
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பெரியதொரு விசயப்பொருளாகும். அதை ஒன்றுவிடாமல் விளக்குவதெனில் ஒரு பெரிய நூல் தொகுதியே தேவைப்படும். ஆகவே எனது உரைகள், லெனினியத்தை விரிவாக எடுத்துரைப்பதாக இருக்க முடியாது என்பது இயற்கையே. அதிகபட்சமாகப் பார்த்தாலும், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிய, இரத்தினச் சுருக்கமான பொழிப்புரையை மட்டுமே வழங்கக் கூடியதாக எனது உரை இருக்கும். இருந்தபோதிலும், இரத்தினச் சுருக்கமான இந்த பொழிப்புரையை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்றே நாள் கருதுகிறேன். லெனினியத்தைப் பயனிறைவாகக் கற்றாய்வதற்கான முறையில், அதற்குத் தேவையான சில அடிப்படை விசயக் கூறுகளை எங்கிருந்து தொடங்குவது என்பதை இந்த உரையின் மூலம் முன்வைக்க இயலும் என்று நான் கருதுகிறேன்.
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விவரமாக எடுத்துக் கூறுவது என்றால், லெனினுடைய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கிக் கூறுவது என்று பொருளாகாது. ஏனென்றால், லெனினுடைய உலகக் கண்ணோட்டமும், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் ஒரே பரப்பெல்லையைச் சேர்ந்தவை அல்ல. லெனின் ஒரு மார்க்சியவாதியாக இருந்தார்; அவருடைய உலகக் கண்ணோட்டத்துக்கு மார்க்சியம் தான் அடிப்படையாக இருந்தது என்பது உண்மை.
எனவே, இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், லெனினியத்தைப் பற்றிய விரிந்துரைத்தல் என்பது, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விரிந்துரைப்பதிலிருந்து தொடங்கியாக வேண்டியதில்லை என்பதுதான், அப்படியானால், லெனினியத்தை விரித்துரைப்பது என்பதன் பொருள் என்னவாக இருக்கும்? லெனினுடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கதும் புதியதுமானவற்றை விரித்துரைப்பது என்றே பொருள்படும்; மார்க்சியம் என்ற பொதுக் கருவூலத்துக்கு லெனின் என்ன பங்களிப்பை வழங்கினார் என்பதை, அவருடைய பெயருடன் இணைந்த குறிபிடத்தக்கதும் புதியதுமான பங்களிப்பை விரித்துரைப்பது என்றே பொருள்படும். இந்தப் பொருளில் மட்டும்தான், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய எனது உடையில் பேசப் போகிறேன்.
- ஜோசப் வி. ஸ்டாலின்
அயல்மொழிப் பதிப்பகம், பெய்ஜிங் -1975 இல் வெளியீட்டுள்ள "லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்" (Foundations of Leninisam) எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம்.
வெளியீடு:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367
விலை:
ரூ 75
அயல்மொழிப் பதிப்பகம், பெய்ஜிங் -1975 இல் வெளியீட்டுள்ள "லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்" (Foundations of Leninisam) எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம்.
வெளியீடு:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367
விலை:
ரூ 75
No comments:
Post a Comment