பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, April 20, 2007

"உன் அடிச்சுவட்டில் நானும்..."


பிரம்மாண்டமான அமெரிக்க ஏகாதிபத்தியப் படையை வியத்நாமின் மக்கள் படை 25 ஆண்டுகள் விடாப்பிடியாக எதிர்த்துப் போராடி விரட்டிய வீர வரலாறு கம்யூனிச வரலாற்றிலேயே முக்கிய வரலாறு.ஹோசிமின் போன்ற வியத்நாம் மக்கள் தலைவர்களை ; நினைத்துப் போற்றுவது போலவே, நகூயென் வான் டிராய், அவரது மனைவி குயென் போன்ற வீரர்களையும் நாம் மறக்க மாட்டோம்.

அந்த மாவீரன் டிராயின் வாழ்க்கை ஒரு நாவலாக ட்ரான் தின் வான் என்ற நாவலாசிரியரால் வடிக்கப்பட்டது. அதுதான் "உன் அடிச்சுவட்டில் நானும்..." என்ற நாவல். கற்பனை அல்ல. உண்மைக் கதை.

வட வியத்நாம் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விடுவிக்கப்பட்ட காலம். தெற்கு பகுதியில் தேச விடுதலை முன்னணி கட்டுயமைக்கப்பட்டு வடக்கு தெற்கை இணைத்து முழு விடுதலை மக்கள் துடித்தார்கள். அவ்வாறு நடக்ககூடாது என்பதற்காகவே தன் நேரடி மேற்பார்வையில் ரானுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் மக்மாரா தெற்கு வியத்நாம் வந்தான்.



ஆயிரக்கணக்கில் விவசாயிகள் டாங்குகளின் பல் சக்கரங்களில் கீழே தேய்த்து நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். விசாரணைகள் இல்லாமல் பல நூறு போராளிகள் அவர்களது குடும்பங்களும் கொடுஞ்சிறைக்குள் வீசி எறியப் பட்டுத் சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்தார்கள். அந்தக் கட்டத்தில் மக்நமாராவைக் கொல்வதற்கான வேலை பணிக்கப்பட்டு , மக்நமாரா வரும் வசியில் குண்டு வைக்கும் திட்டம் சிறு இழையில் தவறி விட, நகூயென் அமெரிக்க வெறியர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரது மனைவி - குயென்னையும் சிறைக்குள் தள்ளி வாட்டி எடுத்தனர்.
...



நகூயென் , குயென் போன்ற வீரர்கள் எளிய சாதாரண மனிதர்கள். மக்களிடம் பாசம் கொண்ட, நாட்டின் மீது நேசம் கொண்ட, மற்றவர்கள் துயரங்களில் தங்கள் இன்னல்களைக் கரைத்துக் கொண்ட , அந்த நேரங்களில் மற்றவர்கள் எதை வைத்து மகிழ்ந்தார்களோ அதையே பெரு மகிழ்ச்சியாய்ப் போற்றி வாழ்ந்த உறுதி வாய்ந்த மனிதர்கள் வியத்நாம் மண்ணும், மக்களின் - போராளிகளின் செங்குருதிப் பதாகைகளும் கலந்து ஊடாடிய வரலாற்றுப் படிக்கும் போது நம்மால் முடியும் - நம்மாலும் முடியும் என்ற மனித நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. ரத்தமும் சதையுமாக நம்மிடம் பேசும் நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றுகிறார்கள்.


...


டிராய் , குயென் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். மண முடித்து 19 நாட்களே ஆன நிலையில் குயென்னின் வாழ்கையில் ஒரு பெரிய இடி ! டிராய் கைது செய்யப்பட்டு, அடித்துச் சித்ரவதை செய்யப்பட்டு, விசாரணைக்காக போலீசால் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். வீட்டில் எங்காவது வெடி குண்டுகள் உண்டா என்று சோதிக்கிறது போலீஸ்; நகூயென் ஒரு நேர்மையான தொழிலாளி - தனது இனிய நண்பன், காதலன் - அது மட்டுமே குயென்னுக்குத் தெரியும். கட்டுப்படுத்த முடியாமல் குயென் கதறுகிறாள்; அழுகிறாள்.



ஆனால் அவள் எதிரிலேயே நகூயென் நடந்து கொள்ளும் விதம் அவளைச் சிந்திக்க வைக்கிறது. மண வாழ்க்கையின் ஆரம்ப கால இனிய கனவுகளைப் பற்றி நைச்சியமாகப் பேசுகிறான் காவல் அதிகாரி. அந்த இனிய மனம் கமழும் நினைவு நீடிக்க வேண்டும் என்றால் குண்டுகள் எங்கே என்று சொல்லி விட்டால் போதும் என்கிறாள். "எங்கெல்லாம் அமெரிக்க வெறியர்கல் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் வெடி குண்டுகள் இருக்கின்றன, போங்கள்!" என்று சீறுகிறார் நகூயென். அது குயென் வாழ்க்கையில் முதல் பாடம்.


...
சீற்றத்தின் சூடும் , அதன் நியாயமும் அவளது அழுகை என்ற உணர்ச்சியைச் சட்டெனத் தடிக்கிறது, அடித்த நிமிடம் அவள் எதையும் சாதிக்கத் தயாரகிறாள். இந்த மனித ரச வாதங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டப்படுகின்றன நாவலில்.
...

கீழே இருந்து செங்குத்தாக படிகளை கடந்து தண்ணிர் எடுத்துச் சென்று இளம் மனைவிக்குக் குளிக்க உதவுகிறார் நகூயென். வீட்டுக்குள்ளே அழகாகப் பொருட்களை அடுக்கி இல்லறத்தின் முதல் சில நாட்களைப் பெரிய கனவுகளோடு தொடங்கிறாள் குயென். திருமணமான புதிதிலேயே நட்பு, உறவு வீடுகளில் விருத்துக்குச் செல்லும் வழக்கம் வியத்நாமிலும் உண்டு, ஆனால் அந்த ஏறபாடுகள் தள்ளிப் போகின்றன.
..
பழிதடைந்த எந்திரம் ஒன்றைச் சரிபார்க்கும் வேலை இருப்பாதாக கூறி நகூயென் வெளியே சென்று இரவு தாமதமாகத்திரும்புவதும், நண்பர்களோடு வீட்டில் உட்கார்ந்து சிறு கற்களை நகர்த்தி ஏதோ விளையாட்டுப் போல திட்டம் செய்வதும் குயென்னுக்குப் பிடிக்கவில்லை. சண்டை போடுகிறாள்; வீம்பு பிடிக்கிறாள். இது ஆரம்ப கால டிராய்- குயென் வாழ்க்கை.


பிறகு நகூயென் சிறைப்பட்டுச் சித்திரவதைப்படுவதும், சிறைக்குள்ளே சில மாதங்களில் தான் சந்திக்கும் கம்யூனிசப் போராளிகளின் குடும்பங்கள்- அவர்கள்ளின் உறவினர்கள் மூலமாகப் புதியதோர் உலகுக்காகப் போராடும் மக்களின் வாழ்க்கை பற்றி குயென் அறிந்து கொள்வதும், அவருகருகே நகத்தப்பட்டு குயெனின் மாற்றங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
...
நகூயென் ஆரம்பத்தில் குயென்னிடம் சண்டை போட்டது. கடித்து கொண்டது ஏன் என்பது பற்றி சகோதரி எக்ஸ் சிறையில் விளக்குகிறாள். "குயென், நீ ஒரு அப்பாவிப் பெண் உன்னை டிராய் ரொம்பவும் நம்பியிருக்கிறார்; புரட்சிகரமன வேலைக்குத் உனக்கு வழியும் காட்டியிருக்கிறார். சைகோன் (தென்வியத்நாம் தலைநகர்) போன்ற எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிள்ள நகரத்தில் மக்களின் அன்பும், தக்க பாதுகாப்பும் இல்லை என்றால் மிக எளிதாக ரகசிய உளவாளிகள் கையில் பிடிப்பது விடுவார்கள். நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து உணரும் பக்குவம் பெற்ற பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் டிரய் கடிந்து கொண்டுருக்கிறார். அது புரிகிறதல்லவா ?'



பல போராளிகளின் வாழ்க்கை, மக்கள் எதிரிகளை எதிர் கொண்டு போராடிப் பெற்ற அனுபவங்கள் என்று பல பக்கங்களிலிருந்தும் குயென்னுக்கு வாழ்க்கை எடுத்துச் சொல்லப்படுகிறது. சென்ற நாட்களைப் புதிய ஒளியில் பார்க்க ஆரம்பிக்கிறாள் அவள்.

