"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி கைராட்டை சுற்றிச் சுற்றி, உண்ணாவிரதப் போர் முறையின் மூலமே வெள்ளையனிடமிருந்து 'விடுதலை' பெற்று விட்டோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பி காங்கிரசின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவுடன் காங்கிரசின் தன்மையும் மாறியது. "நமது பாடசாலைப் புத்தகங்கள் போதிக்கின்ற இந்த விவரங்கள் சாரமற்று நீர்த்துப் போன பழங்கஞ்சிக்கு ஒப்பானது. எள்ளின் முனையளவும் உண்மையற்றவை. காங்கிரசின் பிறப்பே வேசித்தனமானது; மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி- காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.
பக்கம் 4
1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவங்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் துக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் காட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை.
தாதாபாய் நவ்ரோஜி , திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் - எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது.
மக்களைச் சாதி , மத அடிப்படையில் பிரித்து போதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அருவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901 -இல் முசுலீம் லீக்கும்,
1918- ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.
1918- ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.
பக்கம் 9
..
படுபிற்போக்காளர்கள்
"......சென்ற ஐம்பது ஆண்டுகளில் கற்றவற்றை எல்லாம் மறப்பதில்தான் இந்தியாவின் விமேசனம் இருக்கிறது. ரயில்வேக்கள், தந்திகள், ஆஸ்பத்திரிகள், லாயர்கள், டாக்டர்கள் இவை. இவர்கள் போன்றன மறையவேண்டும்......உணர்வோடும், சமய நம்பிக்கையோடும் மனமறிந்தும் எளிய விவசாயி வாழ்க்கை வாழக் கற்க வேண்டும் "
(காந்தி- நம்பிக்கையின் பாவ ஏற்பு, 1909, சொற்பொழிவுகள், பக்கம் 1041-43)
குழப்பவாதிகள்
"நம் தலைவர்களில் பலருக்கு சுயராச்சியம் எனில் விடுதலையைவிடக் குறைவான ஏதோ ஒன்று எனத் தெளிவாயிருந்தது. இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார். அதைப் பற்றிக் தெளிவாய்ச் சிந்திக்கவும், அவர் ஊக்கம் தரவில்லை" ( ஜவஹர்லால் நேரு, சுயசரிதம், பக் 76) என நேரு வெளிப்படையாகவே கூறுகிறார்.
இந்து சநாதனி
"நான் என்னை ஒரு சநாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில்-
வேதங்களை, உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகிறவை அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறிவியையும் நான் நம்புகிறேன்.
என் கருத்துப்படி வேதப் பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல் . நான் வருணாசிரம தருமத்தை நம்புகிறேன்.
மக்கள் நம்பும் பொருளில் அல்லாமல், இன்னும் விரிவான பொருளில் நான் பசுவைப் பாதுக்காப்பதை நம்புகிறேன்.
விக்கிரக ஆராதனையை நான் நம்பாமல் இல்லை."
(காந்தி, "யங் இண்டியா"வில் அக் 12, 1921)
பக்கம் 30,31
வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15
RELATED :
2 comments:
அனைவரும் படிக்க வேண்டிய நூல் நம் பாடபுத்தகத்தில் சொல்லாமல் மறைக்கப்பட்ட செய்திகளை கொண்ட நூல் இது.
உண்மை வரலாறு ஆதாரத்துடன் விளக்கப் பட்டுள்ளது.
அனைவரும் படிக்க வேண்டிய நூல் நம் பாடபுத்தகத்தில் சொல்லாமல் மறைக்கப்பட்ட செய்திகளை கொண்ட நூல் இது.
உண்மை வரலாறு ஆதாரத்துடன் விளக்கப் பட்டுள்ளது.
Post a Comment