இந்நூல் தமிழக வரலாற்றில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைச் சுருக்கமாகத் தொகுத்துரைக்கிறது. புரோகிதர்களாக மாறி,பின்பு மத்திய காலத்தில் கோவில்கள் எனும் வலிமையான சொத்து நிறுவனங்களின் மூலம் நிலவுடைமையாளர்களாக,அரசர்களின் ஆலோசகர்களகப் பரிணமித்து, கானிய ஆட்சியின் அதிகார வர்க்கமாக உருவெடுத்து நகரங்களில் குடியேறி, கல்வி, கலை, பத்திரிகை என சகல துறைகளிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்து வருவதை எளிமையாகப் புரிய வைக்கிறார் ஆசிரியர்.
.
இதன் குறியீடாய் விளங்கிய ராஜாஜியின் பாத்திரத்தையும் இதை மறுத்து எழுந்த நீதிக்கட்சி, திராவிட இயக்கம்,பெரியாரின் பங்கையும் கச்சிதமாக எடுத்துரைகிறார் நூலாசிரியர்.
அதேசமயம் பார்பன ஆதிக்கம் ஒரு கருத்தியல் வன்முறையாகவும் பார்ப்பனர்களின் ஆதிக்கமாகவும் மட்டும் ஆசிரியர் புரிந்து கொள்கிறார். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரச் சுரண்டல்களுக்காகப் பாதுகாக்கப்படும் பார்ப்பனியத்தை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் இந்நூல் பலவீனமாக இருக்கிறது.
காமராசர், இராஜாஜி முரண்பாட்டை பார்ப்பன எதிர்ப்பு X பார்ப்பன ஆதரவு என்று பார்ப்பதும், பார்ப்பனர்களைச் சேர்க்க மாட்டோம் என முழங்கிய பா.ம.க வை பார்ப்பன எதிர்ப்புப் போராளியாக அங்கீகரிப்பதும் மேற்கண்ட பலவீனத்துக்கு உதாரணங்கள்.
இருப்பினும் பொதுவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் வாசகர்களுகுப் பயன்படும் எனப்தில் ஐயமில்லை.
ஆசிரியர் சிவக்குமரன்
யாதுமாகி பப்ளிகேஷன்
பக்கங்கள் 37
விலை ரூ 15
-
கிடைக்குமிடம்
-
கிடைக்குமிடம்
-----------------------
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
Related
No comments:
Post a Comment