சின்ன வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கக்காரர்களால் சிதைக்கப்பட்ட ஓர் ஏழ்மை வியத்நாமியக் குடும்பத்தில் தாயைப் பறிகொடுத்து - எங்கோ தொலைதூரம் உழைக்கச் சென்று விட்ட தந்தையின் பரிவை, பாசத்தைப் பறி கொடுத்து ஏங்கிய டிராய் பல தொழிலாளிகளின் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து பழகி வாழ்ந்தது பற்றி அறிந்து கொள்கிறாள் குயென்.

கஷ்டங்கள் நிறைந்த புரட்சி வேலைகள், கடமைகளில் தன் சக்தியையும் மனத்தையும் ஒருமித்து ஈடுபடுத்திக் கொண்டே மனைவியை மகிழ்ச்சிப்படுத்தவும் நகூயென் அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவற்றை எண்ணி வியந்து அவரது வாழ்க்கையின் நோக்கத்தை விளங்கிக் கொள்கிறாள் குயென். "


நகூயென்னுக்குப் பல சமயங்கிளில் தடையாக, தொந்திரவாக அல்லவா இருந்துவிட்டேன்" என்று குயென் யோசிக்கிறாள்.டிராயின் நடவடிக்கையில் சம்பந்தப் பட்சிருப்பார்கல் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைக்குள் தள்ளப்பட்ட இருவர் -- நான்கே வயது நிரம்பிய டானும் அவனது பாட்டியும். மெள்ள மெள்ள டான் என்ற அச்சிறுவனின் பின்னணி சிறு காட்சியாக விரிகிறது, தெற்கு வியத்நாமின் மொம்மை அரசாங்கக் கொடியை வணங்க மறுத்து அடித்தே கொல்லப்படுகிறாள் டானின் தாய்; தந்தையோ வாழவே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது; டிராய் தான் டானுக்கு உதவி செய்கிறார்.




தன் அப்பாவைக் காட்டிலும் டிராயைத் தான் அதிகம் நினைப்பான் டான். இந்த ஒரு குடும்பத்தின் கதையே டிராயின் மதிப்பைக் கூட்டி விடுகிறது குயெனிடம்.அதெபோல திருமதி எம். தன் மகளைப் பார்ப்பதற்காகச் சிறைக்கு வரும் அவரை , தான் விடுவிக்கப்பட்ட பிறகு நகூயென்னைத் தேடி வரும் குயென் சந்திக்கிறாள். நட்பு மலர்கிறது. திருமதி எம்.தன் இரண்டு குழந்தைகளை சிறையில் இருப்பதாகச் சொல்வார். ஒன்று அவரது மகள்; மற்றவர் நகூயென்.



குயென்னுக்கு அருமருந்தாகப் பயன்படும் பாடல்களை ஒரு சிறைத் தோழி கற்றுத் தருகிறாள். அதற்காகவே அவளை அடித்துப் போடுகிறார்கள் சிறைக் காவலர்கள். திரும்பவும் செல்லுக்கு(அறை)த் திரும்பிய அப்பெண் மிண்டும் பாடத் தொடங்கி விடுகிறாள். மற்றவர்கள் தடுத்தும் அவள் கேட்கவில்லை. பாடல்களைக் கற்றுத் தருவது அவளுக்குப் புரட்டி வேலை . அவை தைரித்தை ஊட்டக் கூடியவை; உயர்ந்த லட்சியத்தை ஊட்டக் கூடியவை. பாடல்கள்- சிறைக்கு உள்ளேயும், வெளியெ மக்களிடையே வேலை செய்யும் போதும் புரட்சி உணர்வை வற்றா திருக்கச் செய்யும் நீர் ஊற்று.



குயென்னுக்குத் தையலும் பாடலும் கற்றுக் கொடுத்த தோழி "அழவே அழாதே. அதிகமாகப் பாடு" என்று சொல்லிக் கொடிக்கிறாள். "அழ வேண்டுமென்றால் அழு, ஆனால் எதிரியின் முன்னால் மட்டும் அழாதே. அது நமக்குப் பலவீனம்" என்று வீரத்தைக் கற்றுத் தருகிறாள். குயென் அழுவதைக் குறைக்கிறாள்; பிறகு நிறுத்தியும் விடுகிறாள்.

வாழ்க்கைப் பாடங்கள் புரட்டி எனும் தீச்சுவாலையை அவளிடம் ஏற்றி விடுகின்றன, அவனிடம் மட்டுமா? நம்மிடமும்தான்.

