மனிதனின் உணர்ச்சிகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே அவன் உருவாக்கிக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து பிறந்தவை தான் - காதல் எனும் மென்மையான உணர்ச்சி உட்பட.
..
பொருளாதார உறவுடன் காதல், குடும்பப் பாசம் ஆகியவற்றைப் பேசுவது நம்மில் சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். அதற்குக் காரணம் காதல் பற்றிய நமது புரிதல் அத்தனை ஆழமாக இருக்கிறது என்பதல்ல, பொருளாதார உறவுகள் குறித்த நமது புரிதல் அத்தனை ஆழமற்று இருக்கிறது என்பதுதான். இது காதலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி அல்ல; கொச்சைப்படுத்தப்பட்ட காதலைப் புரிந்து கொள்ளும் முயற்சி."
..
"முதலாளி வர்க்கம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழுத்தெறிந்து குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது" - என்றார் மார்க்ஸ்.
பணம் பணத்தால் வாங்கக் கூடிய பொருள், பொருளால் கிடைக்கக் கூடிய இன்பம் -இப்படி டப்பாக்களில் அடைத்து விற்கப்படு மகிழ்ச்சியை, நுகர்பொருள் மோகத்தை, சரியாகச் சொன்னால் நுகர்பொருள் வெறியை நமக்கு வழங்கியிருக்கிறது முதலாளித்துவ அமைப்பு.
குடும்பத்தின் நுகர்தல் வேட்கையைத் தணிப்பதற்காக திருட்டு, லஞ்சம், மோசடி ஆகிய எந்த வழிமுறையைக் கணவன் பின்பற்றினாலும் மனைவிக்கு அவன் மீது உள்ள காதல் குறையாது. மகனுக்குப் பாசம் குறையாது. காதல் கணவன் களவாளியாக இருக்கலாம்; சமூகத்தின் விரோதி -குடும்பத்தின் ஒளி விளக்கு !
ஆனால் சமூகத்தின் சேவகன் பாசத்தின் தந்தையாகவோ, காதல் கணவனாகவோ இருக்க முடிந்தால் அது அதிசயம். இல்லாமல் போனால் அது இயற்கை. என்ன வேடிக்கை!
பயன்படுத்திவிட்டுத் துக்கியெறியும் நுகர்பொருளைப் போல மனிதர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்தி கொள்ளும் இந்த்ச் சமூதாயத்தில் இந்தப் பயன்பாட்டு விதிக்குத் தப்பி, காதலும், பாசமும் மட்டும் புனிதம் கொடாமல் எப்படி அந்தரத்தில் தொங்க முடியுமா?
..
இப்போது பூனை தன் குட்டியை விழுங்குகிறது. தம்மைத் தவிர மற்றவர்களைப் பண்டங்களாகப் கருதிப் பயன்படுத்தி வந்த தம்பதிகள் இப்போது ஒருவரையொருவர் பண்டங்களாகக் கருதத் துவங்கிவிட்டார்கள். தன்னை தருவதன் மூலம் பெருமை பெற்ற காதல், இப்போது பெறுவதைத் தனக்கு உத்திரவாதம் செய்யச் சொல்கிறது -விளைவு பாலுறவுப் புரட்சி!
******************************
காதல் கோட்டை- அற்ப உணர்வின் இடையில் தூவப்பட்ட பொறுக்கித்தனம். காதல் தேசம் - பொறுக்கித்தனத்தின் வாலில் கட்டபப்ட்ட அற்ப உணர்வு.
"என் மனைவியும் மகளும் படத்தில் ஒன்றிப் போய் விட்டார்கள். எனக்கோ சகிக்க முடியவில்லை" என்று அரற்றினார் குடும்பத்துடன் காதல் தேசம் பார்க்கப் போன ஒரு நண்பர்.
தன்னுடைய மன்க்குமுறலை தனது மனைவி மகளுடன் அவர் மனம் விட்டுப் பேசிருக்கலாமே; பேச முடியாது. தந்தைக்கும் மகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவும் 'அநாகரிக இடைவெளி'யைக் கடக்க சராசரி இந்தியர்கள் முயற்சிப்பதில்லை.
..
அந்த இடைவெளியில்தான் பாரதப் பண்பாட்டின் 'உன்னதமும்', கோடம்பாக்கத்தின் பணப்பெட்டியும் உயிர் பிழைத்திருக்கின்றன.
--ஜனவரி 1997 புதிய கலாச்சாரம் இதழில் வந்த இந்த திரைப்படங்களின் விமர்சனத்திலிருந்து சில பகுதிகள், முழுவிமர்சனமும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
..
*************************************************
..
..
..
No comments:
Post a Comment