பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, July 11, 2008

"புதிய கலாச்சாரம்" ஜூலை 2008



பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!
----------------தலையங்கம்

மகரஜோதி பொய்!
ஐஸ் லிங்கம் பொய்!
பக்திப் பரவசமும் பொய்!
---------------அட்டைப்பட கட்டுரை


'இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணற்திட்டு என்று சொன்னால், இல்லையில்லை, அது ராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். ' அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் 'இல்லையில்லை, அது இயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெவீகம்! தெற்கு செயற்கை தெய்வீகம்!

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? 'மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பபன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை 'மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள் என்று மட்டும் நாம் கருதமுடியும் என்ன வகை பகதி இது?

மூட நம்பிக்கை - பகுத்தறிவு, ஏமாற்றுபவன் - ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ¦ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த 'பக்தி' காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்கு பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள் ! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரிந்தறிய முடியவில்லை.

WWF எப்றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள் கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். 'குத்து...கொல்லு' என்று வெறிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் ? நடிகன் யார், ரசிகன் யார் / தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் கொள்ளுபவன் யார் ? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார் கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் 'பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை; லெளகீதத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளில்லும் வேர்பரப்பியிருக்கும் இந்தப் 'பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது 'ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் எனப்படும் எம்.ஆர்.ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்த போது, "குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மது விலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது" என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு "ராமன் என்ன எஞ்சினீயரா?" என்ரு கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

"சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்" என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த 'அட்டைக்கத்திகள்' நிறைந்த இந்தக் காலத்தில் 'ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை' நினைவு கூர்வது, வேறேதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.

பணம் அலுக்கவில்லை - பகட்டு அலுத்துவிட்டது
---------------- குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

சத்யபாமா பல்கலைக்கழகம்:
---------------- பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்:
தொண்டர்களாக குண்டர்கள்!
தலைவர்களாக கிரிமினல்கள்!
---------------- ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப் போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!

அமெரிக்கா:
----------------வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
---------------- திங்கள் சத்யா இனையத்திலிருந்து

காதல் முதல் கருப்பை வரை வாடகைக்கு!
--------------- சேவைத்துறையின் வரம்புகள் எங்கே முடிகின்றன? அவுட்கோர்சிங் என்ற குத்தகை வேலை முறை எந்த எல்லை வரை விரியவிருக்கிறது? அது இன்னும் எத்தனை தூரம் விரிந்தால் இந்தியா வல்லரசு ஆகும்?

சிறுகதை:
நாய்க்கர்

கவிதை :
கல்வி கடவுள் டில்லி பாபு!
கெட்டாலும் மேன்மக்கள்.....

26 வது ஆண்டில் புதிய கலாச்சாரம்

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் :25, 26
குரல் :11-12, 1-2

உள்நாடு : ரூ 10

ஆண்டு சந்தா: ரூ 150

சந்தா படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706
மின் அஞ்சல் முகவரி:
pukatn@gmail.com

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •