பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, January 11, 2008

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி "கீழைக்காற்று வெளியீட்டகம்"

எமது விற்பனையில்

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"
இப்படியும் படுகொலை செய்ய முடியுமா?பச்சிளம் குழந்தையை...

இப்படியும் பாலியல் வன்முறைக்குள்ளாக்க முடியுமா?ஒரு பெண்ணை...

இப்படியும் வெறுக்க முடியுமா?

ஒரு மனிதனைஇத்தனையும் செய்து விட்டு

அடுத்தக் கொலைக்களம்தேடி அலைகிறது பா.ஜ.க பரிவாரம்

இவனைக் கண்டிக்க தயாரில்லைசட்டம் தண்டிக்க முன்வரவில்லைநீதிமன்றம்இந்து என்பவர்களே நீங்கள் சொல்லுங்கள்!

மனித நாகரிகத்தின் மேல்குண்டு வைக்கும் பயங்கரவாதிகளைஉண்மையிலேயேதெரியவில்லையா உங்களுக்கு!

தெரியாதவர்களுக்குஉண்மையைத் தெளிவாக்குகிறதுஇச்சிறு நூல்!

இந்நூல் நவ 2007 மற்றும் டிச 2007 புதிய ஜனநாயகம்
இதழில் வெளியான கட்டுரையின் தொகுப்பு
..

விலை ரூ 7


"கட்சி அமைப்பு பற்றி" ஸ்டாலின் டிமிரொவ் காகனோவிச் மா சே-துங்

கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு பற்றியும், குறிப்பாக, ஊழியர்களைப் பயிற்றுவித்து வளர்த்தெடுக்கும் முறை பற்றியும், கட்சி அமைப்பைச் சீர்குலைக்கும் பலவகையான சந்தர்ப்பவாதப் போக்குகளைக் களைந்து போல்ஷ்விக் முறையிலான கட்சியைக் கட்டியமைப்பது பற்றியும் தோழர்கள் ஸ்டாலின், டிமிரொவ், காகனோவிச், மா சே-துங்ஆகியோரின் செறிவான வழிகாட்டுதல்கள் இச்சிறு நூலில் இடம் பெற்றுள்ளன.


இந்நூல் ஏற்கனவே "சவுத் ஏசியன் புக்ஸ்" நிறுவனத்தினரால் மூன்று முறை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வெளியீடுகளில் ஸ்டாலினது மேற்கோள்களை நீக்கியும், ஸ்டாலின் பெயரை நீக்கியும் வெளியீட்டு உள்ளனர்.


இதை நீக்காமல் அப்படியே வெளியிட்டால், நூலைப் படிக்கும் இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சி அணிகள், தலைவர்களைக் கேள்வி கேட்டு 'கட்சி கட்டுபாட்டை' மீறி விடுவார்களோ என்ற அச்சத்தில் நீக்கியுள்ளார்கள் போலும் !


அரசியல் சித்தாந்தத்தில் மட்டுமல்ல; மொழிபெயர்ப்பிலும் கூட தமது கைவரிசையைக் காட்டுமளவுக்கு அவர்கள் தரம் தாழ்ந்து போயுள்ளனர். மேலும் கட்சியுடனும் மக்களுடனும் நடைமுறை வேலைகளுடனும் தொடர்பற்ற அறிவுத்துறைனரைக் கொண்டு மார்க்சிய - லெனினிய நூல்களை மொழிபெயர்த்தால் எத்தகைய தீங்கு ஏற்படும் என்பதற்கும் இவர்களது மொழிபெயர்ப்புகளே எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

அவர்களால் நீக்கம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்த்தும் புதிதாக மொழியாக்கம் செய்தும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நூல் "கீழைக்காற்று" வெளியீடாக வருகிறது.

போலி கம்யூனிசத்தை இப்புவிப் பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் போராட்டத்தில் புரட்சிகர நேர்மையுடன் கூடிய மொழிபெயர்ப்பும் ஒரு முக்கிய பங்காற்றும் என்பதை வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்.
ஆசிரியர் குழு.
புதிய ஜனநாயகம்.
..
..
விலை ரூ 15

"தொழிலாளி வர்க்கம் - கட்சி - இயல்பு பற்றி" - ஸ்டாலின் & சென்யுன்

"பொதுவாக பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்", முடிந்த அளவு கட்சிக்கு நன்கொடை தருகிறேன் என்பதனால் எல்லாம் ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. இதனை ஆமோதித்து கட்சியை விருந்தினர் மாளிகையாக ஆக்குவதும் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியாது என்பதனை தோழர் ஸ்டாலின், சென்யுன் வரலாற்று ரீதியான கட்சி கட்டிய அனுபவத்திலிருந்து இந்நூலில் விளக்கியுள்ளனர். கட்சியின் திட்டத்தை ஏற்பது மட்டுமல்ல, கட்சியின் ஏதாவது ஒரு பிரிவில் இருந்து அன்றாடம் வேலை செய்பவரே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இத்தனைய இயல்புகளையும் தன்மைகளையும் கொண்டு இயங்கும் கட்சியே உண்மையான கம்யூனிஸ்டு கட்சி என்பதனை ரசிய, சீன அனுபவ சித்திரங்களின் வாயிலாக இந்நூல் தீர்க்கமாக தெளிவுபடுத்துகிறது.
..
எந்தவிதமான கட்சிக் கடமைகளுக்கும் கட்டுப்படாமல் தனியாக இருப்பதே சுதந்திர அறிவு என்று தத்துவத் துறையில் வாழாவெட்டியாகிப் போன அறிவுப் பிழைப்புவாதிகளும், 'சந்தா' கொடுத்தால் போதும் என்று கையறு நிலைக்கு போய்விட்ட பல வண்ண திரிபுவாதிகளும் மலிந்திருக்கும் சூழ்நிலையில் , இந்நூல் பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அமைப்பாக்கிக் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பதிப்பகத்தார்.

விலை ரூ 15

"மக்களிடையே நமது பணிகள்"

கம்யூனிசப் புரட்சியாளர்களின் இயக்கம் இடது சந்தர்ப்பவாதத்தால் பிளவையும் பின்னடைவையும் சந்தித்த காலத்தில் - மக்கள் திரள் வழி, மக்களிடையேயான கம்யூனிஸ்டுகளின் பணி என்ன எனபதையொட்டிய விவாதங்களும் சித்தாந்தப் போராட்டமும் நடந்த காலத்தில் - தோழர் கதீப் அன்சாரி அவர்களால் எழுதப்பட்டது இக்கட்டுரை.
தோழர் கதீப் அன்சாரி, மகாரஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிசப் புரட்சியாளர்களில் ஒருவர். மார்க்சிய - லெனினியப் புரட்சிகர இயக்கத்தில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் அவர். நடைமுறை அனுபவத்திலிருந்து மார்க்சிய -லெனினிய கண்ணோட்டத்தில் இக்கட்டுரையைச் செறிவாக எழுதியுள்ளார். பல்வேறு புரட்சிகர கம்யூனிச அமைப்புகளும் மக்களிடையேயான பணி என்பதைக் கொச்சையாகப் புரிந்து கொண்டுள்ள சூழலில், 25 ஆண்டுகளுக்கு முன்பே இவ்விவாதப் பொருளை ஆசிரியர் தெளிவாக அணுகியிருப்பது இந்நூலின் சிறப்பு.
கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி, அவர்களை அரசியல் படுத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடைமை கட்சிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.


ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் மக்களிடையே பணியாற்றுவது என்ற பெயரால், உழைக்கும் மக்களை அணி திரட்டி, உடனடி பொருளாதாரக் கோரிக்கைகளுடன் வரம்பிட்டுக் கொள்வதிலும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களைப் புறக்கணிப்பதிலும் முன்னாடியாகத் திகழ்கின்றனர். அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்புவாதத்தையே தமது நடைமுறையாகவும் மாற்றிக் கொண்டனர்.
போலி கம்யூனிஸ்டுகளின் துரோகப் பாதையைப் புறக்கணித்துவிட்டு, புரட்சிக்கு மக்களை அணி திரட்டி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களில் ஒரு சில பிரிவினர் இன்னமும் இடது வலது சந்தர்ப்பவாதத்தை வெவ்வேறு அளவுகளில் பின்பற்றி வருகின்றனர். ஒரு அரங்கில் ஒரு பகுதியில் தொடர்ந்து ஊன்றி நின்று செயல்படுவதை விட்டு, இடர்பாடுகள் ஏற்பட்டதும் வேறொன்றுக்குத் தாவுவதும் அல்லது இரகசிய மக்கள்திறள் அமைப்பைக் கட்ட முயற்சி செய்வதும் தன்னெழுச்சியான பரபரப்பான போராட்டங்களின் பின்னே வால் பிடித்துச் செல்வதுமான உள்ளனர். ஒரு பகுதியில் கிடைத்த ஆரம்ப வெற்றியையும் அனுபவத்தையும் அப்படியே பெயர்த்தெடுத்து மற்ற பகுதிகளுக்கும் பொருத்துகின்றனர். இத்தகைய நடைமுறையானது பிளவையும் தேக்கத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தி தோல்வியுற்ற பின்னரும், மீண்டும் அதே பாதையில் சுற்றி வருகின்றனர்.


இதற்கு மாறாக, மக்கள் திரள் வழி என்றால் என்ன என்பதை மார்க்சிய லெனினியக் கண்னோட்டத்தில் புரிந்து கொண்டு, இந்தியாவின் பருண்மையான நிலைமை களுக்கேற்ப பொருத்தி, அரசியல் - அமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் புரட்சிகர அமைப்புகளே நடைமுறையில் விளைவுகளைச் சாதித்து முன்னேறி வருகின்றனர்.


இவ்வழியில், மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கும் புரட்சிகர அணிகளுக்கும், மக்களிடையே ஆற்ற வேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றிய ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தையும் புரிதலையும் இந்த வெளியீடு அளிக்கும் என்றே நம்புகிறோம்.
பதிப்பகத்தார்.
தோழர் கதீப் அன்சாரி
*****************************

விலை ரூ 4


பிரெடெரிக் எங்கெல்ஸ் - வி.இ.லெனின்
நாளும் வறுமையும்நீளும் கொடுமையுங் கண்டுபீதிக்குள்ளான தொழிலாளி வர்க்கத்தைஆளப் பிறந்தவன் நீயடா ! - இதையார் மறுப்பார் போராடடா !என வாழப்பழக்கியமனித குலத்தின் இதயக்குரல்மார்க்சும் , எங்கெல்சும்.எங்கெல்சை அரசியல்ரீதியாகஅறிமுகம் செய்யும் இந்த நூல்தொழிலாளி வர்க்கம்தன்னைத்தானே அறிந்து கொள்ளவும்தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும்உதவி செய்கிறது.


(இந்நூல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்" என்ற நூலின் ஒரு தலைப்பிலான பகுதியாகும்)


விலை ரூ 6/


"மாபெரும் தெலுங்கானா போராட்டம்"

வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் (1946 - 1951)
விவசாயப் புரட்சியும் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும்
வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் (1946- 1951) இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மகத்தான மக்கள் போராட்டமாகும். அது நிஜாம் மாநிலத்தின் நிலப்பிரபுத்துவ நவாப்பிற்கு எதிரானதும், அதிகார வர்க்க நிலப்பிரபுத்துவ மிராசுதாரர்களின் கொடுமையான சுரண்டலுக்கு எதிரானதும், மற்றும் நிஜாம் மாநிலத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாக்க நுழைந்த நேரு அரசின் இரானுவத்துக்கு எதிரானதுமான ஆயுதந் தாங்கிய விவசாயிகளின் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகும்.


நிலத்திற்காகவும், உணவுக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்ட ஆயுதந்தாங்கிய ஒரு மகத்தான விவசாயப் புரட்சியாக அது விளங்குகிறது.
..வீரம் செறிந்த மகத்தான தெலுங்கானா போராட்டம் பல்வேறு விதமான சுரண்டல்களை இல்லாதொழித்ததுடன், காலங்காலமாக இருந்துவரும் 'வெட்டிச்சாக்கிரி' (கொத்தடிமை)யையும் ஒழித்தது. நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை ஒழித்து, சுமார் 3000 கிராமங்களில் விவசாயிகள் தங்களது சொந்த அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினர். நிலப்பிரபுக்களின் சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர். தங்களது சொந்த நிலத்தைப் பாதுகாக்க மக்கள் ஆயுதம் ஏந்தினர்.
..
இவ்வாறாக வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் மூன்று கோடி ஆந்திர மக்களை ஒன்றிணைத்த ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகத் திகழ்ந்தது. இந்தியாவில் விவசாயப் புரட்சியை தெலுங்கானா போராட்டம் முன்னணிக்குக் கொண்டு வந்தது. அது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட முதல் மிகப் பெரிய விவசாயப் போராட்டமாகும்.
ஆனால் இந்த வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் போலி கம்யூனிஸ்டுகளான திரிபுவாதிகளாலும் நவீன திரிபுவாதிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் எல்லா வெற்றிகளும் அவர்கள் மேற்கொண்ட நாடாளுமன்றப் பாதையினூடே இழக்கப்பட்டன. இப்போராட்டத்திலிருந்து, இந்தியாவில் விவசாயப்புரட்சிக்கான இயக்கத்தை கட்டியெழுப்ப நாம் சரியான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.
இவ்வாண்டு தெலுங்கானா விவாசாயிகள் எழுச்சியின்
அறுபதாம் ஆண்டு !
வீரம் செறிந்த அந்த விடுதலை காவியத்தை செஞ்சில் ஏந்துவோம் !
இந்நூல் தெலுங்கானா போராட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்திய கம்யூனிசப் புரட்சியாளர்களால் 1980-களில் தொகுத்தளிக்கப்பட்ட அறிக்கை...
விலை ரூ 20/

உதவியா? சதியா? - அமெரிக்க அறக்கட்டளைகள் பற்றிய புதிய ஆய்வு

உலகம் முழுவதும் தமது கொடுங்கரங்களை நீட்டக் கூடியவையாக அறக்கட்டளைகள் விளங்குகின்றன. உழைக்கும் மக்கள் - ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐக்கியம் பற்றிய கொள்கைகளை எதிர்ப்பதற்காக வலைவகையான சித்தாந்தங்கள் அறக்கட்டளைகளால் உருவாக்கப்பட்டு கைதூக்கி விடப்படுகின்றன.
..
பரந்துபட்ட மக்கள் திரள் இயக்கங்களுக்குப் பதிலாக, நீதிமன்ற வழக்காடல் என்ற நடவடிக்கையை அறக்கட்டளைகள் ஆதரிக்கன்றன.உள்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு நேரெதிராக அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவே அறக்கட்டளைகள் நிதியளிக்கின்றன.
..
அறக்கட்டளைகளையும் இன்னும் பிற அமைப்புகளையும் தனது சதி நடவடிக்கைகளுக்குக்கான ஊடு பாதைகளாக சி,ஐ.ஏ பயன்படுத்தி வருகிறது.ஏழைநாடுகளில் ஆட்சிக் குடைகவிழ்ப்புகள் நடத்தப்படுகின்றன; எழுச்சிகள் நசுக்கப்படுகின்றன்; அடக்குமுறை ஆட்சிகள் முட்டுக் கொடுக்கப்படுகின்றன; ஏகாதிபத்திய இராணுவங்களாலும் உளவு பார்க்கும் நிறுவனங்களாலும் அவற்றின் அடியாட்களாலும் ஒத்துவராத நாடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கீழ்ப்படுத்தப்படுகின்றன.
-ஜோன் ரோலஃப்ஸ்
அறக்கட்டளைகளும் பொதுக் (அரசு) கொள்கையும் : பன்முகவாதத்தின் முகமூடி என்ற நூலில்....
..
மும்பையைச் சேர்ந்த "அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வு குழு" வினரால் வெளியிடப்படும் "இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்"
பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.


இந்திய இடதுசாரிப் போக்கு - ஒரு கண்ணோட்டம்

இந்தியாவில் ஏன் இன்னும் கம்யூனிச இயக்கம் வளர வில்லை என்று பொறுப்புணர்வோடும், அல்லது விரக்தியோடும் கேட்பவர்களுக்கு ஒரு வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்தும் விதமாக "இந்திய இடதுசாரிப் போக்கு - ஒரு கண்ணோட்டம்" எனும் இச்சிறு வெளியீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் முதல் பதிப்பு வாசகர்களிடமும், ஊக்கமுள்ள அரசியல் அணிகளிடமும் பரவலாக வரவேற்பையும், ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் தூண்டியுள்ளது.கால அவசியம் கருதி மறுபதிப்பு செய்து மீண்டும் வெளியிடுகிறோம்.
இந்தியக் கம்யூனிச இயக்க வரலாறானது, தலைமையின் துரோகமும் அணிகளின் புரட்சிகரத் தியாகமும் நிறைந்தது.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரசின் துரோகத் தலைமையை எப்போதுமே தட்டிக் கேட்கவில்லை; தேசிய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை ஏற்கவும் துணியவில்லை.போலி சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் உள்ள முற்போக்காளர்களைப் பலப்படுத்துவது என்ற பெயரில் காங்கிரசின் வாலாக கம்யூனிஸ்டுக் கட்சி சீரழிந்தது.
தெலுங்கானா புரட்சி இயக்கத்துக்குத் துரோகமிழைத்து, காட்டிக் கொடுத்து அதற்கு முடிவு கட்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத் தலைமை.
நக்சல்பாரி விவசாயிகள் இயக்கம் ஆயுதந் தாங்கிய எழுச்சியாக வெடித்த்க் கிளம்பிய போது, அதை நசுக்குவதற்குப் போலீசை அனுப்பியது, மேற்கு வங்க 'இடதுசாரி' கூட்டணி அரசு.
..
இரண்டு போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் துரோகத்தனமான கொள்கைகளால் வழி நடத்தப்பட்டு, அவசரநிலை பாசிச ஆட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தன.
இந்த நூல் தொகுத்துக் கூறும் கால எல்லைகளைக் கடந்து வலது, இடது(மார்க்சிஸ்டு) போலிக் கம்யூனிஸ்டுகள் திரிந்து, திசைவிலகித் திரியும் சமகால விசயங்களையும் வாசகர்கள் இணைத்துப் பார்க்கும் போது இந்நூலை இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர முடியும்.
மார்க்சியத்தை அறிந்து கொள்வதிலும் துணிந்து செல்வதிலும் மாறாத விருப்பம் கொண்டு, சாவைப் பழித்த மாவீரன் பகத்சிங் நினைவுகளை....இச்சிறுவெளியீட்டின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்களால் சிறப்பியுங்கள்.பதிப்பகத்தார்.
..
இச்சிறுநூல் 19.8.1983-இல் பம்பாயிலிருந்து வெளிவந்த "டைம்ஸ் வீக்லி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஏ.கெட்கர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். அடைப்புக் குறிக்குள் உள்ள சேர்க்கைகள் எம்முடையவை.
மொழியாக்கம்: புதிய ஜனநாயகம் இதழ்


பகத்சிங் நினைவுநாள் வெளியீடு
..

..

"இஸ்லாத்தில் மனுவாதிகள்"

இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில்இ இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இதுஇ பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும்இ மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார்இ இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர்இ ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார்.
கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ""ஃபிராண்டியர்'' (பிப்ரவரி 511இ 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர்இ இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு"தர்ம' அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்இ சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

விலை ரூ 6


"மா சே துங் மேற்கோள்கள்"

மார்க்சியம் -லெனினிசம்- மாசேதுங் சிந்தனையின் மீது உலகப் பிற்போக்குச் சித்தாந்தவாதிகள் அனைவரும் ஒருமுகமாக அவதூறுத் தாக்குதல் தொடுக்கும் காலமிது. இந்தச் சமயத்தில் புரட்சிகர இயக்கத்துக்கு மிகவும் அவசியமானது எனக் கருதியே "மாசேதுங் மேற்கோள்கள்" என்கிற இந்நூலை கையேடு வடிவில் வெளியிடுகிறோம்.


"புதிய ஜனநாயகம்" என்ற பத்திரிக்கை இதை தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பதிப்பித்தது. அதன் அனுமதியோடு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியீடுகிறோம்.


இது போன்ற " மேற்கோள்கள், தொகுப்பு நூல்கள், கை அகராதிகள். வழிகாட்டிகள் வெளியீடுவது என்பதே தவறான அனுகுமுறை, அணிகளை குருட்டுத்தனமான ஆதரவாளர்களாக உருவாக்குவது" என்று பாட்டாளி வர்க்க அணிவரிசையில் இருந்து ஓடிப்போன துரோகிகள் பிரச்சாரம் செய்கிற இச்சமயத்தில் இதை வெளியிடுகிறோம். இப்படிப்பட்ட துரோகிகளின் முன்னோடிகள் தாம் சீனாவில் நடந்த மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின்போது இந்தச் "சிவப்பு நூலை" வைத்துக் கொண்டு எதிர்ப்புரட்சி வேலைகள் செய்தனர். அதற்கு மாறாக உண்மையான பாட்டளி வர்க்கப் புரட்சிகர முண்ணனியினரின் அளப்பரிய ஆற்றலை வெளிக் கொணரும் சித்தாந்தப் பேராயுதமே இச்சிவப்பு நூல் என்பதை நாமறிவோம்.
- பதிப்பகத்தார்
********************

விலை ரூ 50

இந்திய மரபும் பார்ப்பன திரிபும் - பேரா.பெரியார்தாசன்
"இந்துத் தத்துவ மரபு என்பதுபார்ப்பன மரபு.இந்திய தத்துவ மரபுதமிழர், தெலுங்கர், மராத்தி, குஜராத்தி....மக்களின் மரபு.இது பார்ப்பன மரபு அல்ல.வாழ்க்கை நெறியாகவும்,சிந்தனையின் தெளிவாகவும்விளங்குவதே தத்துவம்;இதுதான் இந்தியத் தத்துவ மரபு.இந்த அறிவே இல்லாமல்வாழ்வே மாயம் ; மண்ணாவதே திண்ணம்என்று பிதற்றுகிறதுஇந்துத் தத்துவ மரபு."
- பேரா.பெரியார்தாசன்முன் அட்டை ஓவியம் - ஓவியர் முகிலன்வெளியீடு &

விலை ரூ 12


'மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி'

-
இந்நூலை ஆசிரியர் மாரிஸ் கார்ன் போர்த் தத்துவம் நடைமுறை இரண்டிலும் இடைவிடாத போராட்டத்தோடு நாற்பதாண்டு காலம் இங்கிலாந்து நாட்டில் ஒரு கம்யூனிஸ்டாய் வாழ்ந்தவர்.
தனது கல்லூரி நாட்களிலிருந்தே சொல், செயல் இரண்டிலும் ஒன்றாக வாழ உறுதிமேற்கொண்டு கேம் பிரிட்ஜ் பகுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்கான அமைப்புத் தொடங்கியப் போராடி வந்தார்.அப்போது டெய்லி வொர்க்கர்(daily worker- அன்றாடத் தொழிலாளி) என்ற நாளேட்டை விற்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றார். கீழைப் பிராந்தியத்தில் செயல்பட்ட தொழிலாளர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களிடையே செய்தித் தொடர் பானராகச் செயல்பட்டபோது சைக்கிள் வண்டியில் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்த செயல் வீரர் என்று பெயர் எடுத்தவர்.
மார்க்சீய தத்துவத் துறையில் மிக உயர்ந்த தேர்ச்சி பெற்ற கார்ன் போர்த் தான் கற்றது அனைத்தையும் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக நூல்கள் ஆக்கினார். "இயங்கியல் பொருள்முதல்வாதம் - ஓர் அறிமுகம்", " அறிவியல் X கருத்துமுதல்வாதம்", "மார்க்சீயமும் மொழியியல் தத்துவமும்", "வரலாற்றின் வறுமை" போன்றவை இவரது முக்கிய நூல்கள்.
"திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்" என்ற இவரது நூல் அவர் காலத்தில் மார்க்சீயத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பிரபல முதலாளித்துவ அறிஞர் கார்ல் பார்பருக்குச் சவாலாக எழுதப்பட்டது.
ஒரு சிறந்த படிப்பாளியாகத் தொடங்கிய கார்ன் போர்த் எளிய நூலாசிரியப் பணியாலும், தொழிலாள்ர் கூட்டங்களில் எளிய மேடைப் பேச்சாளராகச் செயல்பட்ட மணியாலும் ஒரு கம்யூனிஸ்டாகத் தன்னை வார்தெடுத்துக்க் கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவர் செய்த தத்துவ ஆராய்ச்சிகள் மார்க்சியப் படிப்புக்கு பெருமளவு உதவியானவை.


மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி என்ற இவரது நூல் மிகச்சீரிய அரிய முயற்சி. தமிழில் முதன் முறையாக வெளிவரும் இந்நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பதிப்பகத்தார்
-------------------------------------

விலை ரூ 35


'வதைக்கப்படும் மக்களும் புதைக்கப்படும் உரிமைகளும்'

மக்களது ஜனநாயக உரிமைகளுக்காக போராடிவரும் திரு.கோவிந்த முகோத்தியின் இக்கட்டுரை எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி என்ற ஆங்கில ஏட்டில் , மே 21, 1994 ம் ஆண்டு இதழில் (பக்கங்கள் 1259-1263) வெளியாகியது. அதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பே இவ் வெளியீடு. நாடு முழூவதும் போலீசும் இரானுவமும் எவ்வாறு கசாப்பு நிறுவனங்களாக, " மனிதக்கறி" போட்டு வளர்க்கப்படும் மிருகங்களாக, வக்கிரம் நிறைந்தனவாக விளங்குகின்றன என்பதற்கான ஆதாரங்களை அளிக்கிறது. அதே சமயம் வதைகளுக்கு எதிரான சட்டங்களும் இந்திய ஏற்றுக் கொள்ளும் சர்வதேச பிரகடனங்களும் நாளும் அற்பமாக காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
நீதிமன்றங்களின் பாராமுகமும் ஆட்சியாளர்களின் திடலடி மறுப்பும் இத்தகைய இழிநிலையை மேலும் தீவிரமாக்குவதைச் சுட்டிக் காட்டுகிறது.
உரிமைகளுக்காக போராடுபவர்களை மட்டுமல்ல, ஒன்று மறியாத சாதாரண மக்களையும் வாட்டி வதைக்கும் அரசு பயங்கரவாதத்தை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இக்கட்டுரை. அரசும், அதன் அமைப்புகளும் தானே வரையறுத்துள்ள சட்டப் பூரவ மனித உரிமைகளைக் கூட அற்பமாய் நினைக்கும் கொலைக்கருவியாக மாறியுள்ளன என்பதற்கு இது ஒர் இரத்த சாட்சி.
எழுச்சியும் மக்களது போராட்டங்களினால் சொந்த நாட்டு மக்களையே 'சந்தேக கேசுகளாக' கண்காணிப்பதும், கண்மூடித்தனமாய் வதைப்பதும் அரசின் அன்றாட அலுவல்களாக ஆகிவிட்டன. மக்களை வதைப்பதிலும், பாலியல் வக்கிரத்திலும் இதர மாநிலங்களின் போலீசுக்கோ, துணை இராணுவப் படைக்கோ குறைத்தவர்கள் அல்ல என மார்தட்டுகிறது. தமிழக காவல்துறை .
இத்தகைய அம்பலப்படுத்தல்களும் இவைகளை மக்களுக்கு அறியச் செய்வதும் நமது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் முதற்தேவை எனுமடிப்படையில் வெளியிடப்படும் இந்நூலை படித்தும் , பரப்பியும் ஆதரிக்க வேன்டுகிறோம்.
கீழைக்காற்று
செப்டம்பர்,1994
-------------------------------------
கோவிந்த முகோத்தி
விலை ரூ 7.00
--------------------------------------

இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?

மறுகாலனியாதிக்கத்தின் சுரண்டல் ஒரு புரமென்றால் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை மறுபுறம் உயிர்ப்புடன் வாழ்கிறது. உண்மையில் , ஏகாதிபத்தி மேலாதிக்கத்தின் கொடுமையை உணரவிடாமல் பார்ப்பனியம் திரை போலத் தடுத்துவிடுகிறது. எனவே இந்தத் திரையைக் கிழிப்பது அவசியமான அரசியல் கடமையாக நம்முன் நிற்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான் சித்தாந்தப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வலிமை சேர்க்கவே இந்நூலைக் கொண்டு வருகிறோம். மீண்டும் பெரியார் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதன் மூலமாக, பார்ப்பனியத்தின் கல்லறையாக, இராமனின் சமாதியாக தமிழகத்தை மாற்றுவோம்.


..புதிய கலாச்சாரம் மற்றும் எமது தோழமை ஏடான புதிய ஜனநாயகத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன...


ஆசிரியர் குழு,புதிய கலாச்சாரம்.
..

வெளியீடு
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
..

விலை ரூ 25/-

..

"போராடும் தருணங்கள்"

"ஒரு கவிஞன் தனது எண்ணங்களை வெளியிட 'சுதந்திரமாகக்' கற்பனை செய்து எழுதுவது போல அல்ல இந்த உரைவீச்சுக்கள். இங்கே நடந்தது புரியாமல் இருக்கும் ஒரு சமூகத்தை, செய்வதறியாமல் இருக்கும் மக்களை மனதிற்கொண்டு , அவர்கள் எதைப் பேச வேண்டுமோ அதை, எப்படிப் பேசவேண்டுமோ அப்படிச் சிந்தித்து, தோய்ந்து, எழுச்சியுடன் எழுதுவது என்பது வெறும் எழுத்துப் பய்ற்சி சார்ந்தது மட்டுமல்ல.


ஆம், நம் மக்களின் பிந்தங்கிய சமூக நிலைமையும், முன்னேறக் கடினமாக இருக்கும் அரசியல் சூழ்நிலையும், மக்களின் எதிரியை மறைத்து உலவும் சமரச அட்டைக் கத்தி வீரர்களும், நிறைந்திருக்கின்ற காலவெளியில் ஒரு புரட்சிகர அமைப்பு உதித்தெழுவதற்கான போராட்டம் எத்தகைய சிக்கல்களை கடக்கின்றதோ அதிலெல்லாம் சேர்ந்து கரையேறியவைதான் இந்தக் கட்டுரைகளும்"
-ஆசிரியர் குழுபுதிய கலாச்சாரம்
..
வெளியீடு & தொடர்புக்கு:

*******************************

புதிய கலாச்சாரம்# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706...பக் 117,

விலை ரூ 40


சினிமா: திரை விலகும் போது...

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.


இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் , சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை 'தினத்தந்தி' பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கையோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் 'மேதைமையையும்' வியந்தோறுகின்றன.


எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குரித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசப்பத்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலன் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமான ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ·பார்முலாவில் குழைக்கப்பட்டு , ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம், இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.


அதனால் தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கல் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.


செல்வாக்கு மிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை,அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள் , எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.


வெளியீடு & தொடர்புக்கு:
***********************************
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,

இரண்டாவது அவென்யூ,அஷோக் நகர்,சென்னை. 600 083.தொலை பேசி - 044-23718706.
..
பக் 205, விலை ரூ 70

மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்கள், உரைகள், ஒலி-ஒளி வட்டுகள், சிறுவெளியீடுகள் அனைத்தும்
..
ஜனவரி 4 முதல் 17 வரை சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் கிடைக்கும்.

கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •