"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி கைராட்டை சுற்றிச் சுற்றி, உண்ணாவிரதப் போர் முறையின் மூலமே வெள்ளையனிடமிருந்து 'விடுதலை' பெற்று விட்டோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பி காங்கிரசின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவுடன் காங்கிரசின் தன்மையும் மாறியது. "நமது பாடசாலைப் புத்தகங்கள் போதிக்கின்ற இந்த விவரங்கள் சாரமற்று நீர்த்துப் போன பழங்கஞ்சிக்கு ஒப்பானது. எள்ளின் முனையளவும் உண்மையற்றவை. காங்கிரசின் பிறப்பே வேசித்தனமானது; மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி- காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.
பக்கம் 4
1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவங்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் துக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் காட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை.
தாதாபாய் நவ்ரோஜி , திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் - எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது.
மக்களைச் சாதி , மத அடிப்படையில் பிரித்து போதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அருவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901 -இல் முசுலீம் லீக்கும்,
1918- ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.
பக்கம் 9
_______________________________________________________
படுபிற்போக்காளர்கள்
"......சென்ற ஐம்பது ஆண்டுகளில் கற்றவற்றை எல்லாம் மறப்பதில்தான் இந்தியாவின் விமேசனம் இருக்கிறது. ரயில்வேக்கள், தந்திகள், ஆஸ்பத்திரிகள், லாயர்கள், டாக்டர்கள் இவை. இவர்கள் போன்றன மறையவேண்டும்......உணர்வோடும், சமய நம்பிக்கையோடும் மனமறிந்தும் எளிய விவசாயி வாழ்க்கை வாழக் கற்க வேண்டும் "
(காந்தி- நம்பிக்கையின் பாவ ஏற்பு, 1909, சொற்பொழிவுகள், பக்கம் 1041-43)
குழப்பவாதிகள்
"நம் தலைவர்களில் பலருக்கு சுயராச்சியம் எனில் விடுதலையைவிடக் குறைவான ஏதோ ஒன்று எனத் தெளிவாயிருந்தது. இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார். அதைப் பற்றிக் தெளிவாய்ச் சிந்திக்கவும், அவர் ஊக்கம் தரவில்லை" ( ஜவஹர்லால் நேரு, சுயசரிதம், பக் 76) என நேரு வெளிப்படையாகவே கூறுகிறார்.
இந்து சநாதனி
"நான் என்னை ஒரு சநாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில்-
வேதங்களை, உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகிறவை அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறிவியையும் நான் நம்புகிறேன்.- என் கருத்துப்படி வேதப் பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல் . நான் வருணாசிரம தருமத்தை நம்புகிறேன்.
மக்கள் நம்பும் பொருளில் அல்லாமல், இன்னும் விரிவான பொருளில் நான் பசுவைப் பாதுக்காப்பதை நம்புகிறேன்.
விக்கிரக ஆராதனையை நான் நம்பாமல் இல்லை."
(காந்தி, "யங் இண்டியா"வில் அக் 12, 1921)
பக்கம் 30,31
வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15
RELATED :
காந்தி நல்லவரா? கெட்டவரா?
2 comments:
//1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவங்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் துக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் காட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை.//
//மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி- காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.//
காந்தியோ, சுபாஸோ, காங்கிரசோ சுதந்திரத்திற்கு காரணமில்லையா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் தாமாகவே மனமுவந்து போட்டு விட்டு சென்ற பிச்சையா இந்த சுதந்திரம்?
//இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார். அதைப் பற்றிக் தெளிவாய்ச் சிந்திக்கவும், அவர் ஊக்கம் தரவில்லை"//
நீங்கள் கடைசியில் சொல்லி இருப்பது போல் காந்திக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். ஒருவர் மற்றொருவருடன் 100% ஒத்துப் போவது என்பது சுயமாய் சிந்திக்கத் தெரியாதவர்க்கு மட்டுமே சாத்தியம்.
விடுதலைக்காக பாடுபட்ட பல தலைவர்கள் மத நம்பிக்கை இருந்தவர்களாக இருந்திருக்கின்றனர். உண்மை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர்கள் விடுதலைக்காக போராடியது இல்லையென்று ஆகி விட முடியாதே?
இது புத்தகத்தின் கருத்து மட்டுமா அல்லது தங்களுடைய கருத்துமா? அப்படியே இது வெறுமனே புத்தகத்தின் கருத்தாக மட்டுமே இருந்தாலும் இப்படிப் பட்ட ஒரு புத்தகத்தை அலசி இதனை விளம்பரப் படுத்துவதால் என்ன பிரயோசனம்?
நான் ஒன்றும் தீவிர காங்கிரஸ் தொண்டன் இல்லீங்க. ஆனால் இதை எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வெறுமனே உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு போகிற போக்கில் குற்றம் சொல்லி விட்டு புகழ் தேடும் ஒரு முயற்சியாகவே இப்புத்தகம் எனக்குத் தோன்றுகிறது.
நான் இன்னும் இப்புத்தகத்தை படிக்க வில்லை. ஆனால் இங்கு உள்ள சில வரிகளும் உபயோகிக்கப் பட்ட வார்த்தைகளும், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு எதிர்க் கட்சியைப் போல ஒரு தலைப் பட்சமாகவே எழுதப் பட்டது போல் எனக்கு தோன்றுகிறது.
இதே விஷயத்தை நடுநிலைத் தன்மையோடு வேறு ஏதாவது புத்தகம் விவரித்திருந்தால் சொல்லுங்கள். நானும் படிக்கிறேன்.
Nandha ,
//காந்தியோ, சுபாஸோ, காங்கிரசோ சுதந்திரத்திற்கு காரணமில்லையா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் தாமாகவே மனமுவந்து போட்டு விட்டு சென்ற பிச்சையா இந்த சுதந்திரம்?//
நேரடி காலனியாக இனியும் வைத்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் தன்னால் தோற்றிவிக்க பட்ட காங்கிரஸ் என்ற கட்சியிடம் அதிகாரத்தை மாற்றி ஒப்படைத்து விட்டு சென்றான் பிரிட்ஷ்க்காரன்.
இதனை தக்க ஆதாரங்களுடன் அவர்களின் போராட்டங்கள்,வாக்குமூலம், எழுத்துக்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது இந்நூல். வாங்கி படித்து பின்னுட்டம் இடவும்.
//இது புத்தகத்தின் கருத்து மட்டுமா அல்லது தங்களுடைய கருத்துமா? அப்படியே இது வெறுமனே புத்தகத்தின் கருத்தாக மட்டுமே இருந்தாலும் இப்படிப் பட்ட ஒரு புத்தகத்தை அலசி இதனை விளம்பரப் படுத்துவதால் என்ன பிரயோசனம்?//
தனிப்பட்ட கருத்து அல்ல. இன்றும் காந்தியையும், காங்கிரஸையும் நல்லவர்கள் என்ற கருத்து, மக்கள் நலனுக்கானது என்ற கருத்து.. நீடித்துக் கொண்டு இருப்பதால் இந்நூலினை விளம்பரப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,
காந்தி ,காங்கிரஸ் துரோகத்த்தினை அம்பலப்படுத்தி கிழ்கண்ட வலைப்பதிவில் பதிவு உள்ளது. படித்து .....மாற்று கருத்தினை விவாதிக்கவும்.
http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html
Post a Comment