உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் என்ற கூச்சல் நம் செவிப்பறைகளைக் கிழித்துக் கொண்டுருக்கும் நேரம் இது. அன்னிய மூலதனமும், பன்னாட்டு நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் சொர்க்கத்தை பரத கண்டத்திற்கு இறக்குமதி செய்துவிடும் என்று நம்மை நம்ப வைக்க ஊடகங்கள் ஒன்றைக் காலில் தவமியற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த வெற்றுக் கூச்சலில் பன்னாட்டு நிறுவனங்களிடம் சகலத்தையும் இழந்துவிட்டு பெருநகரங்களின் நடைபாதைகளில் ஐக்கியமாகியிருக்கும் ஏழை மக்களின் குரல் நமது காதுகளில் நுழைவதேயில்லை. எப்போதாவது இந்தக் காட்சிகள் நம்து மனச்சாட்சியை லேசாக உரசிப் பார்த்தாலும் அன்னிய மூலதனம் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து விடுமென்ற ஊடகங்கள் பரப்பும் மாயை நம் உள்ளங்களை திரைபோட்டு மறைத்துவிடுகிறது.
புஷ்ஷை ஆக்கிரப்பாளனாகப் பார்த்தாலும் பில் கேட்ஸை மனித உழைப்பின், அறிவின் சின்னமாகப் பார்க்கும் போக்குதான் நிலவி வருகிறது. அமெரிக்க அரசு நடத்தும் படுகொலைகளுக்கும், சதி வேலைகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடைவெளி இருப்பதாகவே, இவையிரண்டும் வேறு வேறு என்றே சராசரி இந்தியன், தமிழன், மலையாளி வங்காளி....நம்ப வைக்கப் பட்டுள்ளான்.
ஜான் பெர்க்கின்ஸின் இந்நூல் அந்த மாயையைத் தகர்க்கிறது. அமெரிக்க அரசும் , பன்னாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் எப்படி இரண்டறக் கலந்துள்ளன என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல்.
ஜான் பெர்க்கின்ஸ்
----------------------------------
தமிழில்: இரா. முருகவேள்
தமிழில்: இரா. முருகவேள்
விடியல் பதிப்பகம்
விலை ரூ 150
கிடைக்குமிடம்
----------------------------------
கீழைக்காற்று
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
தொலைபேசி எண் : 044-28412367
3 comments:
புத்தக பிரியன் அவர்களே,
இந்த புத்தகம் சென்னையில் எங்கு வாங்கலாம்?. வேகு நாட்களாக இந்த புத்தகதை படிக்க ஆர்வம். ஆங்கில பிரதி விலை அதிகம், தமிழில் நல்ல விலையில் கிடைக்கிறது.
இந்த புத்தகத்தை எங்கு வாங்க முடியும் என்று தெரிவித்தால் மகிழ்ச்சி.
நன்றி!
Confessions of an Economic Hitman
சென்னையில் கீழைக்காற்று புத்தக விற்பனையகத்தில் வாங்கலாம்.
அதன் முகவரி
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044௨8412367
இந்த புத்தகம் நல்ல புத்தகம்.
முழுமையான அரசியல் பார்வைக்கான புத்தகம் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, அமெரிக்க அர்சின் அரசியல் பொருளாதார உறவுகளை எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் நாவல் போல விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது.
சிரியனா என்றொரு அமெரிக்கப் படம் எண்ணைய் அரசியலை மையப்படுத்தி வந்தது.
அசுரன்
Post a Comment