'டைட்டானிக்'கின் வரலாறு இயற்கையினாலும். நாகரீகச் சமூகத்தினாலும் 1500 பேர் கொல்லப்பட்ட ஒரு விபத்து; பொதெம்கின், சுரண்டலமைப்பை மாற்றத் துடித்த ஒரு புரட்சியின் குறீயிடு. விபத்து என்ற உண்மையில் ஆதி கால அம்பிகாபதி - அமராவதி காதல் கதையைக் கலந்தது இயக்குநர் காமரூனின் கற்பனை; தோல்வியுற்ற பொதெம்கின் கலகம் என்ற உண்மையில், எதிர்காலப் புரட்சியின் வெற்றியைக் கலந்தது இயக்குநர் ஐசன்ஸ்டீனின் கற்பனை.
..
ரோஸ், ஜாக் என்ற அழகான காதலர்கள்தான் 'டைட்டானிக்'கின் பாத்திரங்கள்; உழைத்து ஒடுங்கிய முகங்களை கொண்ட வீரர்களும், கொடுமை கண்டு கோபம் கொண்ட மக்களும்தான் பொதெம்கினில் வந்தார்கள்.
..
நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களும் செலவழிப்பதற்குப் பெரும் நிறுவனங்களும் காமரூனுக்கு இருந்தார்கள்;கப்பலில் உயரும் செங்கொடி மட்டும் சிவப்பில் வர எல்லா மூலப்பிரதிகளிலும் தானே வண்ணம் தீட்டிச் சேர்த்தார் ஐசன்ஸ்டின்.
..
'டைட்டானிக்'கின் விபத்தை அழகுபடுத்த சிறப்பு ஒலி,ஒளி, கணிப்பொறி வரைகலை, திரையரங்கச் சிறப்பு உபகரணங்கள் இருந்தன; பொதெம்கினின் கரடு முரடான கலகத்தை, கருப்பு - வெள்ளையும் உரையாடல் இல்லாத இசையும் கம்பீரமாகக் கொண்டு வந்தன.
'டைட்டானிக்'கின் புகழ் பாட உலகெங்கும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இருக்கின்றன; பொதெம்கினைத் தடை செய்வதற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களும், அவதூறு செய்யப் பத்திரிக்கைகளும் முயன்றனர். 'டைட்டானிக்'கின் தொழில் நுட்பப் பிரமிப்பிலும் காதலின் மயக்கத்திலும் கட்டுண்டு மெளமாகக் கனவு கண்டார்கள் ரசிகர்கள்; படத்தின் தேவையான வசனங்களைத் தாங்களே பேசி, புரட்சியின் எழுச்சியை அரங்கினுள் கொண்டு வந்தார்கள், பொதெம்கினின் ரசிகர்கள்.
'டைட்டானிக்'கின் பிரம்மாண்டம் திரைக்குள் மட்டும் இருந்தது. பொதெம்கினின் பிரம்மாண்டம் திரைக்கு வெளியே இருக்கிறது. 'டைட்டானிக்'கின் சாதனை அதன் செலவு மதிப்பீட்டில்; பொதெம்கினின் சாதனை நமது வாழ்க்கையை மதிப்பிட்டதில்.
..
'டைட்டானிக்'கினால் அடித்துச் செல்லப்பட்ட ரசிகர்கள் வாழ்க்கைக் கரையேறுவதற்கு ; "போர்க்கப்பல் பொதெம்கினைப்" பார்க்க வேண்டும், ஒரு முறையாவது.
ஜூலை 1998 புதியகலாச்சாரத்தில் வந்த இதன் முழு விமர்சனமும் கீழே க்ளிக் செய்து படிக்கவும்.
**********************************************************************************************
No comments:
Post a Comment