பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Saturday, September 1, 2007

"ஸ்டாலின் சகாப்தம்"

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது மக்கள் அதனை "ஸ்டாலின் சகாப்தம்" என்று சொல்லக் கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டை நிர்மாணித்தார்கள். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். விவசாய நாடாகிய ருஷ்யா இதைச் செய்ய முடியும் என்ற சிந்தனையை முதன் முதல் ஒலித்தவர் அவர்தான். அது முதற் கொண்டே அனைத்தின் மீதும் - எல்லா நன்மைகள் மீதும் எல்லாத் தீமைகள் மீதும் அவரது முத்திரை பதிந்தது.

அந்த சகாப்தத்தைத் தொகுத்துச் சொல்லும் நேர வந்து விடவில்லை. ஆயினும் அந்த முயற்சியை செய்து பார்க்கத்தான் வேண்டும். ஏனென்றால் அது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகெங்கிலும் பலருடைய நம்பிக்கைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. முதன் முதலாக சோசலிசம் நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் ஆயிரக்கணாக்கான கொடிய அநீதிகளும், கடுமையான அடக்கு முறைகளும் நேரிட்டன என்று குருஷ்சேவ் வெளிப்படுத்தியுள்ள செய்திகளால் நல்ல நெஞ்சங்கள் கலக்கமடைந்துள்ளன. அவர்கள் கேட்கிறார்கள்; இது அவசியம்தானா? எப்போதுமே அதுதான் சோசலிசத்திற்கான பாதையா? அல்லது ஒரு நபரின் மதிதானா இது?

ருஷ்யர்கள் இப்படி கேட்பதில்லை என்று நினைக்கிறேன். மனிதகுல முன்னேற்றம் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதுதான்; போரில் வீரர்கள் இறப்பது மட்டுமல்ல, அநியாய மனிதச் சாவுகளும் அதற்கு விலையாகின்றன என்பது அவர்களுக்கு ( ருஷ்யர்களுக்கு) தெரியும்.

ஸ்டாலின் தலைமையில் சோசலிசத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது அனுபவித்த தீமைகள் முழுவதும் - அவை நேரிட்டது அவசியத்தாலென்றாலும், பிழையாலென்றாலும், குற்றத்தாலென்றாலும் - தலையீட்டுப் போர்களில் மேற்கத்திய உலகத்தின் முரட்டுப் பிடிவாதத்தாலும், இட்லர் படையெடுப்பாலும் தாங்கள் அனுபவித்த தீமைகளைவிட மிகக் குறைவே, "இரண்டாவது போர் முனையைத்" துவக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அமெரிக்கா செய்த தாமதத்தினால் தாங்கள் அனுபவித்த தீமைகளைவிடவும் கூட மிகக் குறைவே என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

எனது மேலையுலக நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வேன்; வரலாற்றின் மாபெரும் செயலூக்கமிக்க சகாப்தங்களில் ஒன்றாக அது திகழ்ந்ததுல் ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாய் அது இருக்ககூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையே அது மாற்றியது. அதனைப் படைத்தவர்களில் யாரையும் அது மாற்றாமல் விடவில்லை. கோடானு கோடி வீரர்களையும், சில சைத்தான்களையும் அது பிரசிவித்தது. சிறிவர்கள் இப்போது அதனைத் திரும்பிப் பார்த்து, அதன் குற்றங்களுக்குப் பட்டியல் தயாரிக்கலாம். ஆனால் போராட்டத்தினூடே வாழ்ந்தவர்கள் - அதனால் இறந்த பலரும் கூட- நடந்து கொண்டிருந்த கட்டுமானப் பணிக்கான செலவின் ஒரு பகுதியாகக் கருதித் தீமையை ஏற்றுக் கொண்டனர்.

இட்லரை எதிர்த்து நிற்க முடியாமல் பிரான்ஸ் நாட்டுப் படை பதினோரே நாட்களில் மண் கவ்வியதே ஆயிரமாண்டுகள் நீடிக்கக்கூடிய புதிய இருண்ட காலம் வந்து விடுமென்று ஐரோப்பா அஞ்சிக் கொண்டிருந்ததே, அந்த 1940-ஆம் வருட ஐரோப்பாவை மறப்போமா ? அடிமை இனங்களுக்கெல்லாம் தாங்களே ஆண்டை இனமென்று முரசு கொட்டியவர்கள் மனித குலம் முழுவதன் மீதும் நடத்திய கொடுந்தாக்குதலையும், ஸ்டாலின் கிராடின் ஆண்களும் பென்களும் இந்தத் தாக்குதலை முறியடித்த விதத்தையும் மறப்போமா? அவர்கள் அசுர வேகத்தில் நிர்மாணித்தார்கள், நிறைய விரயங்களோடு நிர்மாணித்தாரகள்; ஆனால் அவர்கள் நிர்மாணித்த வலிமைதான் உலகமே சுருண்டு கொண்டிருந்த போது நிமிர்ந்து நின்றது. இதற்காக உலகம் இன்று அவர்களுக்குக் கடனாளியாகி விட்டது.

இதற்காக மட்டுமல்ல, ஸ்டாலின் சகாப்தம் உலகத்தின் முதல் சோசலிச நாட்டையும், இட்லரைத் தடுத்து நிறுத்திய வலிமையையும் நிர்மாணித்தது மட்டுமல்ல. மனித குலத்தில் மூன்றிலொரு பங்கான சோசலிச நாடுகள் உருவாக்கி அனைத்துக்குமான பொருளாதார அடித்தளத்தை நிர்மாணித்தது.

அந்த சகாப்தத்தின் தீமைகளுக்குப் பல காரணங்களுண்டு. ருஷ்யாவின் கடந்த காலப் பழக்கங்கள், விரோதமான சுற்றி வளைப்பின் நெருக்குதல், இட்லரின் ஐந்தாம் படை போன்ற ஒரு காரணங்களுண்டு. முதற்பெரும் காரணம் என்னவென்றால் , மேலையுலகின் ஜனநாயகத் தன்மையுள்ள, தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை முதன் முதலில் கட்டுகின்ற பணியை எழுத்தறிவற்ற, தொழில் நுட்பத்தில் பிற்பட்ட ஒரு விவசாய மக்கள் சமூகத்திடம் விட்டுவிட்டது என்பதே; இப்பணிக்குத் தாங்கள் தயாராயில்லை என்பது அம்மக்களுக்குத் தெரிந்திருந்தது; ஆயினும் அவர்கள் அதனைச் செய்து முடித்தனர்.
அன்னா லூயி ஸ்ட்ராங்
.
..
தோழர் ஸ்டாலின் மீதான அவதூறு அனைத்திற்கும் இந்நூலில் சாட்டையடி தரப்பட்டு உள்ளது. கோடாண கோடி மக்கள் வறுமையினாலும், அமெரிக்க ஆக்கிரமிப்பினாலும் துன்புற்று மடிந்து கொண்டு இருக்கும் இன்றையச் சூழ்நிலையில் இதனை மாற்றி அமைக்க சோசலிசம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும். அத்தகைய சோசலிசத்தை உலகின் முதன் முதலில் உருவாக்கியவர் தோழர் ஸ்டாலின்.
..
ஸ்டாலின் மீதான அவதூறு குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...
..
"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள்.
..
ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.
..
ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள்.
..
நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.
..
ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.
..
""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.


"ஸ்டாலின் சகாப்தம்"
..
அன்னா லூயி ஸ்ட்ராங்
.
தமிழில் தியாகு.

வெளியீடு
சென்னை புக்ஸ்
6,தாயார் சாகிப்
2-வது சந்து,
சென்னை-600 002

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •