சென்னை உயிரியல் பூங்காவில் தனியா வைக்கவேண்டிய சீக்குபிடித்த மிருகங்கள் இரண்டு கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.. ஒன்று வாலி; இன்னொன்று வைரமுத்து. இந்த இனப்பெருக்கம் இப்போது பல புதுக்குட்டிகளையும் போட்டுள்ளது.
தெருவில் போகிற வருகிற பெண்களைப் பார்த்து இட்டுகட்டி பாடும் காலிகளைப் பார்க்கும்போது ஆத்திரம் வருவது போல இந்த 'கவிஞ'ப் பயல்களின் காலித்தனத்தைக் கண்டு சகிக்க முடியாமல் அவைவரும் ஆத்திரம் கொண்டுள்ளனர். அதிலொன்றுதான் பாமரன் என்பவர் எழுதிவெளிவந்துள்ள "வாலி + வைரமுத்து = ஆபாசம்" எனும் நூல்.
சினிமாவுக்கு அப்பால் 'சமூக உணர்வுகளை' கவிதைகள் என்று இலக்கியவாதி வேதமும், சினிமா பாட்டு என்ற பெயரில் பொறுக்கித்தனத்தையும் பிழைப்பாக்கிக் கொண்ட இரட்டைவால் அம்பி வாலியும், 'தமிழுக்குச் சோறு போடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு தமிழை நாறடிக்கிற வைரமுத்துவும் எழுதியுள்ள சினிமா பாடல்களை வகைப்படித்தியிருக்கிற இந்நூலின் பக்கங்களை படிக்கும்பொழுது இவர்களை இன்னும் விட்டுவைக்கலாமா? எனும் உணர்வே மேலோங்குகிறது.
உண்மையில் கதாநாயகியை கதாநாயகன் பார்த்து ஆடுவதற்கு முன்பே இந்த கயவாளிகள் கதாநாயகியை அருவருப்பாகப் பார்த்து, அதையே ரசனையாக மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.
ஏனடா எழுதினாய் என்றால் தயாரிப்பாளர் சொன்னார், இயக்குநர் சொன்னார் நான் எழுதினேன் என்று தப்பித்துக் கொள்கிறார்கள். சின்னத்திரையும், பெரியத்திரையும் சீரழிவுக்கு போட்டிபோடும் இத்தருணத்தில் இந்த காலிகளுக்குக் கொடுக்கும் முதல் அடியில் கலங்கட்டும் திரையுலகம்.
வெளியீடு:
பினாங்கு பயனீட்டாளர்.
விலை ரூ 15
கிடைக்குமிடம்
******************
******************
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

