பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, April 6, 2007

"நினைவுகள் அழிவதில்லை"
காலத்தை வென்ற கையூர்த் தோழர்கள்


காதலுக்காகத் தியாகம் செய்த காவிய நாயகர்களுண்டு. போரில் எதிரிகளைத் கொன்றொழித்து மாண்ட வீரர்களுண்டு. மதத்தைக் காப்பதற்குத் தீப்புகுந்து மாண்ட துறவியர்கள் உண்டு. தாய்நாட்டை,தாய்மொழியைக் காக்கும் விடுதலைப் போரில் ஈடுபட்டு, சிறைசென்று தூக்குமேடை ஏறிய வீரத்தியாகிகளுண்டு. ஆனால் 'அடிமைப்பட்ட பாரதத்தின் இருளடைந்த கேரளத்தில்' உழவர்களின் உரிமைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடிப் பச்சிளம் வயதிலேயே தூக்குமேடை ஏறிய மடத்தில் அப்பு, அபுபக்கர்,சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரின் தியாகம் முற்றிலும் வேறுபட்டது.அவர்களின் தியாகத்தின் பின்னே ஏழை எளிய மக்களின் ஏக்கங்கள் நிரம்பியிருந்தன. அபிலாசைகள் நிறைந்திருந்தன, உரிமை முழக்கங்கள் அடங்கியிருந்தன. உழைப்பாளிகளின் ஜனநாயக வேட்கைகள் ததும்பி வழிந்தன.


பசிப்பிணியும், வறுமைத்துயரமும் மொழி கடந்து , நாடுகள் கடந்து அது உலகமெங்கும் நிறைந்திருக்கின்ற இருளாகும். அந்த இருளை விரட்ட இந்நால்வரும் தங்கள் தலைகளை விலைகளாகத் தந்தனர். தூக்குமேடையேறிய இவர்களின் தியாகம் இலக்கியமாகி, மொழி கடந்த பயணத்தை மேற்கொண்டு காலத்தையும் வென்று நிற்கிறது.


இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகல் ஊர்வலத்தை இவர்களின் வழிநடத்திச் சென்றபோது 'ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபிளேடு அந்த ஊர்வலம் கைகலந்தது. அதன் விளைவாக அந்தப் போலீச்காரன் உயிர் துறந்தான்.


அந்தப் போலீஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள் இந்தக் கோட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும்தான் பொறுப்பாளிகள் என்று கூறி செஷன்ஸ் ஜட்ஜ்,அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார். சென்னை ஹைக்கோர்ட்டும் அந்த்த் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது.


இந்நால்வர் தூக்குமேடை ஏறக் காரணமாக இருந்த விவசாய இயக்கத் கதையைக் கன்னடத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் நிரஞ்சனா கன்னட மொழியில் 1955 இல் 'சிரஸ்மரணா' எனும் பெயரில் புதின இலக்கியத்தில் பதியம் செய்தார். மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த கதை முதன் முதலாக மொழி கடந்து கன்னடத்தைக் பற்றி உலுக்கியது. கதைக்களமான கையூர் கேரளத்தின் வடமேற்குக் கடைகோடியில், கர்நாடாகத்தின் தெற்கு எல்லையிலும் அமைந்த ஊர்.
கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது தலைமறைவு நாட்களில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார்.


நினைவுகள் அழிவதில்லை எனும் பெயரில் 1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக தமிழில் வெளிவந்தது.

நிரஞ்சனா

----------------------------------

தமிழில்

பி.ஆர்.பரமேஸ்வரன்

-----------------------------------

சவுத் விஷன் வெளியீடு
விலை ரூ 40

கிடைக்குமிடம்

கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.

1 comment:

அசுரன் said...

வெகு அருமையான புத்தகம் தோழர்,

இன்று நந்திகிராமத்தில் நடந்ததற்க்கு இணையாக அவர்களின் கிராமங்களின் எல்லையில் ஆயுதப் படைகள் மூகாமிடுவதும், அவர்களுடன் ஊர் நிலபிரபுக்கள் உறவாடுவதும் மிக அருமையாக பதிவு செய்யபப்ட்ட புதினம் இது.

நினைவுகள் உண்மையிலேயே அழிவதில்லை.

சிந்தித்த அடுத்த நிமிடம் நமது மூளை முன்பிருந்த நிலைக்கு திரும்புவதில்லை.

அசுரன்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •