பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, November 7, 2007

"23 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்" நவம்பர் 2007

குஜராத் 2002: இந்து மதவெறி பயங்கரவாத கோரம்

"மோடி வெளிப்படையாக சொன்னார்: ' நமக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. நம்மால் முடிந்த அனைத்தும் செய்வோம். அதற்கு பிறகு கால அவகாசம் தர முடியாது' என்று. எமக்கு தேவையான ஆட்களும் ஆயுதங்களும் வந்தன. மூன்று நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து முடித்தோம்." - ஹரேஸ் பட், வி.இ.ப. எம்.எல்.ஏ

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்: நீதித்துறையின் பயங்கரவாதம் !

ஜெயாவுக்கு எதிரான டான்சி நிலபேர ஊழல் வழக்கிலும்; ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.பி.க்களுக்கு நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும், ஊழலுக்கும், இலஞ்சத்திற்கும் புது கொள்கை விளக்கம் கொடுத்து, அக்கிரமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள். முதலாளித்துவ வர்க்க வெறி, மேல்சாதித் திமிர் இரணெடும் கலந்து உருவான சட்டபூர்வ ஆதிக்க சக்திகள்தான் நீதிபதிகள். இப்படிப்பட்டவர்களின் நடத்தையைக் கண்காணிக்க தேசிய கமிசன் அமைக்கப்படுமானால், அக்கமிசன் நீதிபதிகளின் முன் சோளக்காட்டுப் பொம்மையாகத் தான் இருக்குமே ஒழிய, சிம்ம சொப்பனமாக இருக்காது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத நீதிமன்றங்களையே கலைக்கக் கோரி மக்களை அணிதிரட்டுவது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.

மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவிப் பொருட்களின் ஒதுக்கீடுகளை மைய அரசு பெருமளவு குறைத்து விட்டதாலேயே , மே.வங்கத்தில் ரேசன் பொருட்களை முறைப்படி விநியோகிக்க முடியவில்லை என்று மைய அரசு மீது குற்றம் சாட்டுகிறார், சி.பி.எம். கட்சி எம்.பி யான பிருந்தா கரத்.

மே.வங்கம் மட்டுமல்ல; உலக வங்கியின் உத்தரவுப்படி, நாடெங்ககும் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கு ரேசம் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இந்த உண்மைகளை மக்களிடம் விளக்கி, மைய அரசுக்கு எதிராக மக்களை திரட்டிப் போராடுவதை விடுத்து, போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, உழைக்கும் மக்களின் உணவுக் கலகங்களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது மே.வங்க 'இடதுசாரி' அரசு.

இந்நிலையில் 30 ஆண்டுகாலமாகப் பொற்கால ஆட்சி நடப்பதாகப் புளுகிக் கொண்டு, அடித்தட்டு மக்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட பதுக்கி விற்று, ஏழைகளின் வயிற்றிலடிக்கும் கொள்ளைக் கூட்டமாக சீரழிந்துவிட்ட சி.பி.எம் கட்சியை, உழைக்கும் மக்களுக்கான கட்சி என்று கருதுவதற்கு அடிப்படை எதாவது இருக்கா?

பார்ப்பன ஜெயாவின் "நீதிவதம்" !

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக தி.மு.க அரசைக் கலைக்கலாம் என்றால், நீதிபதிகளையும், நீதிமன்ற நடைமுறைகளையும், அதனின் தீர்ப்புகளையும் தனது வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்தி வருவதற்காக ஜெயாவைச் சிரச் சேதமே செய்யலாம் ஜெயா, சமயத்திற்கு ஏற்றபடி, மாண்புமிகு நீதிபதிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்; அவர்களுக்கு பிஸ்கெட்டும் போட்டிருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இவையாவும், ராமன் பாலம் போல பதினெழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த புனைவு அல்ல. கடந்த பதினைந்து ஆண்டுகளாக நம் கண்முன் நடந்துவரும் உண்மை.

முஷாரப் எதிர்ப்பு" முனை மழுங்கிய போராட்டம்!

பாகிஸ்தானில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடந்துவரும் இராணுவ சர்வாதிகார ஆட்சி என்பது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்தோடு தொடர்புடையது. பாகிஸ்தான் அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றப்பட்டு இருப்பதை எதிர்த்துப் போராடுவதுதான், அந்நாட்டில் ஜனநாயகம் மலர்வதற்கான முதல் நிபந்தனை. ஆனால் சட்டபூரவ எதிர்தரப்பும், மத்தியதர வர்க்கமும் ஜனநாயகத்திற்காக நடைபெற வேண்டிய புரட்சிகரப் போராட்டத்தை, வெறும் முஷாரப் எதிர்ப்பாக சுருக்கிக் கேலிக்கூத்தாக்கி விட்டனர். முஷாரபைத் தூக்கியெறியும் இந்த அரசியல் போராட்டத்தைக் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்து கொடுத்துவிடுவார்கள் என அவர்கள் காத்துக் கிடப்பதுதான் இன்னும் அவலமானது.

சென்னை நகர விரிவாக்கத் திட்டம்:உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி!

அடையாறு கரையோரக் குடிசைகள் இடிப்பு.
75,000 குடிசைவாசிகளுக்கு சென்னை நகரைவிட்டு வெளியேற நோட்டீசு.
கொட்டிவாக்கத்தில் இருந்து செம்மண்சேரி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள சிற்றூர்களை அழித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பு.

- இது தான் சென்னை பெருநகர விரிவாக்கத் திட்டம் !.

இதுவா சமூக நீதி?

ஓட்டுக் கட்சிகளின் "சமூக நீதி"க் கொள்கையால், தீண்டாமையை ஒழித்து கட்டிவிட முடியாதுஎன்பதற்கு "இரட்டை டம்ளரே சாட்சி"இனி நக்சல்பாரி வழியில் , தீண்டாமையை ஒழிப்பதற்கான புதிய ஜனநாயகப் புரட்சியில் பங்கு கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது!

பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி ! கொலைவெறி !

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க பயங்கரவாதிகள்

'மார்க்சிஸ்டு'களின் பார்ப்பன சேவை

இது 'சூத்திர ஆட்சியா' பார்ப்பன ஆட்சியா?
தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு!
தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!

வெனிசுலா அதிபர் சாவேஸின் பொருளாதாரக் கொள்கை:
சோசலிசமா?முதலாளித்துவ சீர்திருத்தமா?

நேபாளம்: சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் அரசியல் உத்தி

புதிய ஜனநாயகம்
மார்க்சிய -லெனினிய அரசியல் ஏடு
..
தொகுதி: 23
இதழ் 1
அக்டோபர் 2007
விலை ரூ 7
பக்கங்கள் 36

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •