பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Showing posts with label புதிய கலாச்சாரம். Show all posts
Showing posts with label புதிய கலாச்சாரம். Show all posts

Friday, July 11, 2008

"புதிய கலாச்சாரம்" ஜூலை 2008



பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!
----------------தலையங்கம்

மகரஜோதி பொய்!
ஐஸ் லிங்கம் பொய்!
பக்திப் பரவசமும் பொய்!
---------------அட்டைப்பட கட்டுரை


'இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணற்திட்டு என்று சொன்னால், இல்லையில்லை, அது ராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். ' அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் 'இல்லையில்லை, அது இயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெவீகம்! தெற்கு செயற்கை தெய்வீகம்!

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? 'மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பபன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை 'மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள் என்று மட்டும் நாம் கருதமுடியும் என்ன வகை பகதி இது?

மூட நம்பிக்கை - பகுத்தறிவு, ஏமாற்றுபவன் - ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ¦ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த 'பக்தி' காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்கு பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள் ! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரிந்தறிய முடியவில்லை.

WWF எப்றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள் கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். 'குத்து...கொல்லு' என்று வெறிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் ? நடிகன் யார், ரசிகன் யார் / தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் கொள்ளுபவன் யார் ? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார் கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் 'பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை; லெளகீதத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளில்லும் வேர்பரப்பியிருக்கும் இந்தப் 'பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது 'ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் எனப்படும் எம்.ஆர்.ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்த போது, "குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மது விலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது" என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு "ராமன் என்ன எஞ்சினீயரா?" என்ரு கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

"சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்" என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த 'அட்டைக்கத்திகள்' நிறைந்த இந்தக் காலத்தில் 'ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை' நினைவு கூர்வது, வேறேதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.

பணம் அலுக்கவில்லை - பகட்டு அலுத்துவிட்டது
---------------- குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

சத்யபாமா பல்கலைக்கழகம்:
---------------- பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்:
தொண்டர்களாக குண்டர்கள்!
தலைவர்களாக கிரிமினல்கள்!
---------------- ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப் போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!

அமெரிக்கா:
----------------வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
---------------- திங்கள் சத்யா இனையத்திலிருந்து

காதல் முதல் கருப்பை வரை வாடகைக்கு!
--------------- சேவைத்துறையின் வரம்புகள் எங்கே முடிகின்றன? அவுட்கோர்சிங் என்ற குத்தகை வேலை முறை எந்த எல்லை வரை விரியவிருக்கிறது? அது இன்னும் எத்தனை தூரம் விரிந்தால் இந்தியா வல்லரசு ஆகும்?

சிறுகதை:
நாய்க்கர்

கவிதை :
கல்வி கடவுள் டில்லி பாபு!
கெட்டாலும் மேன்மக்கள்.....

26 வது ஆண்டில் புதிய கலாச்சாரம்

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் :25, 26
குரல் :11-12, 1-2

உள்நாடு : ரூ 10

ஆண்டு சந்தா: ரூ 150

சந்தா படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706
மின் அஞ்சல் முகவரி:
pukatn@gmail.com

Sunday, March 9, 2008

"புதிய கலாச்சாரம்" மார்ச் 2008

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ்:
வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்!
ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!
--------------- தலையங்கம்

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய நமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்கள் மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள்தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச் 2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட முடியும்.

சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமுல்படுத்தக் கோரினால் 'சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற அதைவிடப் பெரிய அரசானை அமலாகிறது! " தமிழ் பாடலாம் " என்று ஆணையிடுகிறது அரசு, "அதை அமல்படுத்த உத்தரவாதம் தரமுடியாது" என்று அந்தக் கோயிலில் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஒ.

நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பலமேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்க முடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையை பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது.

பள்ளி மாணவர் வன்முறை:
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!
---------------- அட்டைப்பட சிறப்புக் கட்டுரை.

மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

"இந்த உலகத்தில் பெரும்பாண்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்" என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய " சரியான அனுகுமுறை, மாறாக " இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம்,. உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி", என்று குழந்தைகளைக் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!

நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவக் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுக் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.

மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால் பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில் தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் 'அன்பு; பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.

அமெரிக்க சிந்துபாத்களும்
பின்லேடன் வேட்டையும்!

ஒசாமா மற்றும் அல்கொய்தா அபாயம் நீடிக்கும் வரைதான், போர்களையும் கொள்ளைகளையும் நீட்டிப்பதற்கான, அமெரிக்க வாக்காளர்களை ஏய்ப்பதற்கான குறைந்தபட்ச அரசியல் நியாயத்தையேனும் அமெரிக்கா தக்க வைத்து கொள்ள முடியும்.

எனவே, பயங்கரவாதப் போரை வர வேண்டுமானால், உலகின் முதல் நிலை பயங்கரவாதியைத் தண்டித்தால்தான் முடியும். அம்முதல் நிலை பயங்கரவாதி இந்துகுஷ் மலையில் அல்ல, புஷ் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் வெளிப்படையாக உலவிக் கொண்டிருக்கிறான்.

தரகு முதலாளிகளின் பிடியில்
தமிழ் சினிமா!

சினிமாவின் உள்ளடக்கமும் வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனி நபர் வாதம் நுகர்வு, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடி நாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, 'நடுத்தர மேட்டுக்குடி, வாழ்வே வாழ்க்கையின் லட்சியம்' என்று போற்றப்படும்.

இளமையின் கீதம்
----- நூல் அறிமுகம்

'புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்ட வேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால் எனது பிரச்சினை தனியானது நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும், மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்யகிறது நாவல்.

அண்ணன் வர்றாரு... வள்ளல் வர்றாரு.... எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த
காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்;
"இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
திடுட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்".

கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
"இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்."

திருக்கடையூர் புராணம் அல்லது 60-வது கண்டம்

அடித்த கொள்ளைக்கும்...
குடித்த இரத்தத்திற்கும்....
அறுபது வயசு பத்தாதாம்,
"ஆயிளைத்தா" என
ஆரிய பூதம் வருகிறது.

செத்துப் பிழைக்கும் தமிழகமே.
அடுத்த குறி உனக்குத்தான்!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் 25குரல் 9,10
பிப், மார்ச் 2008
உள்நாடு ரூ 5.00
சந்தா, படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706

Thursday, January 17, 2008

"புதிய கலாச்சாரம்" ஜனவரி 2008



உலகமயத்தின் புத்தாண்டு வக்கிரம்!
-------------------- தலையங்கத்திலிருந்து

தேசம், மதம், மொழி, சாதி முதலான எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக புத்தாண்டு சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த எல்லைகளைக் கடப்பதன் உண்மையான பயன், முதலாளிகளின் இலாபத்தில் ஒளிந்திருக்கிறது. புத்தாண்டுக்கான 'தள்ளுபடி விற்பனை' அமோகமாக நடக்கிறது. அதை நிலைநிறுத்த ஏனைய கொண்டாட்டங்கள் பயன்படுகின்றன. ஆக நுகர்வுக் கலாச்சார வெறியும், களி வெறியும், அதற்குத் தேவையான பணவெறியும் ஒருங்கே மனித சித்தத்தில் கலக்கப்படுகின்றன. இவற்றை எட்டுவதற்காக ஊழல்படுத்தப்படும் மனம், கொண்டாட்டத்தில் மட்டும் எப்படி 'ஒழுக்கமாக' நடந்து கொள்ள முடியும்?

எத்தகைய அபாயங்கள் இருந்தாலும் அவையெல்லாம் விதிவிலக்குகள் என்பதாக ஊடகங்கள் ஆறுதல் தருகின்றன. 'பாலியல் வன்முறைக்கு, செக்ஸ் கல்விதான் தீர்வு' என்று அறிவு ஜீவிகள் பாடம் நடத்துகிறார்கள்.

ஆனால், இவை எதுவும் தீயை அணைக்கப் போவதில்லை, சமூக உணர்வை புதிப்பிக்கவேண்டிய திருவிழாக்கள், விலங்குணர்ச்சியின் வக்கிர வடிகாலாக மாற்றப்பட்டுவிட்டன. கிரிமினல்கள் எப்போதாவது குற்றங்கள் செய்வார்கள். புத்தாண்டு அன்று, குற்றவுணர்வின்றியே கூட குற்றமிழைக்கும் மனநிலைக்கு, சமூகமே ஆட்படுத்தப்படுகிறது. இதை பாடம் நடத்தியோ, போதனை செய்தோ திருத்த முடியாது. நட்சத்திர விடுதிகளுக்கும், ஏனைய கேளிக்கை மையங்களுக்கும், உருட்டுக் கட்டைகளைத்தான் அனுப்ப வேண்டும். விலங்குகளை அடித்துத்தான் திருத்த முடியும்.

குஜராத் பாசிசத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
------------------- அட்டைப்பட சிறப்பு கட்டுரைலிருந்து

இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதங்களை 'திரைக்கதை' போல வருணித்தார்கள் 'குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்'. பெரும்பாண்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. 'வருந்துகிறோம்' என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? - என்ற கேள்விகளையே ஊடகங்களின் ஆய்வுகள் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இத்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை 'உடலாக'வும், இத்துத்துவத்தை அதை 'ஆன்மா'வாகவும் ஒருங்கிணைக்க முடிந்தததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங் கோட்பாட்டு வாதமும், மதக் கடுங்கோட்பாடு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறு வணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, 'மதச்சார்பின்மை' என்பது அதிக பட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரிகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும், சுயநலத்தையும், ஆணவத்தையும். பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளி நாட்டில் குடியேறிய இந்தியர்களும் சான்றாக இருக்கிறார்கள்.

மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு. இது 'இத்துத்துவா' அல்ல 'மோடித்துவா' என்கிறார்கள், சில பத்திரிக்கையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது. எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக. குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெல்கா நிருபரிடம். 'பாபு பஜரங்கி' என்ர இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். "மார்த் ஆத்மி ஹை" ஆம் பிளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், 'குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?' என்பதை விளக்குகிறது.

அந்த முகமூடி, மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த 'வலிமையான பிணைப்பின்' பொருளும் விளங்குகிறது.

சுமங்கலித் திட்டம்:பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!

கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 406 பஞ்சாலைகளில் மட்டும் 38,461 பெண்கள் 'சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் கொத்தடிமைகளாக, சுரண்டப்படுகிறார்கள்." தமிழகத்தில் உள்ள ஜவுளி மில்களின் எண்ணிக்கை 1600. இத்தகைய பெண் கொத்தடிமைகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்பதற்குக் கணக்கில்லை.

உறிஞ்ச உறிஞ்ச வற்றாத இந்த மனித வளத்தின் விலை (அதாவது கூலி) இந்தியாவில் மிகக் குறைவு. மிகவும் குறைவு! ஜவிளித் தொழிலில் இந்தியா கொடிகட்டிப் பறப்பதன் இரகசியம் இதுதான். ஐ.டி தொழிலின் அசுர வளர்ச்சிக்குக் காரணமும் இதுதான்.

காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை

"என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லை?" என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், 'வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத் தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மை தான்.

கலைஞர், ஸ்ரீராமன் மற்றும் சில இலக்கிய வானரங்கள்

"இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்புகளினாலும் அழிக்க முடியாது" என்பதே பார்ப்பன அறிவுஜீவிகள் ஆவேசம்.

10-1-1947 இல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:

"யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்" என்று சர்.இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம். உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகி விடுமா?

எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே எலி,கொசு, தேள், பாம்பு , மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்துமதத்தை விட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?"

தெகல்கா வாக்குமூலங்கள்: இந்து பாசிசத்தின் உளவியல்!

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும், சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும் அதைச் சுலபமாய் ஆட்டிவைக்கும் மோசடித் தலைமையும் 'தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு - இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்யவேண்டிய காரியம்.

தஸ்லிமா நஸ்ரீன்:
அபலையைத் துரத்தும் இசுலாமிய மதவெறி!

குர் ஆன் உள்ளிட்ட அனைத்து மதநூல்களும் காலப்பொருத்தமற்றவை என்று. அவை காலாவதியாகிவிட்டன என்றும் தான் பிறந்த இசுலாம் மதம் எப்படி பெண்களை அடிமைப்படுத்துகிறது? என்பதையும் விரிவாகப் பேசியும் எழுதியும் வரும் தஸ்லிமா, மதங்களுக்குப் பதில் நாம் மனித நேயத்தையே புதிய நம்பிக்கையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

தஸ்லிமாவுக்கு ·பதவா அறிவித்த இசுலாமிய மதவாதிகள் மோடியை என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமுடியாது என்பதே உண்மை. அப்பாவிப் பெண்னை எதிர்ப்பதில் துருத்தும் வீரம் இங்கே இயல்பாக ஒளிந்து கொள்ளும். இந்தச் சரணடைதலில் 2000 முசுலீம் மக்களின் களப்பலி கண்முன்னே எழுந்து மறைகிறது. இந்தத் துயரத்தின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ளும் இசுலாமி இளைஞர்களும், பெண்களும் இசுலாமிய மதவாதத்திலிருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் நாம் மோடியையும், இசுலாத்தில் இருக்கும் மோசடிகளையும் சேர்த்துத் தண்டிக்க முடியும்.

வேசி.. அறம்.. அனுபவம். - கார்க்கி


பாலஸ்தீனியன் நான் - கவிதை



மக்கள் கலை இலக்கிய கழக மாத இதழ்


போர் 25

குரல் 5,6,7,8

அக்-டிச 2007, ஜன 2008

உள்நாடு ரூ 5.00

ஆண்டுச் சந்தா:ரூ 90.00

சந்தா, படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்


இரா.சீனிவாசன்

16, முல்லை நகர் வணிக வளாகம்,

2 வது நிழற்சாலை,

அசோக் நகர்,

சென்னை -600 083

தொலைபேசி 044 - 23718706



Friday, November 30, 2007

"துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது" அரசியல் சித்தாந்தமல்ல

'தவிப்பு' - நூல் விமர்சனம்

துப்பாக்கியால் ஞானஸ்தானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?


நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?


உயிரைத் துறக்கும் போராளுக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?

நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

கிழே க்ளிக் செய்து படிக்கவும்

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu1.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu2.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu3.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu4.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu5.jpg

http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/thavipu6.jpg

Tuesday, October 9, 2007

"அசுரகானம்" பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான போர் முழக்கம் !



  • "எனக்கு அரிசன் என பேரு வைக்க யாரடா நாயே!"என்று முழங்கும் கலகக் குரல்
  • "சம்புகனின் உயிர் குடித்த ராமன் எங்கே வாடா" என்று குமுறும் வெஞ்சினம்
  • "சின்னவாளு, பெரிய வாளு அத்தனையும் அவாளு" என சங்கராச்சாரியின் இந்து முகமூடியை கிழிக்கும் கேலி
  • "இடித்து விட்டான் மசூதியை இது சரிதானா" என்று உங்கள் மனசாட்சியை உசுப்பிவிடும் கேள்விக்கணை
  • "அக்கிரகாரமின்னு வச்சிருக்கிறவன் யாரடா அனந்தரமய்யா இல்லை அப்துல் காதரா?" என்று பாரதீய ஜனதாவின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்திரத்திற்கு செருப்படி
  • "நாமக்கட்டி ஆளப் போவுது" என்று இந்து மதவெறி பாசிசத்தின் உண்மை முகத்தைக் காட்டும் நையாண்டி
  • "கங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே" என்று நெஞ்சைப் பிழியும் சோகம்
  • "போர் முரசே ஓய்வினி எதற்கு? வாளெடுத்து வா என முழங்கு" என்று தட்டியெழுப்பும் போர் முழக்கம்


60 நிமிட பாடல் ஒலி குறுந்தகடு


இந்து மதவெறியை எதிர்ப்போரின் ஆயுதம் அசுரகானம்


ம.க.இ.க வின் ஒலிப்பேழை.

************************************

குறுந்தகட்டின் விலை ரூ 30

தொடர்புக்கு:

--------------------------------------

புதிய கலாச்சாரம்

16,முல்லைநகர் வணிக வளாகம்,

2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),

அசோக் நகர்,

சென்னை - 600 083.

தொலைபேசி எண்: 044-23718706

Monday, October 8, 2007

இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?


மறுகாலனியாதிக்கத்தின் சுரண்டல் ஒரு புரமென்றால் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை மறுபுறம் உயிர்ப்புடன் வாழ்கிறது. உண்மையில் , ஏகாதிபத்தி மேலாதிக்கத்தின் கொடுமையை உணரவிடாமல் பார்ப்பனியம் திரை போலத் தடுத்துவிடுகிறது. எனவே இந்தத் திரையைக் கிழிப்பது அவசியமான அரசியல் கடமையாக நம்முன் நிற்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான் சித்தாந்தப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வலிமை சேர்க்கவே இந்நூலைக் கொண்டு வருகிறோம். மீண்டும் பெரியார் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதன் மூலமாக, பார்ப்பனியத்தின் கல்லறையாக, இராமனின் சமாதியாக தமிழகத்தை மாற்றுவோம்.
..
புதிய கலாச்சாரம் மற்றும் எமது தோழமை ஏடான புதிய ஜனநாயகத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
..
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.
..
வெளியீடு
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
..
விலை ரூ 25/-

Friday, September 21, 2007

25-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "புதிய கலாச்சாரம்"


தொழிலதிபர்களே துறவிகளாக! அடிமைத்தனமே ஆன்மீகமாக!

ஏற்றத்தாழ்வான அநீதியான இந்தச் சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேரெதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாயிருக்கிறார்கள்.

வால்மார்ட்: மலிவு விலையில் மரணம்!
..
சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால் மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன் வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

தசரத் மான்ஜ: மலையை அகற்றிய வீரக்கிழவன்!

"என்று வருமோ புரட்சி.... இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்" என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின் புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை.'இயலாததை'ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப் படர்ந்திருக்கும் கோழைத் தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை, அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயசமாகத் துளைத்துச் செல்கிறது.
..
உயர் கல்வி எனும் லாட்டரி!

இது வெறுமனே உயர் கல்வி சார்ந்த பிரச்சினையும் அல்ல. விவசாயத்திலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுவதும், ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் துரத்தப்படுவதும், மாணவர்ளுக்கு கல்வி மறுக்கப்படுவதும் தனித்தனிப் பிரச்சினைகளல்ல. பன்னீர் செல்வமும், ரெஜினாவும், தற்கொலை செய்து கொண்டு மடிந்த 3000-க்கும் மேற்பட்ட ந்திர விவசாயிகளும், சுட்டுக் கொல்லப்பட்ட நந்திகிராம் விவசாயிகளும் வெவ்வேறு எதிரிகளால் கொல்லப் பட்டவர்களல்ல.

எனவே இப்புதிய மனுநீதிக்கெதிராக, மறுகாலனியாக்கம் எனும் இந்த பகாசுர எதிரிக்கு எதிராக, கல்வியுரிமை மறுக்கப்படும் மாணவர்களும், மக்களும் முழுமையாக, தீர்க்கமாக அணிதிரண்டு போராடுவதைத் தவிர இதற்கு வேறு தனிப்பட்ட தீர்வு ஏதுமில்லை.

