28-10-2007 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் வாசிக்கப்பட்ட கவியரங்கக் கவிதை
கவிதைகளில் இருந்து சில வரிகள்....
"இராமாயணம்
கதைதான் என்றால்
எங்களை ஆளை விடு!
இராமாயணம் வரலாறென்றால்
எங்கள் சம்பூகனைக் கொன்றதற்கு
ராமனின் தலையைக் கொடு!"
************
"இப்போது நடப்பது
அரசியல் ராமாயணம்
இதில் -சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி
அனுமாருக்கு சோ அண்ணன் முறை
சுக்ரீவனுக்கு விசயகாந்த் சொந்தத் தம்பி
விபீடணனுக்கோ வை.கோ உடன்பிறப்பு!
இப்போது வருபவன்
தசரனுக்குப் பிறந்த ராமன்ல்ல;
இவன்
தாராளமயம், தனியார்மயத்துக்குப்
பிறந்த ராமன்.
அன்றைக்குஅன்னிய ராமன்
எங்கிருந்தோ வந்து
இங்குள்ள
சுக்ரீவன் விபீடணனை வைத்து
பொண்டாட்டிக்குப் பாலம் கட்டியதைப் போல...
இன்றைக்கு
அன்னிய அமெரிக்க ராமன்
இங்குள்ள ஓட்டுக்கட்சி
விபீடணரகளை வைத்து
மன்மோகன் அனுமாரை வைத்து
பாலம் கட்டுவதும்
தங்க நாற்கரச் சாலை அமைப்பதும்...
தட்டிக்கேட்கும் தொழிலாளர்களை
கழுத்தை வெட்டுவதும்...
தொழிற்சங்க உரிமைகளின்
மூக்கை அறுப்பதும் தொடர்கிறது...
ஆக்கிரமித்த
ராமனை போல
நமது
விவசாயத்திற்குள்ளே நுழைந்து
விவசாயிகளை அழிக்கிறான்;
தொழிற்துறையில் நுழைந்து
தொழிலாளர்களை விரட்டுகிறான்.
உழைத்து வாழும் மக்களை
உழைக்க வேலையின்றி
உண்ணச் சோறின்றி
உண்ணச் சோறின்றி
ஒதுங்க இடமின்றி -உலகமயக் காண்டீபத்தால்
கொலை செய்யும்
அந்நிய அமெரிக்க ராமன்களோடு
இந்த அயோத்தி ராமனையும்
சேர்த்து முடிப்போம்!
இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...
சமூக விதிப்படிசாதித்தே தீரும்
பாட்டாளி வர்க்கத்தின் அசுர பலம்
இந்த் இராமாயணத்தை முடித்து வைக்கும்!"
துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கிய கழகம்
..
வெளியீடு:
வெளியீடு:
மனித உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்ட கிளை,
மதுரை-11
..
..
விலை ரூ 20
2 comments:
///இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...
///
arumaiyana varigal.. kavithai narambukalai murukketrukirathu..
inge pathivu seythamaikku vaalthukkal
//இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...
சமூக விதிப்படிசாதித்தே தீரும்
பாட்டாளி வர்க்கத்தின் அசுர பலம்
இந்த் இராமாயணத்தை முடித்து வைக்கும்!"//
புத்தகத்தை இங்கு அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி. கவிதைகளை உடனே வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இந்த பதிவு உள்ளது.
Post a Comment