பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Monday, November 26, 2007

'தவிப்பு' - நூல் விமர்சனம்

"துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது" அரசியல் சித்தாந்தமல்ல

துப்பாக்கியால் ஞானஸ்தானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
உயிரைத் துறக்கும் போராளுக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?
நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிக்கையாளர்) 'தவிப்பு' எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய 'நந்தன்' சிறப்பாசிரியர் சுப.வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

"பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றைத் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்" என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.

தனி நாடா - இல்லையா என்பது குறித்த அரசியல் விவாதம் நமது நூல் விமரிசனக் கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.ஆனால், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இருக்கின்ற தொப்பூள் கொடி உறவை மறுக்கவியலாது.இனி கதைக்கு வருவோம்.

********
இந்திய ஒருமைப்பாடு, அநீதிக்கெதிரான மிதவாத எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட, அரசியலெல்லாம் அதிகம் தெரிந்து கொள்ளாத தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான விஜயன்.

தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் பல இடங்களில் குண்டு வெடித்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

குண்டு வெடிப்பை நடத்திய தமிழ்நாடு விடுதலை புரட்சியாளர் குழு (தவிப்பு) என்கிற அமைப்பின் தலைமைக் குழுவினருடைய புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை விஜயனிடம் காட்டுகிறார்.

விதவிதமான உயர்கல்வி கற்ற தமிழ் இளைஞர்களின் படங்களுக்கு நடுவே ஆனந்தி ! அவனுடைய கல்லூரித் தோழி, நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்த விஜயனிடம் "உங்களுக்கு இவளைத் தெரியுமா?" என்று கேட்கிறார் உளவுத் துறை அதிகாரி. "தெரியும்" என்கிறான் விஜயன். "அது எங்களுக்கும் தெரியும்" என்று பதில் வருகிறது.

மறுநாளே தவிப்பு குழுவினர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரைக் கடத்தி விட்டனர் என்ற செய்தி வருகிறது. தவிப்பு குழுவினரைச் சந்தித்துப் பேசும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயன் புறப்படுகிறான்.

ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தது முதல் அவளை நேரில் சந்திக்கும் தருணம் வரை விஜயனின் சிந்தினையில் ஆனந்தியைப் பற்றிய பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

-விஜயனின் நினைவுகளினூடாக ஆன்ந்தியின் பாத்திரம் நாவலில் நிறுவப்படுகிறது.

ஆனந்தியை நேரில் சந்திக்கிறான் விஜயன், " நீ எப்படி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய்" என்று கேட்கிறான். எண்பதுகளில் போலீசால் கொலை செய்யப்பட்ட நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலனின் (நாவலின் ராஜன்) கதையைச் சொல்லி, " அதுவரை வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை" என்று அப்போதுதான் தெளிந்ததாகச் சொல்கிறாள் ஆனந்தி.

தனித் தம்ழ்நாடு கேட்பதற்கான நியாயங்கள் குறித்து ஆனந்தியும் அவளது தோழர்களும் வைத்த வாதங்கள் எதற்கும் விஜயனிடம் பதில் இல்லை. ஆனால் வன்முறை இதற்கு வழியல்ல என்ற கருத்து அவனிடம் ஓங்கி நிற்கிறது.

தவிப்பு குழுவினரின் கோரிக்கைகளில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனடிப்படையில் நிலைய அதிகாரி விடுவிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையினூடாக தவிப்பு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சன், தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான். 'எச்சரிக்கையாகப் பயன்படுத்துகிறது' என்று முடிவு செய்கிறது தவிப்பு.

பணமும் ஆயுதங்களும் ஏற்பாடு செய்து தருகிறது உளவுத்துறை. குழிவினரிடம் குடிப்பழக்கமும் உல்லாசமும் பரவுகிறது. பணத்துக்காக போதை மருந்து கடத்தல் துவங்குகிறது.ஆனந்தியும் சில தோழர்களும் எதிர்க்கின்றனர். பிறகு ஒரு நாள் சக தோழர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

விஜயன் அழுகிறான். தன்னைப் போல தெளிவு பெற வாய்ப்பு இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்கிரவர்களாக மட்டுமே இருந்துவிட்டதனால் தான், டெல்லியில் அதிகாரத்தில் வந்து அமரும் யாரோ ஒருவனின் அயோக்கியத் தனத்துக்காக அன்பும் அறிவும் ததும்பும் இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். எனவே அரசியலில் ஈடுபடுவதென முடிவு செய்கிறான்.

செங்கல்பட்டில் இடைத் தேர்தலில் நிற்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கெதிராகப் போட்டியிட்டு வெல்கிறான்.

**********
ஒரு அமைச்சன் தனது சொந்த அரசியல் லாபத்துக்காகப் போராளிக் குழு வொன்றைப் பகடைக் காயாக்கிக் கொண்டான் என்பதல்ல பஞ்சாப், அசாம், காஷ்மீர் பிரச்சினைகளின் அனுபவம், உறவாடி, ஊடுறுவி, கைக்கூலிகளை உருவாக்கிக் கெடுப்பது என்பது, 'ஒருமைப்பாட்டையும்', பிராந்திய மேலாதிக்கத்தையும் காப்பாற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் போர்த் தந்திரமாகவே உள்ளது.

அதேபோல ஆனந்தியுடனான விஜயனின் நட்பும், அவனிடம் தங்கிக்கிடக்கும் ஆனந்தியைப் பற்றிய நினைவுகளும் , எட்டாண்டுப் பிரிவை நியாயப்படுத்துவனவாக இல்லை.

ஆனந்தியின் மரணத்தினால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் விஜயன், அதிகாரிகள் - அமைச்சர் - உளவுத்துறை ஆகிய அனைவரிடமும் நெருங்கியிருந்து சூடுபட்ட பின்னரும், நம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கிறான் - வெல்கிறான். இது வலிந்து ஒட்டவைக்கப்பட்ட முடிவாக இருக்கிறது.

-இவ்வாறு நாவலின் பாத்திரப்படைப்பு, கலைத் தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றை நாவலின் வரம்புக்குளேயே நின்று விமர்சிக்கலாம்.

ஆனால் நாவலின் மையமான கதாபாத்திரங்களான போராளிகள், அவர்களது சிந்தனை, நடவடிக்கைகள், அவை எழுப்பும் கருத்தியல் ரீதியான வினாக்கள் ஆகியவற்றினூடாக 'விடுதலை இயக்கம்' என்பதைப் புரிந்து கொள்வது அதைவிட முக்கியமானது.

இதை ஒரு இயக்கத்தின் கதையாகச் சொன்னால், தியாக உள்ளம் கொண்ட படித்த இளைஞர் குழுவென்று சிறிது வழி தவறியதால் அழிந்த கதை என்று சொல்லலாம்.

அல்லது ஆனந்தியின் கதையாகச் சொல்வதென்றால், கவிதை உள்ளமும் தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு பெண், சக தோழர்களின் தவறுகளால் அநியாயமாகப் பலியான கதை என்று சொல்லலாம்.

"தொடர்கதை முடிவடைந்து பத்து மாதங்களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஓர் வாசகர் "ஆனந்தி செத்துப் போயிருக்க வேண்டியது அவசியம் தானா?' என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார். எனக்குள்ளும் அதே கேள்வி இருக்கிறது" - என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஞாநி.

கதை சொல்லப்பட்டிருக்கிற முறையிலும் சரி, வாசகர்கள் பழக்கப்பட்டிருக்கும் முறையிலும் சரி, இது ஆனந்தியின் கதைதான். எனவே ஆனந்திக்காக வாசகர்கள் வருந்துவதில் வியப்பில்லை.

"பலவீனமில்லாத இயக்கம் இருக்க முடியாது; போராளிகள் மடிந்தாலும் போராட்டம் தொடரும் என்று முடித்திருக்க வேண்டும்." என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார், சுப.வீ.

தவிப்பு இயக்கத்தின் பலம் எது பலவீனம் எது? ஆனந்தியின் உயிர் பிழைத்திருந்தால் - ஆனந்த விகடன் வாசகர் அடையக் கூடிய மன ஆறுதலுக்கு மேல் - வேறென்ன நடந்திருக்கும்? தேர்தல் பாதையில் நம்பிக்கை கொண்ட விஜயனும் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆனந்தியும் உண்மையில் அரசியல் எதிர்த்துருவங்களா?

இந்த கேள்விகளுக்கு நாம் விடை காண முயல வேண்டும்.
**********
(மீதிப் பகுதி இணைக்கப்படும்)

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •