மக்களது ஜனநாயக உரிமைகளுக்காக போராடிவரும் திரு.கோவிந்த முகோத்தியின் இக்கட்டுரை எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி என்ற ஆங்கில ஏட்டில் , மே 21, 1994 ம் ஆண்டு இதழில் (பக்கங்கள் 1259-1263) வெளியாகியது. அதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பே இவ் வெளியீடு. நாடு முழூவதும் போலீசும் இரானுவமும் எவ்வாறு கசாப்பு நிறுவனங்களாக, " மனிதக்கறி" போட்டு வளர்க்கப்படும் மிருகங்களாக, வக்கிரம் நிறைந்தனவாக விளங்குகின்றன என்பதற்கான ஆதாரங்களை அளிக்கிறது. அதே சமயம் வதைகளுக்கு எதிரான சட்டங்களும் இந்திய ஏற்றுக் கொள்ளும் சர்வதேச பிரகடனங்களும் நாளும் அற்பமாக காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
நீதிமன்றங்களின் பாராமுகமும் ஆட்சியாளர்களின் திடலடி மறுப்பும் இத்தகைய இழிநிலையை மேலும் தீவிரமாக்குவதைச் சுட்டிக் காட்டுகிறது.
உரிமைகளுக்காக போராடுபவர்களை மட்டுமல்ல, ஒன்று மறியாத சாதாரண மக்களையும் வாட்டி வதைக்கும் அரசு பயங்கரவாதத்தை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இக்கட்டுரை. அரசும், அதன் அமைப்புகளும் தானே வரையறுத்துள்ள சட்டப் பூரவ மனித உரிமைகளைக் கூட அற்பமாய் நினைக்கும் கொலைக்கருவியாக மாறியுள்ளன என்பதற்கு இது ஒர் இரத்த சாட்சி.
எழுச்சியும் மக்களது போராட்டங்களினால் சொந்த நாட்டு மக்களையே 'சந்தேக கேசுகளாக' கண்காணிப்பதும், கண்மூடித்தனமாய் வதைப்பதும் அரசின் அன்றாட அலுவல்களாக ஆகிவிட்டன. மக்களை வதைப்பதிலும், பாலியல் வக்கிரத்திலும் இதர மாநிலங்களின் போலீசுக்கோ, துணை இராணுவப் படைக்கோ குறைத்தவர்கள் அல்ல என மார்தட்டுகிறது. தமிழக காவல்துறை .
இத்தகைய அம்பலப்படுத்தல்களும் இவைகளை மக்களுக்கு அறியச் செய்வதும் நமது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் முதற்தேவை எனுமடிப்படையில் வெளியிடப்படும் இந்நூலை படித்தும் , பரப்பியும் ஆதரிக்க வேன்டுகிறோம்.
கீழைக்காற்று
செப்டம்பர்,1994
-------------------------------------
கோவிந்த முகோத்தி
விலை ரூ 7.00
--------------------------------------
வெளியீடு & கிடைக்குமிடம்
-------------------------------------
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
No comments:
Post a Comment