
போலி மார்க்சிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவராயிருந்தவர் திருவாளர் பி.ராமமூர்த்தி. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலை போரும் திராவிட இயக்கமும்" என்றொரு நூலை அவர் எழுதிவிட்டுப் போயுள்ளார். உண்மையில் அந்நூல், காந்திய - காங்கிரசு- பார்ப்பனிய பார்வையில் விடுதலைப் போரையும் திராவிட இயக்கத்தையும் எடை போடும் ஒரு கம்யூனிசத் துரோகியின் மரணசாசனம்!
திராவிட இயக்கத்தை அம்பலப்படுத்துவதற்காக ஒரு நூல் எழுதப் புறப்பட்ட திருவாளர் ராமமூர்த்தி, தமது கட்சியின் துரோகங்களுக்கான வாக்குமூலமளிப்பதோடு, தானே ஒரு காந்திய - காங்கிரசு- பார்ப்பனியவாதி என்பதை அடையாளம் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தானொரு கைதேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தரகர் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளார். இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில், துரோகிகளின் வரிசையில் முன்னணியில் நின்ற திருவாளர் ராமமூர்த்தி, தள்ளாத வயதிலும் பதவி மோகம் தீராத காரணத்தால் எம்.பி.பதவிக்காக காங்கிரசு எம்.எல்.ஏக்களிடம் இரகசியமாக ஓட்டுப்பிச்சை கேட்டு அம்பலப்பட்டுப் போனார். ஆனாலும், மறைந்த துரோகியை மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளராகவும் விடுதலைப் போராட்டத்தியாகியாகவும் சித்தரித்து, அணிகளையும், மக்களையும் ஏய்த்து அவருக்கு நூற்றாண்டு விழா நடத்தக் கிளம்பியுள்ளனர், போலி கம்யூனிச சி.பி.எம்.கட்சியினர்.
கம்யூனிச துரோகிகளை மட்டுமின்றி நீதிக் கட்சியின் துரோகத்தையும் இனக்காட்டி, வரலாற்று ஆதாரங்களுடன் திருவாளர் ராமமூர்த்தியின் நூல் மீதான விமர்சனம், புதிய ஜனநாயகம் இதழில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் கட்டுரையாக வெளிவந்தது. இக்கம்யூனிசதுரோகியின் அரசியல் வாரிசுகள் அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துவரும் இன்றைய சூழலில், இத்தொடர் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்ற வாசகர்களின் கோரிக்கையை ஏற்று நூலாக வெளியிடுகிறோம். போலி கம்யூனிசத்துக்கு எதிராக அரசியல் - சித்தாந்தப் போராட்டத்தில் புரட்சிகர அணிகளுக்கு இந்நூல் இன்னுமொரு ஆயுதமாகத் திகழும் என்றே நம்புகிறோம்.
-ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
வெளியீடு:
புதிய ஜனநாயகம்,
விலை ரூ 40
புதிய ஜனநாயகம்.
வெளியீடு:
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561
தொலைபேசி: 94446 32561
விலை ரூ 40
No comments:
Post a Comment