பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, March 9, 2008

"புதிய கலாச்சாரம்" மார்ச் 2008

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ்:
வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்!
ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!
--------------- தலையங்கம்

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய நமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்கள் மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள்தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச் 2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட முடியும்.

சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமுல்படுத்தக் கோரினால் 'சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற அதைவிடப் பெரிய அரசானை அமலாகிறது! " தமிழ் பாடலாம் " என்று ஆணையிடுகிறது அரசு, "அதை அமல்படுத்த உத்தரவாதம் தரமுடியாது" என்று அந்தக் கோயிலில் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஒ.

நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பலமேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்க முடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையை பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது.

பள்ளி மாணவர் வன்முறை:
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!
---------------- அட்டைப்பட சிறப்புக் கட்டுரை.

மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

"இந்த உலகத்தில் பெரும்பாண்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்" என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய " சரியான அனுகுமுறை, மாறாக " இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம்,. உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி", என்று குழந்தைகளைக் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!

நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவக் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுக் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.

மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால் பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில் தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் 'அன்பு; பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.

அமெரிக்க சிந்துபாத்களும்
பின்லேடன் வேட்டையும்!

ஒசாமா மற்றும் அல்கொய்தா அபாயம் நீடிக்கும் வரைதான், போர்களையும் கொள்ளைகளையும் நீட்டிப்பதற்கான, அமெரிக்க வாக்காளர்களை ஏய்ப்பதற்கான குறைந்தபட்ச அரசியல் நியாயத்தையேனும் அமெரிக்கா தக்க வைத்து கொள்ள முடியும்.

எனவே, பயங்கரவாதப் போரை வர வேண்டுமானால், உலகின் முதல் நிலை பயங்கரவாதியைத் தண்டித்தால்தான் முடியும். அம்முதல் நிலை பயங்கரவாதி இந்துகுஷ் மலையில் அல்ல, புஷ் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் வெளிப்படையாக உலவிக் கொண்டிருக்கிறான்.

தரகு முதலாளிகளின் பிடியில்
தமிழ் சினிமா!

சினிமாவின் உள்ளடக்கமும் வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனி நபர் வாதம் நுகர்வு, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடி நாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, 'நடுத்தர மேட்டுக்குடி, வாழ்வே வாழ்க்கையின் லட்சியம்' என்று போற்றப்படும்.

இளமையின் கீதம்
----- நூல் அறிமுகம்

'புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்ட வேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால் எனது பிரச்சினை தனியானது நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும், மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்யகிறது நாவல்.

அண்ணன் வர்றாரு... வள்ளல் வர்றாரு.... எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த
காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்;
"இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
திடுட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்".

கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
"இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்."

திருக்கடையூர் புராணம் அல்லது 60-வது கண்டம்

அடித்த கொள்ளைக்கும்...
குடித்த இரத்தத்திற்கும்....
அறுபது வயசு பத்தாதாம்,
"ஆயிளைத்தா" என
ஆரிய பூதம் வருகிறது.

செத்துப் பிழைக்கும் தமிழகமே.
அடுத்த குறி உனக்குத்தான்!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் 25குரல் 9,10
பிப், மார்ச் 2008
உள்நாடு ரூ 5.00
சந்தா, படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •