பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Thursday, June 21, 2007

ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- I

நன்றி: கேடயம்
****************
“எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பை கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்கு கட்டியம் சொல்ல வரும் பத்திரிக்கைகாரர்களை அடிக்க உதவும்”
-
பாபா படம் வெளியாகியிருந்த போது பலூன் போல பருத்திருந்த ரஜினியின் செல்வாக்கையும், அந்த கழிசடையினுடைய ரசிகர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருந்த புதிய கலாச்சாரத்தின் கட்டுரை மேற்குறிப்பிட்டவாறு கூறியிருந்தது. பத்திரிக்கையாளர்களை மட்டுமே குறி வைத்திருந்த அந்த வரிகளை இன்று பதிவர்கள் வரைக்கும் விரித்துச்செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது..
-
பாபாவை போன்றே இந்த படத்தினையும் ஊதிப்பெருக்கியிருக்கின்றன ஊடகங்கள், இருந்தாலும் போனமுறை போன்று ஊடகங்களின் உசுப்பேத்தல்களை மட்டுமே நம்பி நட்டப்பட ரஜினி தயாராக இல்லை இந்த முறை சங்கரின் கார்டூன் பிரமாண்டத்தையும் ஸ்ரேயாவின் முன்புறத்தையும் பின்புறத்தையும் நம்பித்தான் களமிருங்கியிருக்கிறான் சிவாஜி.. சில சுவரொட்டிகள் விலக்காக எல்லா சுவரொட்டிகளிலும் அரிதாரம் பூசப்பட்ட ரஜினியின் முகம் மட்டுமே காட்சிதர ஸ்ரேயாவோ முழு நிர்வாணத்திற்கு கொஞ்சம் குறைவாக குனிந்தும் நிமிர்ந்து ரசிக கோடிகளை கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிற ார்.
-
ஒரு திரைபடம் வெற்றியடைய இந்த அம்சங்கள் மட்டும் போதுமானது கிடையாது. எல்லாவற்றையும் தாண்டி ஒரு படம் வெற்றியடைவதன் மையமான காரணமே அது எழுந்து நிற்கிற சமூக அடித்தளம்தான். ஒரு திரைப்படத்தின் வரவு சமூகத்தில் தாக்கத்தை செலுத்தினாலும் கூட அந்த காலநிலையில் நிலவும் சமூகத்தை அந்த திரைப்படம் திருப்திபடுத்தவில்லையானால் அது வெற்றியடையாது என்பதுதான் எதார்த்தம்..
-
படம் முழுக்க தேவர் சாதி வெறியை தூபமிடும் காட்சிகளையும் வரிகளையும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் வீண்ஜம்பத்தையும், வன்முறையையும் கைவிடச்சொல்லும் தேவர் மகனின் வெற்றி அதன் கிளைமாகஸ் காட்சியால் அமையவில்லை மாறாக சாதியைத்தை தூக்கிப்பிடித்து ஆதிக்க கருத்தியலின் மூலமாக சமூகத்தை திருப்திபடுத்திய மற்றைய காட்சிகளின் மூலமாகவே அது அமைந்தது..
-
இது அந்த படத்திற்கு மட்டுமல்ல படம் முழுக்க கவர்ச்சி மசாலா காட்டிவிட்டு இறுதிக்காட்டியில் அறிவுரை சொல்லும் துள்ளுவதோ இளமை வரை இதுதான் வெற்றியை தீர்மாணிக்கும் விசயம்.
-
இதனை மறந்தவனாக பாபா வந்ததன் விளைவுதான் பலத்த அடி வாங்கினான். மறுகாலனியாக்கத்தின் விளைவால் விவசாயமும் நெசவும் நொறுக்கப்பட்டு, ஊரெங்கும் கஞ்சித்தொட்டிகள் திறப்பு பட்டினியால் இறப்பு என்ற ஒரு கொடுமையான சுழலில்தான் பாபாவினை கொண்டு மகுடி ஊதிக்கொண்டிருந்தன பத்திரிக்கைகள் ஏழு மந்திரங்களை கொண்டு "மகா அவதார்"பாபாவின் சக்தியை நிருபிக்க மக்களிடம் வந்தான் பாபா.. "மந்திரத்தால் மாங்காய் விழாது" என்று மக்கள் அறியாதவர்களா என்ன? அறிவில்லாத ரஜினி ரசிகர்களின் வெற்று ஆர்பரிப்புகளையும் தாண்டி படம் தோல்வியை தழுவியது. இதனை உணர்ந்து கொண்ட ரஜினி இந்த முறை இதிலும் விழித்துக்கொண்டுவிட்டார் . இந்த முறை தெளிவாக மறுகாலனியாக்கத்திற்கு காவடி தூக்குவதிலும் கருத்தாதரவு செலுத்துவதிலும் முன்னனி வகிக்கும் நடுத்தரவர்க்கத்தை குறிவைத்து இறக்கிவிடப்பட்டிருக்கிறது சிவாஜி. பத்திரிக்கைகளின் மூலமாக ஆளும் வர்க்கம் மறுக்காலனியாக்கத்தை நியாயப்படுத்தி பரப்பிக்கொண்டிருக்கும் பலவீனமான கருத்துக்களையே தனது கதைக்களத்தின் மையப்புள்ளியாக கொண்டுக் களமிறங்கியிருக்கிறான் சிவாஜி.
-
தமது அமெரிக்க அடிமைச் சேவகத்தையும் மோகத்தையும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டையும், சற்று குற்றவுணர்வோடு முனகிக்கொண்டிருந்த நடுத்தரவர்க்கம் இனி தயங்கத்தேவையில்லை அவர்கள் இனி தேசபக்தர்கள் அவர்கள்தான் அன்னியசெலவானியை நாட்டுக்கு அள்ளிக் குவிப்பவர்கள், தன்னை வளப்படுத்திக் கொள்வதன் மூலமாக நாட்டையும் வளப்படுத்தி அமெரிக்க நிலைக்கு கொண்டுவரத்துடிப்பவர்கள் என்று அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.. இந்தியாடுடே போன்ற பத்திரிக்கைகளால் பரப்பப்பட்டிருக்கும் இது போன்ற ஆளும்வர்க்க கருத்துக்களை தனது காட்சி ஊடக்கத்தால் பலப்படுத்தி நியாயப்படுத்தவே சிவாஜி களமிறங்கியிருக்கிறான்..
-
இதனை புரிந்துகொண்டுவிட்ட மென்பொருள் துறையின் நடுத்தரவர்க்க அல்பைகளின் வர்க்க நலன்தான் சிவாஜியின் டிக்கெட்டை 1000 மாகவும் 1500ஆகவும் தீர்மானித்தது.. இந்த விசயம்தான் டாலர் அடிமைகளையும் ஏகாதிபத்திய பூட்ஸ்நக்கிகளையும் சிவாஜிக்கு ஆதரவாக மகுடி ஊதி ஜிகிடி பதிவுகளை போட வைக்கிறது. இந்த நடுத்தரவர்க்க அல்லப்பைகளின் சமூக எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டு அவர்கள் பாக்கெட்டுகளை கொள்ளையடித்ததன் மூலமாக தனது வெற்றியை ஊறுதிப்படுத்திக்கொண்டுவிட்டது இந்த படம்.. மேலும் பாமரர்களின் பாக்கெட்டுகளை குறிவைக்க, ரஜினியின் ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பமும்.. ஸ்ரேயாவின் ஆடை உரித்த உடலும் இருக்கும் போது திரைப்படத்தின் வெற்றிக்கு வேறு என்ன தேவை இருக்கிறது. வெற்றிக்கான காரணம் இப்படி இருக்கும்போது, படத்தினுடைய வெற்றிக்கும் எதிர்பார்ப்பிற்கும் ரஜினி என்னும் காரிய கிறுக்கனுடைய போலி பிம்பமே காரணம் என்று ஏற்கனவே உப்பிப் பெருத்து உடைகின்ற நிலையிலிருக்கும் அந்த பலூனை மேலும் ஊத முயற்சிக்கிறார்கள் ஆனால் அது எதிர்விளைவாக இந்த பணக்கார கிழவனுடைய வயதுக்கு பொருந்தாத ஆட்டத்தையும் தகுதிக்கு பொருந்தாத பெருமையையும் கண்டு மக்களை அருவெறுப்படைய செய்துக்கொண்டிருக்கிறது.
-
படையப்பாவின் முதல்காட்சியில் "என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?" என்று பாடி விட்டு அடுத்து வரும் ஒரு காட்சியில் "சம்ஸ்கிருதம் தேவபாசை அத தப்பா உச்சரிக்க கூடாது" என்று வசனம் பேசி தமிழ் நீசபாசை என்ற ஆதிக்க கருத்தியலை ஆதிக்க வர்க்கத்தின் ஆசன வாயான தன் வாயால் ஒலித்த இந்த நன்றிகெட்டவனை தமிழ் மக்கள் இன்னும் ஒழித்துக்கட்டாமலிருப்பதனாலேயே இவனை தமிழர்களின் தலைவனாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று நினைத்துவிடக்கூடாது, தான் நடத்துகின்ற பள்ளியில் லட்சம்லட்சமாக கல்லா கட்டிக்கொண்டே கல்வி வணிகமாக்கப்பட்டதையும் கருப்புப்பணத்தில் புரண்டு படுத்துக்கொண்டே கருப்பு பண ஒழிப்பை பற்றி பேசும் இந்த காரியகிறுக்கனை விசக்கிருமியை இன்னும் விரட்டாமலிருப்பதனாலேயே மக்கள் இவனை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல..
-
"ரஜினி தலைமுடியின் ரகசியம் என்ன?" "ரஜினி வெள்ளைக்காரன் ஆனது எப்படி" போன்ற ஊடகங்களின் ஒளிவட்டத்தில்தான் உலவிக்கொண்டிருக்கிறான் இந்த கழிசடை. அந்த பத்திரிக்கைகளுக்கு செய்தி தருவதற்கு ஏற்றவாறு விழாக்களில் எல்லோருக்கும் மத்தியில் கண்ணை மூடிக்கொண்டு ஞானி வேடம் போடுவது, இமயமைலை, 2000 வருடமாக வாழும் முனிவர்கள் என்று சரடுவிடுவது என அந்த குப்பைகளில் தன் இடத்தை தக்க வைத்துக்கொள்கிறான்.. நாட்டில் கோடிக்கனக்கான மக்கள், பிள்ளைகளும், பெண்களும் சாலையோரத்தில் படுத்துறங்கும் போது ரஜினி கட்டாந்தரையில் கண்ணயர்ந்ததையே கட்டுரையாக வெளியிட்டு அவனை எளிமையான ஆண்மீகவாதியாக நம்மை நம்பவைக்க முயற்சி செய்யும் பத்திரிக்கைகள் அவன் நடிகைகளோடு கட்டிப்பிடித்து நடனமாடி இளைஞர்களின் சிந்தனையை வக்கிரமாக மாற்றுவதன் முரண்பாட்டை பற்றி எழுதுவதில்லை.
******************************
******************************
(இது தோழர்.ஸ்டாலினின் கேடயம் என்ற தளத்திலிருந்து எடுத்து பிரசுரக்கப்பட்டு உள்ளது)

1 comment:

said...

தோழர்,

இங்கு பதிப்பித்தமைக்கு நன்றி, இந்த கட்டுரையின் துவக்கத்தில் புதிய கலாச்சாரத்தின் வரியை குறிப்பிட்டிருந்தேன் ஆனால் எனது வார்ப்புருவிலிருக்கும் ஏதோ சிக்கலின் காரணமாக் அது தெரியவில்லை எடிட் செய்து போட்டாலும் தெரியவில்லை அதனால் தான் அந்த வரியை பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.. இங்கு அதனை சேர்க்க முடியுமானால் சேர்த்துவிடுங்கள்..
“எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பை கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்கு கட்டியம் சொல்ல வரும் பத்திரிக்கைகாரர்களை அடிக்க உதவும்”

தோழமையுடன்
ஸ்டாலின்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •