எந்தவொரு மூன்றாம் உலகநாடும் இதுவரை பெற்றிராத அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை ஈரானிய திரைப்படங்கள் பெற்று வருகின்றன. அப்படு என்னதான் ஈரானிய படங்களில் இருக்கின்றன என்கிற கேள்விஉம் எழும்.
ஈரானிய நாடு, இஸ்லாமிய நாடு; அதற்கான கலை, இலக்கியம், திரைப்படம் போன்றவற்றிலும் கட்டுப்பாடுகள் உண்டு. பெண்களை திரையில் காட்டும்போது தலைமுதல் கால் வரை மறைக்கப்பட்ட உடைகளில் மட்டுமே திரையில் காட்டமுடியும், காதல் காட்சிகளோ பாலுணர்ச்சி சம்பந்தப்பட்ட காட்சிகளோ, கட்டாயமாக திரைப்படத்தில் இடம்பெற முடியாது. காதல் காட்சி இருந்தாலும் கூட தொடக்கக்கால தமிழ் திரைப்படங்களில் இருந்ததுபோல இருவரும் தொடாமல் தான் நடிப்பார்கள். இவ்வளவு கட்டுபாடுகள் இருந்த பொழுதும் அற்புதமான படங்களை ஈரானிய இயக்குநர்கள் உலகிற்கு அளித்து வருகின்றனர். மிகச்சிறிய முடிச்சை போட்டு அவிழ்ப்பதுதான் அவர்களுடைய படங்களின் கதைப்போக்காகக் காணப்படுகிறது.
ஈரானியப் படங்களில் இயல்பான கதை சொல்லல் முறை, யதார்த்ததை மீறாத காட்சியமைப்பு, தெளிவான திரைக்கதை. அளவான இசை; மிகை நடிப்பை நாம் எங்கேயும் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு படத்திலும் மண்ணின் மனத்தை நுகர முடியும்.
இத்தகைய ஈரானிய சினிமா குறித்த வரலாற்றையும், அங்குள்ள இயக்குநர்களின் பேட்டிகளும் இந்நூல் தொகுத்து வழங்குகிறது.
தொகுப்பு
ப.திருநாவுக்கரசு
வெளியீடு:
நிழல்
விலை ரூ 100
கிடைக்குமிடம்.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
..
No comments:
Post a Comment