பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, July 20, 2007

"ஏழு தலைமுறைகள்" - நாவல்

மனித இன வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாகரிகங்களாகக் கருதப்படும் சிந்து சம்வெளி நாகரிகம், நைல் நதி நாகரிகம், சுமேரிய நாகரிகம் மூன்றிற்கும் இடையே ஓர் ஒற்றுமையுண்டு. இவை மூன்றுமே வெள்ளையர்கள் வாழும் பூமியான அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ பிறந்தவையல்ல.

முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக உலகெங்கிலும் தங்கள் காலனியாதிக்கத்தை நிறுவிய பின்பே அவர்கள் வரலாற்றைத் திரித்து எழுதினர்; தங்கள் துப்பாக்கிகளைக் கொண்டு, உலகெங்கிலும் பிற மக்களுக்கு தாங்கள்தான் நாகரிகத்தைக் கற்பிக்க பிறந்தவர்கள் எனப் பீற்றிக் கொண்டனர்.

இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பேயே கல்லாலான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்திய ஆப்பிரிக்க கருப்ப் இனத்தவரை - உலகின் முதல் மனிதன் அவன்தான் என்றுகூட கூறலாம் - "குரங்குகள் போல் மரங்களில் தாவித்திரிபவர்கள்; கல்வி வாசனையே அற்றவர்கள்" என இழிவுபடுத்தினர், அவர்களை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள்.

இந்த விசயத்தில் நமது நாட்டிற்குள் நுழைந்த ஆரியர்கள் வெள்ளையர்களுக்கு முன்னோடியாகக் கூறலாம். தங்களை எதிர்த்த திராவிடர்களையும் நாகர்களையும் அரக்கர்கள் என வசைமாரி பொழிந்தார்கள் ஆரியர்கள். அடிமைப்பட்ட இனத்தின் உயர்வுகளைச் சிறுமைப்படுத்தியும் அழித்தும் ஒரு மனோவியல் யுத்தத்தை நடத்த வேண்டிய தேவை வென்றடக்கியவர்களின் சுரண்டல் ஆதிக்க நலனுக்கு ஏற்றதாக இருந்தது.

ஆனால், வரலாற்றின் போக்கு என்றைக்குமே ஆதிக்க சக்திகளுக்குச் சாதகமாக இருப்பதில்லை. புதையுண்டு போன மொகஞ்சதாராவும் - ஹரப்பாவும் தோண்டியெடுக்கப்பட்டன; திராவிட இனத்தின் கலாச்சார மேன்மை உலகிற்குத் தெரிந்தது. அதைப் போன்றே, ஆப்ரோ - அமெர்க்கரான அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்", வரலாற்று ஆய்வு நூல்களுக்கு இணையாக , இலக்கியத்தில் வடிக்கப்பட்ட பொழுது, கருப்பின் மக்களின் கலாச்சார மேன்மையை, உற்பத்தி பற்றிய அவர்கள் அறிவை ஆதார்ங்களோடு பறை சாற்றுவதாக அமைந்தது.

"..(தப்பியோடிய) சில கருப்புப் பெண்களோட முலைகள் அறுத்திட்டாங்க, சில கருப்பர்களோட ஆண்குறிய வெட்டிட்டாங்க... கர்ப்பமான கருப்புப் பெண்களை இடுப்புவரை குழியிலே நிக்கவெச்சு மூர்ச்சையாகிற வரை சவுக்காலே அடிப்பார்கள்...அவர்களுக்கு (வெள்ளையர்களுக்கு) கொல்றதிலே இருக்கிற ஆனந்தம் வேறெதிலேயும் இருக்காது...." என்று வெள்ளை இனவெறியர்களின் அநாகரீக முகத்தையும் பிடிலய்யா என்ற சிவப்பிந்திய அடிமையின் மூலம் பளிச்சென படம் பிடித்துக் காட்டிச் செல்கிறது. - "ஏழு தலைமுறைகள்" எனும் நாவல்.

'நாவல் "குண்ட்டா"வின் பிறப்பில் இருந்து தொடங்குகிறது. காலம் 1750- ம் ஆண்டு.. மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமம்தான் குண்ட்டா பிறந்த ஊர். அவனுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து குண்ட்டா பருவ வயது பயிற்சியை முடிக்கும் வரையிலான நாவலின் ஒவ்வொரு அடியும் அம்மக்களின் உழைப்பை, வாழக்கையை, உறவு முறைகளை, இயற்கை பற்றிய அறிவு வளர்ச்சியை, நம்பிக்கையைக் கோர்வையாக அடி நாதமாக் எடுத்துச் சொல்கிறது.

பருவ வயது பயிற்சியை முடித்து வந்த சிறிது காலத்திலேயே குண்ட்டா பலாத்காரமாக அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றான். கைகளில் சாட்டையோடு குதிரைகள் மீதேறிச் சுற்றிவரும் வெள்ளை கங்காணிகளுக்குப் பயந்து கொண்டு கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் அமெரிக்க வயல்களில் வேலை செய்து வந்த இலட்சக்கணக்கான கருப்பின அடிமைகளில் இப்பொழுது குண்ட்டாவும் ஒருவன்.

காலங்கள் உருண்டோடுகின்றன. புதிது புதிதாக கருவிகள் முளைத்தன. கருப்பின அடிமைகளின் எண்ணிக்கையும் கூடியது. அமெரிக்க சுதந்திரப் போர் உள்நாட்டுப் போர் என அமெரிக்க சமூக அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குண்ட்டாவின் கொள்ளுப் பேரன் காலத்தின் கருப்பின மக்கள் அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற்றார்கள்.

"....நீக்ரோக்கள் கால்வாயகள் வெட்டிகிட்டிருக்காங்க. சாலைங்க போட்டுக்கிட்டிருக்காங்க. சல்லி பரப்பிக் கிட்டிருக்காங்க. ரெயில் பாதை அமைச்சுகிட்டிருக்காங்க. மொத்தத்தில் கருப்பர்கள் தம்மோட உடலையும் உயிரையும் தாரை வார்த்து இந்த நாட்டை மகத்தான நாடாக ஆக்கிட்டிருக்காங்க" - குண்ட்டாவின் பேரன் ஜார்ஜ் வெளியூர் சென்று திரும்பும்பொழுதெல்லாம், தான் கண்ட காட்சிகளைத் தனது கருப்பின மக்களிடம் இப்படிக் கூறிகின்றான்.

அமெரிக்காவின் செல்வ செழிப்பிற்காக கருப்பர்கள் தங்களது இரத்தத்தையும் வியர்வையையும் மட்டுமல்ல, தங்களது சுக துக்கங்களையும் மட்டுமல்ல, தங்களது சொந்த குடும்பங்களையும் மட்டுமல்ல, தங்களது சொந்த இன அடையாளங்களையும் இழந்து போனார்கள்.

குண்ட்டா அமெரிக்க சந்தையில் விற்கப்பட்ட மறுநிமிடமே அவனது பெயர் "டோபி" என மாறிப்போனது. குண்ட்டாவின் எதிர்ப்புக் குரலோ காற்றில் கரைந்து விடுகிறது.

"அந்த ஆப்பிரிக்கக் குப்பையெல்லாம் இனி மறந்துவிடு. கருப்பன் படிக்கக் கத்துக்கறது குத்தம்....ஆப்பிரிக்கவிலே வாசிப்பது போல் மத்தளம் வாசித்தா அவனே கடுமையா தண்டிக்கனும்னு சொல்லுது சட்டம் ..." என குண்ட்டா வுக்கு அறிவுரை கூறும் பிடிலய்யாதான் வெள்ளையர்களைத் துல்லியமாக மதிப்பிடும் கதாபாத்திரம்.

விடுதலை - அது ஒன்று மட்டும் தான் பிடிலய்யாவின் இலட்சியம். அதனால்தான் தள்ளாத வயதிலும் ஊர் ஊராகச் சென்று பிடில் வாசித்து காசு சேர்த்தார். தனது சொந்தப் பெயர்கூட மறைந்து போகுமளவு பிடிலோடு ஒன்றிப் போனார் அவர்.

"கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 500-ஆம் ஆண்டு என ஜார்ஜ் புஷ் தலைமையில் அமெரிக்காவின் வெள்ளை நிற வெறியர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொண்டாடிய பொழுது அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள், சிவப்பிந்தியர்கள்.

"...யாரோ கொலம்பஸ் என்கிறவர் இந்த நாட்டைக் கண்டு பிடித்தாருன்னு வெள்ளைக்காரங்க தம்பட்டம் அடிக்கிறாங்க. அவர் வரும்போதே இங்கே சிவப்பிந்தியர்கள் இருக்கும்போது அவர் புதுசா கண்டுபிடிச்சது என்னவாம்?"

கிழே க்ளிக் செய்து படிக்கவும்
************************************

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/ezhu-thalaimuraikal2.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/ezhu-thalaimuraikal-3.jpg

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி


தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு

வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்

விலை : ரூ 50


கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,

எல்லீசு சாலை,

சென்னை 2.

தொலைபேசி எண் : 044-28412367

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •