புத்தகத்தின் தலைப்பு பிரதிபலிப்பதைவிட பொருளடக்கம் விரிவானது.
முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸ¤க்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் அடங்கி யிருக்கின்றன.
..
இரண்டாவதாக, தொழிலாளி வர்க்கத்தின் பொதுவான வர்க்க கடமைகளின் அடிப்படையில்தான், தொழிற் சங்கங்களின் கடமைகளை வரையறுக்க முடியுமாதலால், தொழிற்சங்க பிரச்சினைகளை எல்லையாகக் கொண்ட குறுகிய கூட்டைத் தாண்டி, தொழிலாளர் இயக்க பிரசினைகளைப் பற்றி மார்க்ஸ¤ம், எங்கல்ஸ¤ம் வகுத்த அரசியல் கொள்கையையும் புத்தகம் ஆராய்கிறது.

மூன்றாவதாக, எல்லா விஞ்ஞானங்களையும் விட சிறந்த அரசியல் விஞ்ஞானம் சரித்திரம்ல் இதர விஞ்ஞானங்களைவிட அதிகமாக, வர்க்க கண்ணோட்டத்தைப் பெற்றது சரித்திரம். எந்தவிதமான கட்சிப் பொறுப்போ, அரசியல் பொறுப்போ இல்லாதவரக்ள்தான், அல்லது இந்தப் பொறுப்புணர்ச்சியை இழந்தவர்கள்தான், நிகழ்காலத்துடன் ஒட்டுதல் இல்லாமல், இறந்த காலத்தை, சரித்திரத்தை, தனிமைப்படுத்தி ஆராய முடியும்.
..
தஸ்தாவேஜுகளை சேகரித்து வைத்திருப்பவனுக்கும், சரித்திராசியனுக்கும் வித்தியாசமில்லை என்று நம்புகின்ற ஜனங்கள் இருக்கிறார்கள்; முதல்வன் கடந்தகால தஸ்தாவேஜுகளை சேகரித்து வைக்கிறான்; சரித்திராசிரியன் அந்த தஸ்தாவேஜுகளைப் பற்றி, இறந்தகாலக் கூட்டிற்குள்ளேயே இருந்து விமர்சனம் செய்கிறான்...இதுதான் வித்தியாசம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது தவறு.
..
கடந்த காலத்தின் தஸ்தாவேஜுகளை சரித்திராசிரியன் பயன்படுத்திக் கொள்கிறான்ல் ஆனால் , அந்த தஸ்தாவேஜுகளின் எல்லைக்கு அப்பாலுள்ள விஷயங்களை அவன் கிரஹிக்காவிட்டால், கடந்த காலக் கூட்டைவிட்டு வெளிவராவிட்டால், பழைய சரித்திர சம்பந்தமான தேதிகள் எழுப்பும் வேலிகளுக்கு மேலே அவன் கண்கள் பார்க்காவிட்டால், அவன் தன் உழைப்பின் மதிப்பை வெகுவாக குறைத்துக் கொள்கிறான்.
..
கடந்த காலம் நம்முடைய தற்காலப் போராட்டத்துக்கு உதவவேண்டும். இல்லாவிட்டால், அதைப் படித்தறிவதில் நேரம் செலவழிப்பதில் பிரயோசனமுல்லை. உயர்ந்த எதிர்காலத்துக்காக நாம் நடத்தும் போராட்டத்தில், கடந்த காலத்தின் வெற்றி தோல்விகளின் அனுபவங்கள் நமக்கு ஆயுதங்களாகும். உலகத்தை படித்தறிவது மாத்திரமல்ல, அதை மாற்றியமைப்பது நம் கடமை.

மார்க்ஸ¤ம், எங்கெல்ஸ¤ம் அளித்துள்ள பிதுரார்ஜித சம்பத்தை எடுத்துக்கூற முற்பட்டபோது, ஆசிரியர் இந்தக் கருத்தில்தான் முனைந்தார். தொழிற்சங்க இயக்கத் துறையிலும், பொருளாதாரப் போராட்டத் துறையிலும், மார்க்ஸ¤ம் எங்கெல்ஸ¤ம் கூறியுள்ள அபிப்பிராயங்களை தீர்க்கமாகப் பரிசீலனை செய்த பின், நாம் காலம் தாழ்ந்து இந்த வேலையைச் செய்கிறோமென்று நான் உணர்ந்தேன்.

மார்க்ஸ் மறைந்த ஐம்பதாவது ஆண்டு விழாவுக்கு நாம் காத்திருக்கக் கூடாது. தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க இயக்கத்தைப் பற்றியும் பொருளாதாரப் போராட்டத்தைப் பற்றியும், மார்க்ஸ், எங்கெல்ஸ் கொண்டிருந்த சகல் அபிப்பிராயங்களையும் நீண்ட காலத்துக்கு முன்னரே தொகுத்திருக்க வேண்டும். ஆம், நாம் காலம் கடத்திவிட்டோம். எனினும், ஒரு பொழுதும் செய்யாமல் இருப்பதைவிட , காலம் தாழ்ந்து செய்வது மேல்.

மார்க்ஸ¤ம், எங்கெல்ஸ¤ம் நவீன சகாப்தத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களே எழுதியவற்றால் மாத்திரமல்ல, அவர்கள் போர்க்களத்திலிருந்து பிரிந்தபின், அவர்களுடைய சிறந்த சிஷ்யர்கள்,அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், ஆற்றிவரும் பணியும் அவர்களை நவீன சகாப்தத்தைச் சேர்ந்தவகளாக்குகிறது. அதாவது, நம்முன் நிற்குமிந்த பிரச்சனைபற்றிய லெனின், ஸ்டாலின் கருத்துகளையும் நாம் கவனமாக ஆராய்ந்தறிய வேண்டும்...
புரட்சிகரமான சர்வதேச தொழிற்சங்க இயக்கத்தின் கொள்கைகளையும், போர்த்தந்திரங்களையும் மார்க்ஸிய ரீதியில் பரிசீலனை செய்யும் மகத்தான, சிக்கலான கடமைக்கு உதவும் ஆரம்ப முயற்சியாக, ஊக்குவிக்கும் முயற்சியாக இப்புத்தகம் பயன்பட்டால், இந்தப் பிரசுரத்தில் நோக்கம் பூர்த்தியாகிவிடும்.
..
ஏ.லாஸோவஸ்கி
..
மாஸ்கோ,1933, மார்ச் 14
மாஸ்கோ,1933, மார்ச் 14
தொகுத்தவர்:
ஏ.லாஸோவஸ்கி
மொழிபெயர்ப்பு:
எஸ்.ராமகிருஷ்ணன்.
..
வெளியீடு
அலைகள் வெளியீட்டகம்
அலைகள் வெளியீட்டகம்
சென்னை - 600 024
.
விலை ரூ 70
விலை ரூ 70
.
பக் 160
பக் 160
No comments:
Post a Comment