற்றின் வளர்ச்சி ஆளும் கும்பலின் கற்பனை போல அமைந்து விடுவதில்லையே!
கருத்துரிமைக்குக் கல்லறை
------பினாய்க் சென், அஜய்ம் பிரசாந்த் ராஹி, பிர·புல் ஜா இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அமைப்பு ரீதியான தொடர்பு கிடையாது; ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் இவர்கள் எனபதற்குப் பல ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் அரசோ. " நீங்கள் எங்கள் பக்கம் இல்லையென்றால் அவர்கள் பக்கம்தான்" என்ற ஜார்ஜ் புஷ்ஷின் மொழியில் பதில் சொல்கிறது. இதன்படி பார்த்தால், அரசின் கொள்கையை எதிர்த்து உண்னாவிரதம் இருக்கும் சாதாரணக் குடிமகன் கூட பயங்கரவாதி ஆகிவிடுவான்; நக்சலைட்டு ஆகிவிடுவான்.
இதைவிட முக்கியமாக அரசின் விளக்கம் "மறுகாலனிய எதிர்ப்பு போரில், நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை" என அடித்து சொல்கிறது. முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கும் என்ற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் கனவில் விழுந்துள்ள சம்மட்டி அடி இது.
நீதி கொன்ற மோடி
------ குஜராத் முசுலீம் படுகொலைகளை விசாரித்துவரும் நானாவதி கமிசனைத் தனது கைப்பாவையாக மாற்ற முயலுகிறார், நரேந்திர மோடி.
காசுமீர்: புதைக்கப்பட்ட உண்மைகள்
------காசுமீரில், போலீசாரால் கொல்லப்படும் அப்பாவிகள், அடையாளம் தெரியாத வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டுப் புதைக்கப்படுகின்றனர்.
குப்பையாகிப் போன வாழ்க்கை
------ குப்பையைக் கிளறித் தீனியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.
அக்னி ஏவுகனைப் பரிசோதனை:
சாதனையா? வேதனையா?
------ விலைவாசியைக் கட்டுப்படுத்தி, இந்தியமக்களுக்கு உணவு பாதுகாப்பைத் தர மறுக்கும் அரசு, நாட்டுப் பாதுகாப்பு பற்றி அலட்டிக் கொள்கிறது.
இந்தியத் தரகு முதலாளிகள்:
உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா?
------ அரசின் ஒத்துழைப்போடு, பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம்தான் அம்பானியும், டாடாவும் உலகக் கோடீசுவரக்ளாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
"தனியார்மயம் - தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!"
------- புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அரைகூவல்!
..
சாராயச் சாவுகள் கொலைகாரர்கள் யார்?
..
உள்ஒதுக்கீடு கோரிக்கையும் தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்
..
பெண்களைப் பலி கேட்கும் சாதி கெளவரம்
..
புதிய ஜனநாயகம்
மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு
தொகுதி 23
இதழ் 8
ஜூன்2008
விலை ரூ7
..
மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு
தொகுதி 23
இதழ் 8
ஜூன்2008
விலை ரூ7
..
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே சாலை
(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561




































0 comments:
Post a Comment