ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் , இது அத்தனை சுலபமல்ல. காரணம், வேறேந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம்.
ஸ்டாலினின் முழுமையான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்நூல், சோவியத் ரஷ்யா உருவான கதையையும் சேர்த்தே விவரிக்கிறது.
இறுதிக் காலக்கட்டங்களில் லெனின் எழுதிய கடிதம் பற்றி
நூலில் இருந்து
லெனின் - ஸ்டாலின் உறவில் இறுதிவரை எந்தவித விரிசலும் கிடையாது. ட்ராட்ஸ்கி போன்றோர் கூச்சலிட்டபடி, குடுமிப்பிடி சண்டை எல்லாம் இல்லை. தவிரவும், அவர் ஸ்டாலினை மட்டும் கடுமையாக விமர்சிக்கவில்லை. கட்சியிலுள்ள அத்தனைப் பேரையும், விமர்சித்திருந்தார்.
இந்தக் காரணத்துக்காகத்தான் லெனினின் இந்தக் கடிதங்களை கட்சி நீண்ட காலத்துக்கு வெளியிடவில்லை.
இருந்தாலும், லெனினிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்ததை ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் மரணமடைந்த போது, அவரது மேஜை டிராயரில் லெனினின் கடிதமும் காணப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக வருந்தினார் ஸடாலின்.
லெனின், ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கவில்லை. ட்ராட்ஸ்கியையும் சேர்த்தே விமர்சித்திருந்தார். ட்ராட்ஸ்கிக்கு இது பற்றி பின்னர் தெரியவந்த போது, அதிர்ச்சியடைந்த அவர், லெனினின் உயிலையும் இறுதிக் கடிதங்களையும் வெளியிட வேண்டாம் என்று வாதாட ஆரம்பித்தார். தனது இறுதி நாள்களில் லெனினால் தெளிவாகக் சிந்திக்க முடியாமல் போய்விட்டது. அதனால்தான் யோசிக்காமல் கொள்ளாமல் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், லெனினின் உயில் வெளியிடப்பட்டது. மக்கள் யோசித்தனர். ட்ராட்ஸ்கி , ஸ்டாலின் இருவரையும்தான் லெனின் விமர்சித்திருக்கிறார். கடிதங்களை வெளியிட வேண்டாம் என்றார் ட்ராட்ஸ்கி. ஆனால் ஸ்டாலினோ அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே உயிரைக் கொடுத்துப் போராடியவர் ஸ்டாலின். கட்சியில் இணைவதற்கு முன்பாகவே கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர்.
..
ட்ராட்ஸ்கியை அப்படிச் சொல்ல முடியாது. புரட்சி வெற்றி பெறும் சமயமாகப் பார்த்து , என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஓடி வந்து ஓட்டிக் கொண்டார்.ஸ்டாலினுடன் ஒப்பிட்டால், ட்ராட்ஸ்கி பல படிகள் கீழே இருக்கிறார். லெனினுடன் எப்போதும் விவாதம், சச்சரவு. லெனினின் கொள்கைகளில் பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் , லெனினுக்கு எதிரான தனது பார்வையை பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுத்தமாக் பதிவு செய்தவர் இவர்.
..
தவிரவும் ஸ்டாலினை அறிந்திருந்த அளவுக்கு ட்ராட்ஸ்கியை மக்கள் அறிந்திருக்கவில்லை. அவரை ஓர் அறிவிஜீவியாக மட்டுமே எல்லோரும் பார்த்தார்கள். ஆனால் ஸ்டாலின் வளைத்துக் கட்டி வேலை செய்பவர். அதே சமயம், லெனினே ஆச்சரியத்துடன் பாராட்டும் வகையில் மார்க்ஸிய மெய் ஞானம் கொண்டவர்.
தவிரவும் ஸ்டாலினை அறிந்திருந்த அளவுக்கு ட்ராட்ஸ்கியை மக்கள் அறிந்திருக்கவில்லை. அவரை ஓர் அறிவிஜீவியாக மட்டுமே எல்லோரும் பார்த்தார்கள். ஆனால் ஸ்டாலின் வளைத்துக் கட்டி வேலை செய்பவர். அதே சமயம், லெனினே ஆச்சரியத்துடன் பாராட்டும் வகையில் மார்க்ஸிய மெய் ஞானம் கொண்டவர்.
..
எல்லாவற்றையும் விட, லெனினின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் அளித்த ஒரு பதிலே மக்களை வசீகரித்துவிட்டது.
எல்லாவற்றையும் விட, லெனினின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் அளித்த ஒரு பதிலே மக்களை வசீகரித்துவிட்டது.
ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.
"லெனினுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தலைமைப் பண்பு யாரிடம் இருப்பதாக நினைக்கிறீர்கள்? அவர் இடத்தில் யார்?"
"லெனின் இருந்த இடத்தில் வேறு ஒருவரையும் அவர வைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நபர் நம்மிடம் இல்லை. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டியைத் தலைமைத் தாங்கச் சொல்லலாம் !"
அடுத்து நான்தான் என்று ஸ்டாலின் அறிவித்துவிட வில்லை. ட்ராட்ஸ்கியால் இப்படி பதிலளித்திருக்க முடியுமா?
எனில், இருவரில் யார் தகுதியான ஆளாக இருக்க முடியும்?
ட்ராட்ஸ்கியை பற்றி நூலில் இருந்து
ஐந்தாண்டுத் திட்டம் தொட்ங்கப்பட்ட அடுத்த ஆண்டு ட்ராட்ஸ்கி கான்ஸ்டாண்டிநோபிள் திரும்பினார். ஸ்டாலினைப் பிடிக்காத எல்லோருக்கும் ட்ராட்ஸ்கிதான் ஆதர்சனம். குறிப்பாக, மேற்குலக நாடுகளுக்கு ட்ராட்ஸ்கி என்றால் பரம இஷ்டம். வெறும் வாயை மென்று கொண்டிருந்த அவர்களுக்கு அவ்வப்போது அவல் போடுவார் ட்ராட்ஸ்கி.
..
ஸ்டாலினை விமர்சிப்பார். கம்யூனிஸ்ட் கட்சியை விமரிசிப்பார். மறைமுகமாக, லெனினின் சிந்தனைகளை, எழுத்துக்களை, கொள்கைகளை எதிர்ப்பார். சோவியத், பாட்டாளி வர்க்கம், தொழிலாளர்கள், கூட்டுறவு பண்ணை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவார்.
..
ட்ராட்ஸ்கி சோவியத்தில் இல்லாத சமயத்தில் கூட பிற நாடுகள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தன. ஸ்டாலின் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று அவரை அவ்வப்போது சீண்டிக் கொண்டிருந்தன.
ட்ராட்ஸ்கி சோவியத்தில் இல்லாத சமயத்தில் கூட பிற நாடுகள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தன. ஸ்டாலின் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று அவரை அவ்வப்போது சீண்டிக் கொண்டிருந்தன.
ட்ராட்ஸ்கி எழுதிய சில நூல்களின் பட்டியலைப் பார்த்தாலே அவரது சிந்தனை யோட்டத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். 'ஏமாற்றப்பட்ட புரட்சி' 'அபாயத்தில் சோவியத் பொருளாதாரம்' 'ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி' 'ஸ்டாலினின் மோசடி சிந்தனை' , இன்ன பிற.
என் பணி சதி செய்து கிடப்பதே என்று துடிப்புடன் ஸ்டாலினைச் சுற்றி சுற்றி வந்தார் ட்ராட்ஸ்கி.
மருதன்
..
வெளியீடு
..
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட், சென்னை -18
..
Related:
..
..
1 comment:
தோழர்,
இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அரித்தெடுக்கிறது. அதனை ஏற்படுத்திய விறுவிறுப்பான அறிமுகத்திற்கு நன்றி, பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழர்!!
தோழமையுடன்
ஸ்டாலின்
Post a Comment