கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு பற்றியும், குறிப்பாக, ஊழியர்களைப் பயிற்றுவித்து வளர்த்தெடுக்கும் முறை பற்றியும், கட்சி அமைப்பைச் சீர்குலைக்கும் பலவகையான சந்தர்ப்பவாதப் போக்குகளைக் களைந்து போல்ஷ்விக் முறையிலான கட்சியைக் கட்டியமைப்பது பற்றியும் தோழர்கள் ஸ்டாலின், டிமிரொவ், காகனோவிச், மா சே-துங்ஆகியோரின் செறிவான வழிகாட்டுதல்கள் இச்சிறு நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் ஏற்கனவே "சவுத் ஏசியன் புக்ஸ்" நிறுவனத்தினரால் மூன்று முறை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வெளியீடுகளில் ஸ்டாலினது மேற்கோள்களை நீக்கியும், ஸ்டாலின் பெயரை நீக்கியும் வெளியீட்டு உள்ளனர்.
இதை நீக்காமல் அப்படியே வெளியிட்டால், நூலைப் படிக்கும் இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சி அணிகள், தலைவர்களைக் கேள்வி கேட்டு 'கட்சி கட்டுபாட்டை' மீறி விடுவார்களோ என்ற அச்சத்தில் நீக்கியுள்ளார்கள் போலும் !
அரசியல் சித்தாந்தத்தில் மட்டுமல்ல; மொழிபெயர்ப்பிலும் கூட தமது கைவரிசையைக் காட்டுமளவுக்கு அவர்கள் தரம் தாழ்ந்து போயுள்ளனர். மேலும் கட்சியுடனும் மக்களுடனும் நடைமுறை வேலைகளுடனும் தொடர்பற்ற அறிவுத்துறைனரைக் கொண்டு மார்க்சிய - லெனினிய நூல்களை மொழிபெயர்த்தால் எத்தகைய தீங்கு ஏற்படும் என்பதற்கும் இவர்களது மொழிபெயர்ப்புகளே எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
அவர்களால் நீக்கம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்த்தும் புதிதாக மொழியாக்கம் செய்தும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நூல் "கீழைக்காற்று" வெளியீடாக வருகிறது.
போலி கம்யூனிசத்தை இப்புவிப் பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் போராட்டத்தில் புரட்சிகர நேர்மையுடன் கூடிய மொழிபெயர்ப்பும் ஒரு முக்கிய பங்காற்றும் என்பதை வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்.
ஆசிரியர் குழு
.
புதிய ஜனநாயகம்.
..
வெளியீடு & கிடைக்குமிடம்
.
.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
..
விலை ரூ 15
No comments:
Post a Comment