பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, July 11, 2007

"பேலட் ஆஃப் எ சோல்ஜர்" - ரஷ்யத் திரைப்படம்

போர்க்காலத்தில் ரானுவத்தில் இருக்கிற இளைஞன் ஒருவன், கிடைக்கிற சில நாள் விடுமுறையில், தன் அம்மாவை பார்த்துவிட வேண்டுமென்று வெகு தொலைவில் இருக்கிற ஊர் நோக்கி கிளம்புகிறான்.அவனது பயணத்தின் வழியே அவனது கதையையும், போரின் தாக்கத்தையும் சொல்லும் கதைதான் "Ballad of a Soldier"

இத்திரைப்படம் 1959 ல் வெளிவந்தது. இதன் இயக்குநர் கிரிகோரி சுக்ராய் .உக்ரேனிய நாட்டை சேர்ந்த இவர் படத்தின் கதாநாயகனை போல போர்வீரர்தான். இரண்டாம் உலக போரில்.

இந்த வார ஆனந்த விகடன் இதழில் உலக சினிமாவில் இத்திரைப்படத்தினை பற்றி எழுதியதை படித்த பின் நெட்-ல தேட யூ டூபிப்-ல் முழுதிரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தாய் போருக்கு சென்ற தனது மகனை எதிர்ப்பார்த்து காத்திருப்பதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.இந்த தாயின் மகனான அல்யோஷா என்கிற போர்வீரன் தான் கதையின் நாயகன்.

போர்களத்தில் நிகழ்த்திய சாதனைக்காக பதக்கம் அளித்து பாராட்டுவதாக ஜெனரல் சொல்ல , அதற்கு பதிலாக ஒரு நாள் விடுமுறை கொடுங்கள் , நான் எனது ஊர்க்கு சென்று என் அம்மாவை சந்தித்துவிட்டு வருகிறேன் எனக் கேட்கிறான். போருக்கு வரும் பொழுது அம்மாவிடம் சொல்லாமல் வந்துவிட்டதையும், இறுதியாக அம்மா எழுதிய கடிதத்தில் குடியிருக்கும் வீட்டின் கூரை ஒழுகுவதாக கூறி இருந்ததையும் சொல்கிறான் அல்யோஷா.

இறுதியில் சம்மதிக்கும் ஜெனரல், போர்காலம் என்பதை கணக்கில் கொண்டு போவதற்கு 2 நாளும், வருவதற்கு 2 நாளும் எடுத்து கொள் என சொல்லி, கண்டிப்பாக அதற்குள் விடுமுறையை முடித்து வந்து விட வேண்டும் என சொல்கிறார்.உற்சாகமாக் , சரி என சொல்லிவிட்டு அல்யோஷா ரயில் ஏறுகிறான்.

இடையில் ரயில் நிறுத்ததில் தனது அம்மாவுக்கு அழகிய கம்பிளிதுண்டு ஒன்றை வாங்கி கொள்கிறான்.இதன் பின் அல்யோஷா பயணத்தில் ஏற்படும் நிக்ழ்வுகள் தான் மொத்த திரைப்படமும்.

ஷீரா என்கிற பெண்னை இரயிலில் சந்தித்து மெல்லிய நட்பாக ஆரம்பிக்கிறது. பின்னர் இடையில் ரயிலை தவற விட்டுட்டு தவிப்பது பின் மீண்டும் சந்திக்கும் போது வலுவான ஒரு தாக்கத்தை இருவரும் உணர்வது என காட்சிகள் நகர்கிறது. பின் பிரிய வேண்டிய சூழ்நிலையில் தனது முகவரியை அல்யோஷா ரயில் சத்ததோடு கத்தி சொல்கிறான்.

பின்னர் அவன் பயனம் செய்யும் ரயில் செல்லும் பாதையில் பாலம் வெடிகுண்டால் தகர்ந்து விடுகிறது. அடுத்த ரயில் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என அறிவிப்பு வர...விடுமுறை முடியும்தருவாயில் "காத்திருக்க முடியாது" என நடந்தும்; ஓடையை கடந்தும் வந்து ஒரு வண்டிக்காரனின் உதவியோடு ஊருக்கு வருகிறான் அல்யோஷா

.அம்மாவை தோட்டத்தில் சென்று சந்திக்கும் அல்யோஷா , தாயை பாசத்தோடு கட்டிணைந்து தான் அம்மாவுக்காக வாங்கிய கம்பிளி துண்டை தருகிறான்.பின்னர் உடனே கிளம்புவதாக அல்யோஷா கூற அம்மா முதலில் போக விட மாட்டேன் என அழுவாள். பின்னர் "நீ விட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் நான் உயிரோடு இருப்பேன். உனக்காக காத்துக்கிட்டுருப்பேன்" என்று சொல்லி தன் மகனை முத்தமிடுகிறாள்.

அல்யோஷா கண்கள் கலங்க முத்தமிட்டுவிட்டு, கையசைத்துக்கொண்டே திரும்பி வாகனத்தை நோக்கி ஓடத் துவங்குகிறான். நீண்ட மண் பாதையில் கிளம்பிச் செல்லும் வாகனம், புழுதிப் புகையில் மறைகிறது.

இது தான் இத்திரைப்படத்தின் கதைச்சுருக்கம். இதனை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வை விட பன்மடங்கு உணர்வு திரையில் பார்க்கும் போது ஏற்பட்டது.இடையில் கால் ஊனமான ஒரு போர்வீரனை சந்திப்பது அவன் தனது மனைவியை சந்திக்க விரும்பாமல் விலகுவதும்,சக போர்வீரன் தனது வீட்டுக்கு பரிசாக கொடுக்க ஏதும் இல்லாமல் சோப்பு கட்டியை கொடுத்துவிடுவதும்; மிக உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டு உள்ளது...

"வீரம் விளைந்தது" என்கிற நாவல் படித்து கொண்டு இருக்கும் சமயத்தில் இத்திரைப்படத்தை பார்த்தேன். நாவலின் பாவெல் எவ்வளவு துன்பங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து செம்படையிலிருந்து எதிரிகளோடு போராடுவது, தொடர்ந்து ரானுவத்தில், மக்கள் பணியில் இருக்க விரும்புவது; ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது என சித்தரிக்கப்பட்டு இருப்பான்.

போர்க்களத்தினை மையமாக கொண்ட இந்த நவால் படிக்கும்போது இத்திரைப்படத்தினை பார்த்ததால் அல்யோஷா கதாபாத்திரத்தையும், போர்காலக்கட்டத்தையும் மேலும் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது.

நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். பாவெல் கதாபாத்திரம் நினைவுகளில் இருந்து அகல மறுக்கிறது. அந்த வீரனை திரையில் பார்த்த மாதிரி அல்யோஷா காட்சிகளும் நினைவுகளில் இருந்து அகல மறுக்கிறது.

"Ballad of a Soldier" திரைப்படத்தின் முழுமையாக யூ டூபில் இணைத்துள்ளவருடைய முகவரி கிழே உள்ளது.

http://www.youtube.com/user/overture88

4 comments:

புத்தகப் பிரியன் said...

test

அசுரன் said...

இது எப்பொழுது வந்த படம். படம் குறித்து வேறு சில விமர்சன்ப்பூர்வமான கருத்துக்களை சேர்த்து பகிர வாய்ப்புள்ளதா?

புத்தகப் பிரியன் said...

இத்திரைப்படம் 1959 ல் வெளிவந்தது. இதன் இயக்குநர் கிரிகோரி சுக்ராய் .
உக்ரேனிய நாட்டை சேர்ந்த இவர் படத்தின் கதாநாயகனை போல போர்வீரர்தான். இரண்டாம் உலக போரில்.

இந்த வார ஆனந்த விகடன் இதழில் உலக சினிமாவில் இத்திரைப்படத்தினை பற்றி எழுதியதை படித்த பின் நெட்-ல தேட யூ டூபிப்-ல் முழுதிரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தாய் போருக்கு சென்ற தனது மகனை எதிர்ப்பார்த்து காத்திருப்பதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.

இந்த தாயின் மகனான அல்யோஷா என்கிற போர்வீரன் தான் கதையின் நாயகன்.

போர்களத்தில் நிகழ்த்திய சாதனைக்காக பதக்கம் அளித்து பாராட்டுவதாக ஜெனரல் சொல்ல , அதற்கு பதிலாக ஒரு நாள் விடுமுறை கொடுங்கள் , நான் எனது ஊர்க்கு சென்று என் அம்மாவை சந்தித்துவிட்டு வருகிறேன் எனக் கேட்கிறான்.

போருக்கு வரும் பொழுது அம்மாவிடம் சொல்லாமல் வந்துவிட்டதையும், இறுதியாக அம்மா எழுதிய கடிதத்தில் குடியிருக்கும் வீட்டின் கூரை ஒழுகுவதாக கூறி இருந்ததையும் சொல்கிறான் அல்யோஷா.

இறுதியில் சம்மதிக்கும் ஜெனரல், போர்காலம் என்பதை கணக்கில் கொண்டு போவதற்கு 2 நாளும், வருவதற்கு 2 நாளும் எடுத்து கொள் என சொல்லி, கண்டிப்பாக அதற்குள் விடுமுறையை முடித்து வந்து விட வேண்டும் என சொல்கிறார்.

உற்சாகமாக் , சரி என சொல்லிவிட்டு அல்யோஷா ரயில் ஏறுகிறான்.இடையில் ரயில் நிறுத்ததில் தனது அம்மாவுக்கு அழகிய கம்பிளிதுண்டு ஒன்றை வாங்கி கொள்கிறான்.

இதன் பின் அல்யோஷா பயணத்தில் ஏற்படும் நிக்ழ்வுகள் தான் மொத்த திரைப்படமும்.

ஷீரா என்கிற பெண்னை இரயிலில் சந்தித்து மெல்லிய நட்பாக ஆரம்பிக்கிறது. பின்னர் இடையில் ரயிலை தவற விட்டுட்டு தவிப்பது பின் மீண்டும் சந்திக்கும் போது வலுவான ஒரு தாக்கத்தை இருவரும் உணர்வது என காட்சிகள் நகர்கிறது. பின் பிரிய வேண்டிய சூழ்நிலையில் தனது முகவரியை அல்யோஷா ரயில் சத்ததோடு கத்தி சொல்கிறான்.

பின்னர் அவன் பயனம் செய்யும் ரயில் செல்லும் பாதையில் பாலம் வெடிகுண்டால் தகர்ந்து விடுகிறது. அடுத்த ரயில் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என அறிவிப்பு வர...
விடுமுறை முடியும்தருவாயில் "காத்திருக்க முடியாது" என நடந்தும்; ஓடையை கடந்தும் வந்து ஒரு வண்டிக்காரனின் உதவியோடு ஊருக்கு வருகிறான் அல்யோஷா.

அம்மாவை தோட்டத்தில் சென்று சந்திக்கும் அல்யோஷா , தாயை பாசத்தோடு கட்டிணைந்து தான் அம்மாவுக்காக வாங்கிய கம்பிளி துண்டை தருகிறான்.
பின்னர் உடனே கிளம்புவதாக அல்யோஷா கூற அம்மா முதலில் போக விட மாட்டேன் என அழுவாள். பின்னர் "நீ விட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் நான் உயிரோடு இருப்பேன். உனக்காக காத்துக்கிட்டுருப்பேன்" என்று சொல்லி தன் மகனை முத்தமிடுகிறாள். அல்யோஷா கண்கள் கலங்க முத்தமிட்டுவிட்டு, கையசைத்துக்கொண்டே திரும்பி வாகனத்தை நோக்கி ஓடத் துவங்குகிறான். நீண்ட மண் பாதையில் கிளம்பிச் செல்லும் வாகனம், புழுதிப் புகையில் மறைகிறது.

இது தான் இத்திரைப்படத்தின் கதைச்சுருக்கம். இதனை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வை விட பன்மடங்கு உணர்வு திரையில் பார்க்கும் போது ஏற்பட்டது.

இடையில் கால் ஊனமான ஒரு போர்வீரனை சந்திப்பது அவன் தனது மனைவியை சந்திக்க விரும்பாமல் விலகுவதும்,சக போர்வீரன் தனது வீட்டுக்கு பரிசாக கொடுக்க ஏதும் இல்லாமல் சோப்பு கட்டியை கொடுத்துவிடுவதும்; மிக உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டு உள்ளது...

"வீரம் விளைந்தது" என்கிற நாவல் படித்து கொண்டு இருக்கும் சமயத்தில் இத்திரைப்படத்தை பார்த்தேன். நாவலின் பாவெல் எவ்வளவு துன்பங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து செம்படையிலிருந்து எதிரிகளோடு போராடுவது, தொடர்ந்து ரானுவத்தில், மக்கள் பணியில் இருக்க விரும்புவது; ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது என சித்தரிக்கப்பட்டு இருப்பான்.

போர்க்களத்தினை மையமாக கொண்ட இந்த நவால் படிக்கும்போது இத்திரைப்படத்தினை பார்த்ததால் அல்யோஷா கதாபாத்திரத்தையும், போர்காலக்கட்டத்தையும் மேலும் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது.

நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். பாவெல் கதாபாத்திரம் நினைவுகளில் இருந்து அகல மறுக்கிறது. அந்த வீரனை திரையில் பார்த்த மாதிரி அல்யோஷா காட்சிகளும் நினைவுகளில் இருந்து அகல மறுக்கிறது.

("வீரம் விளைந்தது" நாவலை அடுத்து புத்தகப் பிரியனில் எழுதும்போது விரிவாக பார்க்கலாம்)

Ayyanar Viswanath said...

தகவல்களுக்கு நன்றி புத்தகப்ரியன்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •