பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, October 28, 2007

"டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்"


நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், அவர் ஓர் ஓவியர், கவிஞர், ராணுவ வீரர், விமர்சகர், ஆசிரியர், விரிவுரையாளர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் கோட்பாட்டாளராகவும் விளங்கினார். அவர் 1930களில் கொள்கைப்பிடிப்புள்ள கம்யூனிஸ்டாக உருவெடுத்தார். அது அவரை ஸ்பெயின் மற்றும் சீன யுத்தமுனைக்கே இட்டுசென்றது.
..
1937 ஜூலையில் சீன- ஜப்பான் யுத்தம் தொடங்கிய ஆறு மாத காலத்தில் அவர் சீனாவை வந்தடைந்தார். அப்பொழுது வடக்கு சீனாவை , ஜப்பான் ஆக்கிரமித்திருந்தது. பெத்யூன் யெனானை அடைந்து மா சே துங்கைச் சந்தித்தார். ஸ்பெயின் நாட்டு யுத்தத்தில் கிடைத்த அனுபவங்களை அவர் மாவோவிடம் எடுத்துக்கூறினார். மாவோ, உடனடியாக ஒரு நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கும்படி பெத்யூனைக் கேட்டுக் கொண்டார். அது முதல் வடக்கு சீனாவின் உட்பகுதியில் அமைந்த யுத்தமையத்தில் மையத்திற்கே சென்றார்.
..
அங்கே அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். சில நேரங்களில் நாற்பது மணி நேரம் கூடத் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்தார். இந்த அசாதாரணமான அர்ப்பணிப்புத் திறனால் அவருடைய புகழ் சீனா முழுவதும் சென்று அடைந்தது.
..
எப்படிப்பட்ட புகழினை பெத்யூன் அவர்கள் பெற்று இருந்தார்கள் என்பதை அறிய படைவீரர்கள் போரிடும் போது எழுப்பிய முழக்கங்களே சாட்சி ....
..
தாக்குங்கள் !நமது காயப்பட்டவர்களைப் பராமரிக்கப் பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார்!
..
பெத்யூன் காயப்பட்டவர்களை கவனித்தது, பெத்யூனை பாதுகாப்பாளர்கள் கவனித்தது பற்றி அறிய ஒரு சம்பவம்
..
சூ குங் கன் என்ற கிராமத்தில் எதிரிகள் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு இருந்த பெத்யூனை தாங்கள் கிளம்புங்கள் மற்றவர்கள் மீதி காயம்பட்டவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று பாதுகாப்பாளர் கிங் எடுத்துக்கூறினார். அதனை எப்பவும் போலவே அலட்சியப்படுத்திவிட்டு பெத்யூன் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு இருக்கையில் அவர் பின்னாலே கிங் நின்று கொண்டு இருந்தார். இதனை பின்னர் பார்த்து "இங்கே ஏன் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?" என்று பெத்யூன் கேட்டார்.
..
அப்போது கிங் "பாய் சூ என் தை பூ! (நார்மன் பெத்யூன் மருத்துவர்)" என்று துயருடன் அழைத்தார். "நான் தான் இங்கு உங்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பு, உங்களை ஏதாவது குண்டு தாக்கினால், நான் உங்களுக்குப் பின் நின்ரால், நானும் உங்களுடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவேன். அப்போது கூட உங்களைச் சீக்கிரமே இந்த இடத்தை விட்டு அகலும்படி வற்புறுத்திச் சொல்லவில்லை என்று குற்றம் என் மீது சாட்டப்பட்டாலும், ஒருவரும் நான் மட்டும் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு, உங்களை ஆபத்தில் சிக்க வைத்ததாகச் சொல்ல முடியாது அல்லவா?"
..
இந்த தாக்குதல் இடத்தில் மட்டும் 69-மணி நேரத்தில் 115 அறுவைச்சிகிச்சைகள் பெத்யூன் செய்து முடித்தார்.
..
இதே போல ஒரு முறை அறுவைச்சிகிச்சை செய்துகொண்டுருந்த இடத்திலிருந்து பத்து நிமிடத் தொலைவில் ஜப்பான் படை முன்னேறிக்கொண்டிருந்த ஒர் அழுத்தமான நிலையில் அறுவைச்சிகிச்சைக் கத்தி வெட்டியதைத் தொடர்ந்து செப்டிசீனியாவால் பாதிக்கப்பட்டு பெத்யூன் உயிர்நீத்தார்.
..
முதன் முறையாக மருத்துவத்தையும், நவீன துப்புரவு முறையையும் எண்ணற்ற சீனக் கிராமங்களுக்குக் கொண்டு வந்து, அதைப் பல குகைகளிலும், பல மருத்துவமனைகளிலும் நிர்மாணித்ததுடன் பல மருத்துவப் பள்ளிகளையும் நிறுவியவர் பெத்யூன். ஆகவே சீன மக்கள் அவரது இறப்பைப் பெரும் துக்கத்துடன் நினைவு கூர்ந்தார்கள்.
..
"எந்த மனிதனின் இறப்பைக் காட்டிலும் அவரது இறப்பிற்காக நாங்கள் அதிகம் இரங்குகிறோம்." என்று கூறிய மா சே துங் தனது நாட்டு மக்களுக்குச் சொன்னார்:

"சாதராண மனிதர்கள் மேல் பெத்யூனுக்கு இருந்த கரிசனம் என்பது நாம் அவைவரும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். நாம் அவரது இறப்பை நினைவு கூர்வது என்பது, அவரது ஆளுமை நம் மேல் எவ்வளவு ஆழமாகப் பதித்துள்ளது என்பதைக் காட்டுவதாகும். நாம் அனைவரும் அவரது சுயநலமற்ற உத்வேகத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்குப் பயனுள்ள தனிமனிதர்களாய் நாம் ஆவதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். ஒரு தனி மனிதனுக்குப் பெரும் திறன் அல்லது குறைந்த திறன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவர் மக்களது நன்மைக்காகத் தனது சொந்தச் சுயநலத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், அவர்தான் முக்கியமான மனிதராகவும், நேர்மையாளராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் கருதப்படுவார்."
..
சிட்னி கார்டன்
டெட் ஆலென்
..
தமிழில் சொ.பிரபாகரன்
வெளியீடு
சவுத் விஷன்
கோபாலபுரம்
சென்னை 600 086

..
பக்கங்கள் 415
விலை ரூ 125

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •