உலகமயத்தின் புத்தாண்டு வக்கிரம்!
-------------------- தலையங்கத்திலிருந்து
தேசம், மதம், மொழி, சாதி முதலான எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக புத்தாண்டு சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த எல்லைகளைக் கடப்பதன் உண்மையான பயன், முதலாளிகளின் இலாபத்தில் ஒளிந்திருக்கிறது. புத்தாண்டுக்கான 'தள்ளுபடி விற்பனை' அமோகமாக நடக்கிறது. அதை நிலைநிறுத்த ஏனைய கொண்டாட்டங்கள் பயன்படுகின்றன. ஆக நுகர்வுக் கலாச்சார வெறியும், களி வெறியும், அதற்குத் தேவையான பணவெறியும் ஒருங்கே மனித சித்தத்தில் கலக்கப்படுகின்றன. இவற்றை எட்டுவதற்காக ஊழல்படுத்தப்படும் மனம், கொண்டாட்டத்தில் மட்டும் எப்படி 'ஒழுக்கமாக' நடந்து கொள்ள முடியும்?
எத்தகைய அபாயங்கள் இருந்தாலும் அவையெல்லாம் விதிவிலக்குகள் என்பதாக ஊடகங்கள் ஆறுதல் தருகின்றன. 'பாலியல் வன்முறைக்கு, செக்ஸ் கல்விதான் தீர்வு' என்று அறிவு ஜீவிகள் பாடம் நடத்துகிறார்கள்.
ஆனால், இவை எதுவும் தீயை அணைக்கப் போவதில்லை, சமூக உணர்வை புதிப்பிக்கவேண்டிய திருவிழாக்கள், விலங்குணர்ச்சியின் வக்கிர வடிகாலாக மாற்றப்பட்டுவிட்டன. கிரிமினல்கள் எப்போதாவது குற்றங்கள் செய்வார்கள். புத்தாண்டு அன்று, குற்றவுணர்வின்றியே கூட குற்றமிழைக்கும் மனநிலைக்கு, சமூகமே ஆட்படுத்தப்படுகிறது. இதை பாடம் நடத்தியோ, போதனை செய்தோ திருத்த முடியாது. நட்சத்திர விடுதிகளுக்கும், ஏனைய கேளிக்கை மையங்களுக்கும், உருட்டுக் கட்டைகளைத்தான் அனுப்ப வேண்டும். விலங்குகளை அடித்துத்தான் திருத்த முடியும்.
குஜராத் பாசிசத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
------------------- அட்டைப்பட சிறப்பு கட்டுரைலிருந்து
இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதங்களை 'திரைக்கதை' போல வருணித்தார்கள் 'குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்'. பெரும்பாண்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. 'வருந்துகிறோம்' என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை.
குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? - என்ற கேள்விகளையே ஊடகங்களின் ஆய்வுகள் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.
அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இத்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.
மறுகாலனியாக்க வளர்ச்சியை 'உடலாக'வும், இத்துத்துவத்தை அதை 'ஆன்மா'வாகவும் ஒருங்கிணைக்க முடிந்தததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங் கோட்பாட்டு வாதமும், மதக் கடுங்கோட்பாடு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறு வணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, 'மதச்சார்பின்மை' என்பது அதிக பட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.
ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரிகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.
தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும், சுயநலத்தையும், ஆணவத்தையும். பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளி நாட்டில் குடியேறிய இந்தியர்களும் சான்றாக இருக்கிறார்கள்.
மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு. இது 'இத்துத்துவா' அல்ல 'மோடித்துவா' என்கிறார்கள், சில பத்திரிக்கையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது. எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக. குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.
தெல்கா நிருபரிடம். 'பாபு பஜரங்கி' என்ர இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். "மார்த் ஆத்மி ஹை" ஆம் பிளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், 'குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?' என்பதை விளக்குகிறது.
அந்த முகமூடி, மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த 'வலிமையான பிணைப்பின்' பொருளும் விளங்குகிறது.
சுமங்கலித் திட்டம்:பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!
கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 406 பஞ்சாலைகளில் மட்டும் 38,461 பெண்கள் 'சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் கொத்தடிமைகளாக, சுரண்டப்படுகிறார்கள்." தமிழகத்தில் உள்ள ஜவுளி மில்களின் எண்ணிக்கை 1600. இத்தகைய பெண் கொத்தடிமைகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்பதற்குக் கணக்கில்லை.
உறிஞ்ச உறிஞ்ச வற்றாத இந்த மனித வளத்தின் விலை (அதாவது கூலி) இந்தியாவில் மிகக் குறைவு. மிகவும் குறைவு! ஜவிளித் தொழிலில் இந்தியா கொடிகட்டிப் பறப்பதன் இரகசியம் இதுதான். ஐ.டி தொழிலின் அசுர வளர்ச்சிக்குக் காரணமும் இதுதான்.
காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை
"என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லை?" என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், 'வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத் தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மை தான்.
கலைஞர், ஸ்ரீராமன் மற்றும் சில இலக்கிய வானரங்கள்
"இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்புகளினாலும் அழிக்க முடியாது" என்பதே பார்ப்பன அறிவுஜீவிகள் ஆவேசம்.
10-1-1947 இல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:
"யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்" என்று சர்.இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம். உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகி விடுமா?
எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே எலி,கொசு, தேள், பாம்பு , மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்துமதத்தை விட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?"
தெகல்கா வாக்குமூலங்கள்: இந்து பாசிசத்தின் உளவியல்!
போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும், சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும் அதைச் சுலபமாய் ஆட்டிவைக்கும் மோசடித் தலைமையும் 'தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு - இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்யவேண்டிய காரியம்.
தஸ்லிமா நஸ்ரீன்:
அபலையைத் துரத்தும் இசுலாமிய மதவெறி!
குர் ஆன் உள்ளிட்ட அனைத்து மதநூல்களும் காலப்பொருத்தமற்றவை என்று. அவை காலாவதியாகிவிட்டன என்றும் தான் பிறந்த இசுலாம் மதம் எப்படி பெண்களை அடிமைப்படுத்துகிறது? என்பதையும் விரிவாகப் பேசியும் எழுதியும் வரும் தஸ்லிமா, மதங்களுக்குப் பதில் நாம் மனித நேயத்தையே புதிய நம்பிக்கையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
தஸ்லிமாவுக்கு ·பதவா அறிவித்த இசுலாமிய மதவாதிகள் மோடியை என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமுடியாது என்பதே உண்மை. அப்பாவிப் பெண்னை எதிர்ப்பதில் துருத்தும் வீரம் இங்கே இயல்பாக ஒளிந்து கொள்ளும். இந்தச் சரணடைதலில் 2000 முசுலீம் மக்களின் களப்பலி கண்முன்னே எழுந்து மறைகிறது. இந்தத் துயரத்தின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ளும் இசுலாமி இளைஞர்களும், பெண்களும் இசுலாமிய மதவாதத்திலிருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் நாம் மோடியையும், இசுலாத்தில் இருக்கும் மோசடிகளையும் சேர்த்துத் தண்டிக்க முடியும்.
வேசி.. அறம்.. அனுபவம். - கார்க்கி
பாலஸ்தீனியன் நான் - கவிதை
மக்கள் கலை இலக்கிய கழக மாத இதழ்
போர் 25
குரல் 5,6,7,8
அக்-டிச 2007, ஜன 2008
உள்நாடு ரூ 5.00
ஆண்டுச் சந்தா:ரூ 90.00
சந்தா, படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706
No comments:
Post a Comment