எட்டு ஆண்டுகளின் முன்னர் ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு விஞ்ஞான சோசலிசம் பற்றி எளிமையாக விளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளை அவர்களிடம் படிக்கத் தரக்கூடிய தமிழ் நூல்களையும் தேடினேன். கையில் கிடைத்த யாவும் வளர்ந்தவர்களுக்குப் பயன்படக்கூடியதாகவே இருந்தன.
அவ்வேளையே, படிப்பறிவுக்கு வாய்ப்புக் கிட்டாத தொழிலாளர், விவசாயிகளுக்கும் மற்றும் மாணவர்க்கும் பயன்படக்கூடியதாகச் சிறு நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
என் மகள் குந்தவி 9ம் ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.அவளை மனத்தில் வைத்துக் கொண்டே கடித வடிவில் இந்சிறுநூலை எழுதினேன். இக்கடிதங்கள் மூலம் கூறப்படுவது மன்னர்களது வரலாறு அல்ல. மனித வரலாறு; விஞ்ஞானபூர்வமாகக் கூறப்படுகிறது. இன்று எம் நாட்டுப் பள்ளிகளில் கற்பிப்பது யாவும் கற்பனாவாத, கருத்து முதல்வாத வரலாறே. அதில் மன்னர்களே வரலாற்றின் கதாநாயகர்; மக்களல்ல; உற்பத்திக் கருவிகளல்ல;அவற்றின் வளர்ச்சியல்ல.
..
குந்தவிக்குக் கடிதங்கள்
*****************************
குரங்கு நிலையிலிருந்த ஆதி மனிதன் கல்லைக் கருவியாக எடுக்கிறான். இன்று உலகம் முழுவதும் சோஷலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முன் நிற்கிறான். இவ்வளர்ச்சியின் வரலாற்றையும் அதன் வீதி முறைகளையும் இச்சிறு நூல் எளிமையாக கூறிகிறது.
..
மான்விழிக்கு கடிதங்கள்
******************************
சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்கள், அவைகளின் இயல்புகள் மற்றும் செயல்பாட்டை எளிமையான விளக்கி வெளி வந்த முதல் தமிழ் நூல்.
ஆசிரியர் செ.கணேசலிங்கன்
..
விலை : ரூ. 40
..
பக்கங்கள் 172
..
பக்கங்கள் 172
..
வெளியீடு :
***************
***************
குமரன் பப்பிளிஷர்ஸ்
சென்னை -26
..
கிடைக்குமிடம்
***************
கீழைக்காற்று
***************
கீழைக்காற்று
தொலைபேசி 28412367
No comments:
Post a Comment