சதிகார, கொலைகாரக் காவிகள் கொக்கரிக்கிறார்கள்....
இந்திய ஜனநாயகத்தின் ஞாபமறதிப் பதிவேட்டில் ஏற்றப்பட்டு விட்ட குஜராத் இனப்படுகொலையை, கொலையாளிகளின் இரத்தக் கவிச்சு வீசும் வாக்கு மூலங்கள் வழியாகவே நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது தெஹல்கா வார இதழ். குஜராத் படுகொலை குறித்து இதுவரை நாம் அறிந்திராத இரகசியம் எதையும் தெஹல்கா வெளிக் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் இது காறும் நாம் பொதுவாக அறிந்திருந்தவை பற்றிக் குறிப்பாகவும், ஆதாரபூர்வமாகவும், குற்றவாளிகளின் வாக்கு மூலமாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. அவ்வகையில் இதுவரை நாம் அறிந்த புலனாய்வு இதழியங்களின் மத்தியில் இந்தப் பணி தனித்துவமிக்கதாய் இருக்கிறது.
மதவெறியை முறியடிக்கும் ஒரே நோக்கத்துக்காகத் தான் வேறு வழியின்றி காங்கிரஸ் அரசை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளோ சம்பிரதாய கண்டனத்துக்கு மேல் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டாளிகளான தி.மு.க, பா.மா.க, ம.தி.மு.க கட்சிகளோ அப்படியொரு சம்பிரதாயக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை.
தெஹல்கா, நவம்பர் 3, 2007 இதழில் வெளிவந்துள்ள இந்தப் பேட்டிகளும் கட்டுரைகளும் இந்தக் கணம் வரை ஊடங்களால் திட்டமிட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன என்பதால், தமிழக மக்களின் பலருக்கு இந்த உண்மைகள் போய் சேரவில்லை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தில் சிறந்ததொரு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மக்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்வதன் மூலம் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்பதால் இவற்றை மொழியாக்கம் செய்து வெளியீடுகிறோம்.
அநீதிகளுக்கு அஞ்சுவது, பணிவது, சகித்துகொள்வது, இறுதியில் அதனுடன் வாழப்பழகிக் கொள்வது என்ற அடிமைப் புத்தி நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் மவுனத்தைக் கலைக்க விரும்பியே இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவருகிறோம். எனவே, இந்த வெளீயிடு உங்கள் மீது தோற்றுவிக்கும் தாக்கம் அபோதைக்கு எழுந்து அடங்கும் கோபமாகக் கரைந்து விடக் கூடாது. அது பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் செயல்பூர்வமான எதிர்வினை ஆகவேண்டும், ஆகும் என்று நம்புகிறோம்.
வெளியீடு: மனித உரிமை பாதுகாப்பு மையம்திருச்சி கிளை
நன்றி தெகல்கா
விலை ரூ 20 /-
No comments:
Post a Comment