"தேவன் இல்லை ஆன்மா இல்லை இயேசுவே... நீரும் இல்லை" - அன்னை தெரசா

எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத் தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். னால்." விசுவாசத்தை இழக்க இழக்க , மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக் கொண்டார்."

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிகொண்ட அந்த மாயக் காட்சி அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். னால் 1946-இல் இருந்தது போல 'திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய் தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை. விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக் காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடன் சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை , இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லா தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

கையேந்தி வல்லரசுக்கு கையேந்திபவன் இந்தியா!

"ஆஸ்திரேலியாவைப் போல டெல்லி அழகா இருக்கணுமாம். அப்ப ஆஸ்திரேலியாக்காரங்க வாழற மாதிரி எங்கள எப்ப வாழ வைக்கப் போறீங்க?"

கவிதைகள்

உணர்வு -பால்ராஜ்

அனுபவிக்கத் தயாரா?-துரை சண்முகம்

அறிமுகம்

ஆவணப் படம்:லெனின் - எதிர்காலத்திற்கான வரலாறு.

Saturday, August 25, 2007

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!


அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.

மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?

நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
  • அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!

  • அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!

  • அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!
- வெளியீட்டில் இருந்து
..
தொடர்புக்கு:
.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024
போன்:94448 34519

பிரதிகள் கிடைக்குமிடம்:
.
இரா.சீனிவாசன்
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600 083
..
நன்கொடை ரூ 5/-

தண்ணீர் தனியார்மயத்திற்கெதிரான ஆங்கிலக் கட்டுரைகள் !!


தண்ணீர் தனியார்மயத்திற்கெதிராக மாட் பார்லோ, சாய்நாத், வந்தனாசிவா போன்றோர் எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரைகள், பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவிலும் தண்ணீர் தனியார்மயம் தோற்றுவித்த விபரீதங்கள் குறித்த செய்தித் தொகுப்புகள், பேட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு.
..
Thirst for Profit
..
Excerpts pf essays , reports and interviews on Privatisation and Commodification of Water Resources.
..
Published in support of the campaign by PALA, NDLF,PLF and RSYF against 'Privatisation and Commodification of Water'
வெளியீடு
.
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
..
நன்கொடை ரூ 25
Related:
..

Monday, August 13, 2007

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?




பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்

தனது இந்து ராஸ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக "பொது சிவில் சட்டம்" குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் 'இந்து தனிநபர் சட்டம்' ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

"இந்தியா உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே" என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடிவதில்லை. எனவே "இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை" என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை 'இந்து'க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. "அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தை துண்டிப்பது" என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச் சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் - மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து - முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் 'முற்போக்கான' தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் 'இந்து தனிநபர் சட்டம்' என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது.

இறுதியாக, பாரதீய ஜனதாவிற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995- இல் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாசாரத்தில் தோழர்.சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.

புதிய கலாச்சாரம் கட்டுரைகள்

வெளியீடு
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
விலை ரூ 20/-

Monday, July 9, 2007

"போராடும் தருணங்கள்"

"ஒரு கவிஞன் தனது எண்ணங்களை வெளியிட 'சுதந்திரமாகக்' கற்பனை செய்து எழுதுவது போல அல்ல இந்த உரைவீச்சுக்கள். இங்கே நடந்தது புரியாமல் இருக்கும் ஒரு சமூகத்தை, செய்வதறியாமல் இருக்கும் மக்களை மனதிற்கொண்டு , அவர்கள் எதைப் பேச வேண்டுமோ அதை, எப்படிப் பேசவேண்டுமோ அப்படிச் சிந்தித்து, தோய்ந்து, எழுச்சியுடன் எழுதுவது என்பது வெறும் எழுத்துப் பய்ற்சி சார்ந்தது மட்டுமல்ல.

ஆம், நம் மக்களின் பிந்தங்கிய சமூக நிலைமையும், முன்னேறக் கடினமாக இருக்கும் அரசியல் சூழ்நிலையும், மக்களின் எதிரியை மறைத்து உலவும் சமரச அட்டைக் கத்தி வீரர்களும், நிறைந்திருக்கின்ற காலவெளியில் ஒரு புரட்சிகர அமைப்பு உதித்தெழுவதற்கான போராட்டம் எத்தகைய சிக்கல்களை கடக்கின்றதோ அதிலெல்லாம் சேர்ந்து கரையேறியவைதான் இந்தக் கட்டுரைகளும்"

-ஆசிரியர் குழு
புதிய கலாச்சாரம்
..
வெளியீடு & தொடர்புக்கு:
*******************************
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
..
பக் 117, விலை ரூ 40
..
கிடைக்குமிடம்
******************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

"அடிமைச் சாசனம்"













"இன்று நாடு முன்னேறுவதாகவும், உலகமயமாக்கல் தவிர்க்கவியலாததென்றும் பலவாறான அடிமைக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. அவற்றை முறியடிக்கும் முயற்சிதான் இந்த பாடல் ஒலிப்பேழை"
..
ம.க.இ.க வின் நான்காவது பாடல் ஒலிப்பேழை.
******************************************************************

குறுந்தகட்டின் விலை ரூ 30
..
"அடிமைச் சாசனம்" அறிமுகக் கூட்டம் பற்றிய புதிய கலாச்சாரத்தில்
அக் 1994 வந்த பதிவு
..
..
..
தொடர்புக்கு:
--------------------------------------
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
தொலைபேசி எண்: 044-23718706
--------------------------------------

Saturday, July 7, 2007

சினிமா: திரை விலகும் போது...



தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் , சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை 'தினத்தந்தி' பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கையோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் 'மேதைமையையும்' வியந்தோறுகின்றன.

எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குரித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசப்பத்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலன் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமான ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ·பார்முலாவில் குழைக்கப்பட்டு , ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம், இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால் தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கல் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

செல்வாக்கு மிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை,அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள் , எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.
வெளியீடு & தொடர்புக்கு:
***********************************
புதிய கலாச்சாரம்

# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
..
பக் 205, விலை ரூ 70
..
கிடைக்குமிடம்
******************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

Wednesday, June 13, 2007

ஹேராம் கதையா? வரலாறா?

வரலாற்றையும் கதையையும் இணைக்கும் விதிக்கு ஒரு விளக்கம் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா."காந்தியை சுட்டது கோட்சே தான். அது வரலாறு.கமலாஹாசன் சுட முடியாதே" என்றார்.

காந்தியை கோட்சே சுட்டது வரலாறல்ல. வரலாற்றால் ஒரு சம்பவம்.அவ்வளவுதான். கோட்சே இல்லையின்றால் அவனது குருநாதன் நீட்சே சுட்டு இருப்பான். ஆனால் அந்த சம்பவத்துக்கு இட்டு சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சி போக்கு இருக்கிறதே - அதுதான் வரலாறு. சகேத்ராமனின் கதை அந்த வரலாற்றை பிரதிபலிக்கவில்லை.

இத்தனையும் மீறி இந்தப் படத்தின் அழகியல் உங்களை மயக்குகிறது என்றால் அதற்காக நீங்கள் கூச்சப்படவேண்டியதில்லை.மயக்கம் தெளிவிக்கும் மருந்து அரசியல் கூர்மையும், வர்க்க உணர்வும்தான்.

என்னுடைய அழகியலை உன்னுடைய அரசியலால் விமர்சிக்காதே, என்று கூறும் கலை ஆராதர்கள் " உன்னுடைய கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று கேட்காதே" எனப் பதில் சொல்லலாம். உன்னுடைய கவிதை சாகேதராமனின் பெரியம்மாள் செத்ததைப் பற்றிதாக இருந்தால் சரி; அது நம்முடைய தேசத்தின் மரணத்தைப் பற்றியதல்லவா?

இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, தந்திரமாக முதல் காட்சியிலேயே இதற்கு மடையடைத்து விட்டார் கமலஹாசன். "எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு கதை சொல்லமாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜான்னுதான் சொல்லுவார்" என்கிறான் சாகேதராமனின் பேரன்.

'எக்ஸ்கியுஸ் மி ' என்று சொல்லிவிட்டு பிக்பாக்கெட் அடிக்க அனுமதிக்கலாமென்றால், "சாகேத்ராமன் வாழ்ந்த நாட்டில் ஒரு மதக்கலவரம்" என்று 'வரலாற்று கதை' சொல்லவதையும் அனுமதிக்கலாம்.

ஓமர் முக்தார் திரைப்படத்தின் கடைசிக் காட்சியிக் அவர் தூக்கிலிடப்பட்டவுடன் கீழே விழுந்த அவரது மூக்குக் கண்ணாடியைப் பத்திரப்படுத்துவான் ஒரு சிறுவன். அரங்கமே கண் கலங்கும்.

காந்தியின் கண்ணாடியையும் சாகேதராமன் எடுத்து கொள்கிறான். கண்ணாடிக்குரியவரின் வரலாறோ, எடுத்தவரின் கதையோ யாரையும் கண்கலங்க செய்யவில்லையே!
(விமர்சனத்திலிருந்து )

புதிய கலாச்சாரம் மார்ச் 2000 வந்த இதன் முழு விமர்சனமும் இணைக்கப் பட்டுள்ளது.
********************************************************************
.
.
.
.
.
******************************************
தொடர்புடைய பதிவுகள்
******************************************

Tuesday, June 12, 2007

"சிலுவையில் தொங்கும் சாத்தான்"




"சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்ற இந்நாவல் கிக்கூயூ மொழியில் வெளிவந்து. மெளண்ட் கென்யாவிலிருந்து நைரோபி வரை கென்ய மக்கள் வீடுகளிலும் மற்ற பொது இடங்களிலும் கூடி கூடிப் படித்தார்கள்; வாய்விட்டு உரக்கப் படித்தார்கள். சிறைப் பிடிக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இதனை ஒரு வருட காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம் துடைக்கும் தாளில் எழுதி ரகசியமாக பாதுகாத்து வந்தார் கூகி. விடுதலை பெறுவதற்கு சில வாரங்கள் முன்பு சிறைக் காவலரால் பறிமுதல் செய்யப்பட்ட நாவலின் பிரதி, பின்பு எதிர்பாராத விதமாக அவரிடமே திருப்பித் தரப்பட்டது! கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்டது. ஆங்கில வாசகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்நாவல். பின்பு ஆசிரியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்ட்டது.
.
கூகி, "சிலுவையில் தொங்கும் சாத்தான்" நூலில் மேற்கத்திய குறியியலை தலைகீழாக நிற்க வைக்கிறார். மறுபுறம், அதன் வாலோ மாயத் தோற்றங்களுக்கும் மறுக்கவியலா உண்மைகளுக்கும் நடுவே, கனவுகளுக்கு கடினமான உண்மைகளுக்கும் நடுவே கட்ட விழ்கிறது. எழுத்தியல் முறைக்கு மாற்றாக பண்டைய ஒத்திசைவுடன் கூடிய மரபுவழி கதை சொல்லும் முறை நூல் முழுமையும் பயன்படுத்தப்படுகிறது.
பிரக்ட்,புன்யான்,ஸ்விப்ட், மற்றும் பெக்கட்டின் ஆற்றல்களை உள்வாங்கி கூகி கலகம் செய்கிறார். இவ்வாறு பழமையும் புதுமையும் இரண்டறக் கலக்கப்பட்டு கென்ய மக்களின் அரசியல் பொருளாதார் பண்பாட்டு விடுதலை கோரும் தெளிவான உணர்ச்சி பூர்வமான குரல் எழுகிறது.
.
--------------------------------------------------
புதிய கலாச்சரம் இதழில் வந்த "சிலுவையில் தொங்கும் சாத்தான்" நாவலின் நூல் அறிமுகம் இணைக்கப்பட்டு உள்ளது
.
.
.
--------------------------------------------------

ஆசிரியர்: கூகி வா தியாங்கோ
.
தமிழாக்கம்: அமரந்தா- சிங்கராயர்
.
வெளியீடு:
.
தாமரைச் செல்வி பதிப்பகம்
31,48, இராணி அண்ணா நகர்,
கலைஞர் நகர்,
சென்னை- 600 078
.
பக் 424, விலை ரூ125
கிடைக்குமிடம்
------------------------
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

Tuesday, June 5, 2007

"அழகி" அற்ப மனிதனின் அவலம் !

"சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் - அவ்வளவுதான்" என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். "சண்முகம் ஏன் சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டுயிருக்கின்றான்" என்பதல்ல நம் கேள்வி. "இந்த சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடிந்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்" என்பதுதான் கேள்வி.

அந்தக் கலக்கமும் , வேதனையும் ஒரு மனிதனின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் அவனையே உணரச் செய்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தும் துன்பல்ல. மாறாக அந்தத் தவறுகளையே தான் செய்த தியாகமாகக் கருதுவது, அவனது இதயத்தை மேலும் கறைப்படுத்திக் காரியவாத வாழ்க்கையில் பீடு நடை போட வைப்பதெல்லாம் எப்படி நியாயமாகும்? இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்ற போராட்டத்தில் சுயநலனையே முன்னிறுத்துகிறது. இத்தகைய மனிதர்கள் தான் லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுத்து மெடிக்கல் சீட் பெறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது, தெருப்பிரச்சினைக்கே வீட்டுக்கதவை சாத்துவது முதலான காரியங்களைக் குற்ற உணர்வின்றி நியாய உணர்வோடு செய்பவர்கள்.

எனவே சண்முகமும், அவனது கையறு நிலையின் அவ்லத்தை இதயத்தில் சுமந்த சண்முகங்களாகிய நாமும், இன்னமும் அப்பாவிகள் என்று கருதிக் கொண்டுருந்தால் குற்றவாளிகள் என்ற பட்டியலில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் சேருவதற்குக் காத்திருப்போம். "நாம் அப்பாவிகளல்ல, கடைந்தெடுத்த காரியவாதிகள்" என்று சுய விமர்சனம் செய்துக் கொள்ளும் நேர்மையிருந்தால் எந்தக் குற்றவாளிப் பட்டியலிலும் சேராமல் போராடுவோம்; வாசகர்கள் பரிசீலிக்கட்டும்.
*************************************************************
-
-
-
-
-
-
-
-
-
-
-
நன்றி: கோபா

Saturday, June 2, 2007

பருத்தி வீரன் - பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?

பருத்திவீரனை பற்றி வித்தியாசமான படம், கிராமத்து மணம் வீசும் படம் என இரசிகர்கள் மத்தியில் பேசுப்படுகின்ற படம். ஆனால் இந்த படத்தில் ஒரு இரவுடியின் அற்ப வாழ்க்கையை இரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் அதில் செயற்கைத்தனங்களயும், கிராமத்து மக்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என எடுத்துரைக்கிறது, புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் வெளியான பருத்தி வீரன் விமர்சனம். அவற்றில் இருந்து சில குறிப்புகள்.


வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.


சென்டிமென்டால் போட்டுத்தாக்கும் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சனையோ வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. மாறாக, ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை.

சித்தப்பா செவ்வாழையுடன் பருத்தி வீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாக கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள் அந்த கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள்.

காட்சிக்கு ஒரு நகைச்சுவை என செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவாக கலகலப்பாக செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொது புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது....

ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை ஏமாற்றுவதாக இரசிகர்கள் உணர்வதில்லை. கவுண்டமமணி பாணியிலான இந்த காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் இப்படி அரட்டி மிரட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். யதார்த்ததிற்காக போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இது தான்....

இப்படி எல்லா சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்திவீரன்…….

இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி,உடலசைவு காட்சிகளன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், உண்மையான கிராமம் இல்லை. உண்மயான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்து பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி ராச்சியம் செய்கிறாள். தொழில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தன்னந்தனியாய் நின்று கொலை செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்ட்ருக்கிறீர்களா?......

பருத்திவிரனைப் போன்ற இரவுடிகள், பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடி சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு சுயேச்சையான, கலகலப்பான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்திவீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பலப்பதற்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்கு போகுமளவுக்கு பெரிய ரவுடியாக இருந்தால்....போலீசு போடுமா, எதிரி போடுவானா என அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும்....

வேலை வெட்டிக்கு போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள் தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாக காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசணை தான் நமக்கு நெருடலைத் தருகிறது.

இந்த பொறுக்கிவீரன் தங்களை கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி இரசிகர்கள் வரை யாருமே உணர்வது இல்லை.

ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிளாலியாகவோ தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ கூட இருக்கலாம். அவன் வாழ்க்கையை எப்படி பார்க்க பழக்குகிறார் என்பது தான் பிரச்சனை. ஒரு சொறி நாயின் அழகை இரசிக்க கற்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நன்றி - புதிய கலாச்சாரம் மே 2007

Sunday, May 13, 2007

" புதிய கலாச்சாரம்" மே 2007

இந்த மாத புதிய கலாச்சாரத்தில்

*********************************************************************

ம.க.இ.க, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு


-மே நாள் முற்றுகை ! ரிலையன்ஸ் வெளியேறு !!


"எங்களுக்கும் இந்த ரிலையன்ஸ் கடைக்கும் இருக்கும் இடைவெளி வெறும் 50 அடி தூரம்தான். சிறு வணிகத்தை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எனும் பேரபாயத்திற்கும் அது குறித்த வணிகர்கள் மற்றும் மக்களின் புரிதலுக்கும் உள்ள இடைவெளிதான் இதனினும் பெரிதாக இருக்கிறது. அந்த இடைவெளியைக் குறைப்பதுதான் தற்போதைய போராட்டத்தின் எமது நோக்கும். ரிலையன்ஸை வீழ்ந்த வேண்டுமென்றால் கோயம்பேடு எழுந்து நிற்க வேண்டும்"



உலகக் கோப்பைக் கிரிக்கெட் சூதாடித் தோற்ற
-பன்னாட்டு நிறுவனங்கள் !

"முன்பு போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க சூதாட்டக்காரர்கள் முயன்றார்கள்; தற்போது அதைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யக்கூடும். ஏனெனில் கிரிக்கெட்டினால் சூதாடிகள் பெறும் இலாபத்தைவிட பன்னாட்டு நிறுவனங்கள் அடையும் இலாபம் பன்மடங்கு அதிகம்"

நிலவும் இந்தியன்:
-வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

"பூமியில் இருக்கும் மரணக்குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம்!"


கூந்தலைத் துறந்த வறுமை !

"மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்துவிட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி விகிதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா ?"

அருந்ததி ராய் நேர்காணல்:
-இது ஒரு முழுநிறை யுத்தம்!

"நமது பொருளாதாரக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேலையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசு தான்!"

"வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியின் மீதும் அரசு முகத்திலறைந் தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லா விதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்."

திரைப்பட விமர்சனம்:
------------------------------------

"வேலை வெட்டிக்குப் போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்ள்தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாய்க் காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையின்றி இரசிக்கும் இரசனைதான் நமக்கு நெருடலைத் தருகிறது."
-
தோகீ

-என் பாடல் துயரமிக்கது!

"உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது- இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்பந்தத்திற்கு சமூகம் விவசாயிகளைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது"
-------------------------------
சந்தா,படைப்புகள் அனுப்பவும், தகவல்களுக்கும்
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
---------------------
Related:
********************
-
-
-
-

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •