-
இந்நூலை ஆசிரியர் மாரிஸ் கார்ன் போர்த் தத்துவம் நடைமுறை இரண்டிலும் இடைவிடாத போராட்டத்தோடு நாற்பதாண்டு காலம் இங்கிலாந்து நாட்டில் ஒரு கம்யூனிஸ்டாய் வாழ்ந்தவர்.
தனது கல்லூரி நாட்களிலிருந்தே சொல், செயல் இரண்டிலும் ஒன்றாக வாழ உறுதிமேற்கொண்டு கேம் பிரிட்ஜ் பகுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்கான அமைப்புத் தொடங்கியப் போராடி வந்தார்.அப்போது டெய்லி வொர்க்கர்(daily worker- அன்றாடத் தொழிலாளி) என்ற நாளேட்டை விற்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றார். கீழைப் பிராந்தியத்தில் செயல்பட்ட தொழிலாளர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களிடையே செய்தித் தொடர் பானராகச் செயல்பட்டபோது சைக்கிள் வண்டியில் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்த செயல் வீரர் என்று பெயர் எடுத்தவர்.
மார்க்சீய தத்துவத் துறையில் மிக உயர்ந்த தேர்ச்சி பெற்ற கார்ன் போர்த் தான் கற்றது அனைத்தையும் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக நூல்கள் ஆக்கினார். "இயங்கியல் பொருள்முதல்வாதம் - ஓர் அறிமுகம்", " அறிவியல் X கருத்துமுதல்வாதம்", "மார்க்சீயமும் மொழியியல் தத்துவமும்", "வரலாற்றின் வறுமை" போன்றவை இவரது முக்கிய நூல்கள்.
"திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்" என்ற இவரது நூல் அவர் காலத்தில் மார்க்சீயத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பிரபல முதலாளித்துவ அறிஞர் கார்ல் பார்பருக்குச் சவாலாக எழுதப்பட்டது.
ஒரு சிறந்த படிப்பாளியாகத் தொடங்கிய கார்ன் போர்த் எளிய நூலாசிரியப் பணியாலும், தொழிலாள்ர் கூட்டங்களில் எளிய மேடைப் பேச்சாளராகச் செயல்பட்ட மணியாலும் ஒரு கம்யூனிஸ்டாகத் தன்னை வார்தெடுத்துக்க் கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவர் செய்த தத்துவ ஆராய்ச்சிகள் மார்க்சியப் படிப்புக்கு பெருமளவு உதவியானவை.
மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி என்ற இவரது நூல் மிகச்சீரிய அரிய முயற்சி. தமிழில் முதன் முறையாக வெளிவரும் இந்நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பதிப்பகத்தார்
-------------------------------------
பதிப்புரிமை & தமிழாக்கம்
பதிப்புரிமை & தமிழாக்கம்
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
-------------------------------------
விலை ரூ 35
விலை ரூ 35
-------------------------------------
1 comment:
இன்றைய தேவைக்கான நூல்,. மார்க்ஸியத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் வேலையில், பலரும் மார்க்ஸியத்தை கற்றுக் கொள்ள ஆலோசனை கேட்டு வரும் வேலையில் இந்த நூலை அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
நூல் வெளியீட்டாளரினுடைய தொலைபேசி எண்ணையும், மெயில் ஐடி இருந்தால் அதனையும் சேர்த்து தருவித்தால் சிற்ப்பாக இருக்கும்.
அசுரன்
Post a Comment