மனித வரலாற்றில் முதலாளித்துவத்துக்கு முந்திய கட்டத்தை ஆராயும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முழுமையாகக் கையாள முடியும் என்று "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூல் நன்கு நிரூபித்திருக்கிறது. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக- பொருளாதார அமைப்புக்குப் பொருந்துகின்ற வளர்ச்சி விதிகள் பண்டைய சமூகத்துக்கும் பொருந்துகின்றன என்று உலக விஞ்ஞானத்தில் முதன்முதலில் எடுத்துக் காட்டியவர் எங்கெல்ஸ்.
குறிப்பாக, பண்டைய வரலாறு மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகளில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் இருக்கின்றன, எந்த சமூகப் பிரிவுகள், குழுக்களின் அடிப்படையான பொருளாயத நலன்கள் மோதுகின்றனவோ அந்தப் பிரிவுகள், குழுக்களுக்கு இடையில் போராட்டம் நடைபெறுகிறது. முடிவில் பூர்விகச் சமூக பொருளாதார அமைப்பை வர்க்க-பகைமுரண்பாட்டு சமூகத்தின் ஏதாவதொரு வடிவம் - அடிமையுடைமை சமூகம் ( கிரேக்கர்கள், ரோமானியர்கள்) அல்லது நிலப்பிரபுத்துவ சமூகம் (ஜெர்மனியர்கள்) அகற்றுவதற்கு சமூகப் புரட்சி சாதனமாயிற்று.
நவீன மார்க்சிய வரலாற்று விஞ்ஞானம், பண்டைக்கால வரலாற்றுக் துறையில் எங்கெல்சினுடைய படைப்பாற்றல் மிக்க பாரம்பரியத்தை ஆதாரமாகக் கொண்டு அவர் சுட்டிக்காட்டிய பாதையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது; புதிய ஆராய்ச்சி முறை களின் தோற்றத்தினால் அதன் வளர்ச்சியில் ஏற்படுகின்ற திருப்புமுனையில் அது அவருடைய தத்துவப் பாரம்பரியத்துக்கு மீண்டும் மீண்டும் திருப்புகிறது. பூர்விக சமூகத்தின் சாராம்சத்தைப் பற்றியும் வர்க்க - பகைமுரண்பாட்டு சமூக அமைப்புகளை நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் மார்க்சிய மூலவர்கள் உருவாக்கிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வரலாற்றாசிரியர்கள் இன்று திரட்டியுள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன. குறிப்பிட்ட யுகங்கள், கலாச்சார வரலாற்றின் பொது விதிகளின் செயல்பாட்டை அதிகமான விவரங்களுடன் விரித்துக் கூறுவதை இத்தத்துவம் சாத்தியமாக்குகிறது.
இந்த அர்த்தத்தில் எங்கெல்சின் தத்துவப் பாரம்பரியம் அதன் முழுப் பொருத்தத்தையும் கொண்டிருக்கிறது; "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற அவருடைய நூல் பண்டைய வரலாற்றின் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய மெய்யான இயக்கவியல் பகுப்பாய்வுக்கு மூலச்சிறப்பான உதாரணமாக இருக்கிறது.
வெளியீடு
..
முன்னேற்றப் பதிப்பகம்,.
மாஸ்கோ
..
முன்னேற்றப் பதிப்பகம்,.
மாஸ்கோ
No comments:
Post a Comment