"எதிரிகளை வெறுக்கக் கற்று கொள்!" என்பது ஒரு சிறிய பாடம்தான். ஆனால் நம்மிடமே உள்ள அற்பமான, தவறான கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் போன்ற சுமைகளை வெறுத்து, போராடித் தூக்கி எறிய வேண்டியுள்ளது. அது மிகப் பெரிய பாடம். நாவலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் உள்முக விமர்சனம் தோன்றி விடும். "சுகபோக வாழ்க்கைக்காகத் தனது சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கும் ஏவல் நாய்களைப் போல என்னால் வாழ முடியாது!" என்று போலீசைக் காறித் துப்பம் நகூயெனின் சொற்கள் நம்மிடம் . நம் குடும்பத்தின் உள்ளேயும் எட்டிப் பார்க்க முயற்சி செய்யும் நுகர் மொருள் மோகம். அடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடு என்ற அபாய எச்சரிக்கை கொடுக்கும்.



கம்யூனிஸ்டுகளின் உற்றார், உறவினர் நண்பர்கள், நெருங்கி ஊடாடி வாழும் மக்கள் என்று துயரத்துக்கு இடையேயும் மகிழும் மாவீரர்கள் ஒரு தனிக் குடும்பம் போல எதிர்காலக் குறியீடாக வாழ்வ்தை நாவல் பளிச்சென்று சோல்கிறது.



கொரில்லாப் போராட்டங்களிலிருந்து, அரசியல் எழுச்சிப் போராட்டங்கள் , நீண்ட கால் மக்கள் யுத்தம் வரை வியத்நாம் என்னும் போதெல்லாம்,நாவலை பார்க்கும் போதெல்லாம் நினைவில் வரும். அது நூலின் வெற்றி.


அமெரிக்கவெறியன் ஒருவன் ஒரு டாக்சி டிரைவரைச் சுட்டுக் கொன்று விடுகிறான். அந்தச் சவ ஊர்வலம் "அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாகவும் பிறகு அதுவே அமெரிக்க எதிர்ப்பு வாரத்தைத் திட்டமிடும் தூண்டுகோலாகவும் மாறுகிறது. இச்சம்பவத்தைப் பற்றி குயென்னுக்கு கூறுகிறார் நகூயென். வியத்நாமின் லட்சக்கணக்கான விவசாயிகள்- தொழிலாளிகளை இணைத்த அரசியல் இயக்கம் எப்படி நடத்தப்பட்டது என்பதை நாவலை சாட்சியாக வைத்து சாட்சியாக பார்க்கிறோம்.



சாதாரண உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருந்த குயென் போன்ற பெண் பின்னாளில் தன் கனவனின் அடிச்சுவட்டிலேயே ஒரு கம்யூனிசப் போராளியாக மாறுவதை நாவல் செறிவாக உணர்ச்சிக் கட்டங்களாக விவரிக்கிறது.


நமது பகத்சிங்கைப் போலவே சுட்டுக் கொல்லப்படவேண்டிய தண்டனை பெற்ற நகூயென் கண்ணைக் கட்டியிருந்த கருப்புத் துணியைக் கிழித்து எறிந்து கொண்டே "ஓ ! என் நேசத்துக்குரிய மண்ணை, என் நாட்டைப் பார்க்க விடுங்கள் ! " என்று உரக்கச் சத்தம் போடுகிறார்; அமைதியாகச் சாவை எதிர்கொள்கிறார். வீரம் செறிந்த அந்த களஞ்சாவு வியத்நாம் மட்டுமல்ல, உலகெங்கும் பேசப்பட்டது. இன்றும் பேசப்படுகிறது.



அந்த சாவைக் கொடுத்த அமெரிக்க வெறி நாய்களை வெறுத்துக் தூக்கி எறியும் முழக்கங்க்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.



அந்த காட்சியைப் படிக்கும் எவருக்கும் "அத்தகைய அஞ்சாநெஞ்சரின் தோழர்களில் ஒருவராக அந்தக் கம்யூனிச அணியிலே நாமும் ஒருவராக வளர மாட்டோமா? என்ற ஏக்கம் நிச்சியம் எழும்.







***************


வெளியீடு


அலைகள் வெளியீட்டகம்




***************


கிடைக்குமிடம்




கீழைக்காற்று ,


10, அவுலியா சாகிபு தெரு,


எல்லீசு சாலை,


சென்னை 2.

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •