செப்டம்பர் 11 என்றதும் உடனடியாக அனைவர் நினைவிலும் நிழலாடுவது நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் கீழ்நோக்கி சரியும் காட்சிதான். ஆனால் உலகெங்கிலும் விடுதலைக்காகப் போராடிவரும் மக்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது வேறு காட்சி.
முப்பதோரு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11 ஆம் தேதியில்தான், சிலெ நாட்டு மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரதுத் தலைவர் சால்வதார் அயண்டே படுகொலை செய்யப்பட்டார்.
..
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.தனக்கு விசுவாசமான சிலெ நாட்டு ராணுவ அதிகாரிகளைக் கொண்டு, குடியரசுத் தலைவர் மாளிகையை விமானம் மூலம் குண்டு வீசிக்கொளுத்தி, டாங்குகளால் இடித்து தகர்த்து, குடியரசு தலைவர் அயண்டேவைக் கொன்றது; அவருக்குப் பக்கபலமாக இருந்து தங்கள் இன்னுயிரை இழக்கும் மனோதிடத்துடன் இறுதிவரை போராடிய நாற்பது பேரையும் படுகொலை செய்தது. இது 1973 ஆம் ஆண்டில் அதே செப்டம்பர் 11 ஆம் தேதியில், அதே போன்றதொரு செவ்வாய் கிழமையில்தான் நிகழ்ந்தது.
..
சுடப்பட்டு இறப்பதற்கு முன்பு ரேடியோவில் அயண்டே ஆற்றிய செய்தியிலிருந்து:
.
அவர்களிடம் உள்ள வலிமையால் நம்மை நசுக்கி விடக் கூடும். ஆனால் , சமூக நடவடிக்கைகள் குற்றங்களாலோ வலிமையாவோ நிறுத்தப்படுவதில்லை. வரலாறு நம்முடையது. அதனை மக்கள் உருவாக்குவார்கள்.
.
அவர்களிடம் உள்ள வலிமையால் நம்மை நசுக்கி விடக் கூடும். ஆனால் , சமூக நடவடிக்கைகள் குற்றங்களாலோ வலிமையாவோ நிறுத்தப்படுவதில்லை. வரலாறு நம்முடையது. அதனை மக்கள் உருவாக்குவார்கள்.
.
அயண்டே மரணம் குறித்து ஃபிடல் காஸ்ட்ரோ
நிராயுதபாணியான கருத்துகள் பலமுறை மிருக பலத்துடன் நசுக்கப்பட்டிருக்கின்றன.பேசிய வார்த்தையையும் எழுதும் எழுத்தையுமே ஆயுதங்களாக எந்நாளும் கொண்டிருந்த அறிவுஜீவி ஒருவர்,ஆயுத நடவடிக்கையின் மூலம் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தும் ராணுவ படையை எதிர்த்து நின்று தீரத்துடன் போராடியதை வரலாறு முன்னெப்போதும் கண்டதில்லை.
.
சிலெயின் ஒவ்வொரு தொழிலாளியின் கையிலும் ஒவ்வொரு விவசாயியின் கையிலும் துப்பாக்கி இருந்திருந்தால், இது போன்ற பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திருக்கவே முடியாது.
வெளியீடு
குறிஞ்சி
98/5, மத்திய வருவாய் குடியிருப்பு,
98/5, மத்திய வருவாய் குடியிருப்பு,
அண்ணாநகர் மேற்கு,
சென்னை - 40
.
Related:
..
1 comment:
அயண்டே அல்ல..அலண்டே என்பதே சரியானது.
Post a Comment