அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !
மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.
மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?
நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!
அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!
- வெளியீட்டில் இருந்து
..
தொடர்புக்கு:
.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024போன்:94448 34519
பிரதிகள் கிடைக்குமிடம்:.
இரா.சீனிவாசன்
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600 083
..
நன்கொடை ரூ 5/-
புத்தகப் பிரியன்
பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது
Monday, August 11, 2008
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!
Posted by புத்தகப் பிரியன் at 8/11/2008 05:37:00 PM 0 comments
Sunday, August 10, 2008
சிறீரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் ஏன்?
Posted by புத்தகப் பிரியன் at 8/10/2008 06:56:00 PM 0 comments
Labels: சிறுவெளியீடு
Saturday, August 9, 2008
துச்சாதனர்களைத் தோலுரிப்போம்!
Posted by புத்தகப் பிரியன் at 8/09/2008 06:56:00 PM 0 comments
Labels: சிறுவெளியீடு
Saturday, August 2, 2008
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2008
தங்க முலாம் பூசிய விலங்கு!
எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!
விவசாயக் கடன் தள்ளுபடி:காகித கவர்ச்சித் திட்டம்
கேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள்
தொகுதி 23இதழ் 10
விலை ரூ7
..
புதிய ஜனநாயகம்,
Posted by புத்தகப் பிரியன் at 8/02/2008 08:13:00 PM 0 comments
Labels: அரசியல் ஏடு, புதிய ஜனநாயகம
Friday, July 11, 2008
"புதிய கலாச்சாரம்" ஜூலை 2008
பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!
----------------தலையங்கம்
மகரஜோதி பொய்!
ஐஸ் லிங்கம் பொய்!
பக்திப் பரவசமும் பொய்!
---------------அட்டைப்பட கட்டுரை
'இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணற்திட்டு என்று சொன்னால், இல்லையில்லை, அது ராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். ' அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் 'இல்லையில்லை, அது இயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெவீகம்! தெற்கு செயற்கை தெய்வீகம்!
பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? 'மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பபன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை 'மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள் என்று மட்டும் நாம் கருதமுடியும் என்ன வகை பகதி இது?
மூட நம்பிக்கை - பகுத்தறிவு, ஏமாற்றுபவன் - ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ¦ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த 'பக்தி' காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்கு பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள் ! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரிந்தறிய முடியவில்லை.
WWF எப்றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள் கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். 'குத்து...கொல்லு' என்று வெறிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள்.
இந்த நிகழச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் ? நடிகன் யார், ரசிகன் யார் / தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் கொள்ளுபவன் யார் ? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார் கன்னிச்சாமி யார்?
இது ஒரு வகைப் 'பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை; லெளகீதத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளில்லும் வேர்பரப்பியிருக்கும் இந்தப் 'பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது 'ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் கடினமானது.
எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!
மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் எனப்படும் எம்.ஆர்.ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்த போது, "குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மது விலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது" என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.
அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு "ராமன் என்ன எஞ்சினீயரா?" என்ரு கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?
"சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்" என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த 'அட்டைக்கத்திகள்' நிறைந்த இந்தக் காலத்தில் 'ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை' நினைவு கூர்வது, வேறேதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.
பணம் அலுக்கவில்லை - பகட்டு அலுத்துவிட்டது
---------------- குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்
சத்யபாமா பல்கலைக்கழகம்:
---------------- பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்:
தொண்டர்களாக குண்டர்கள்!
தலைவர்களாக கிரிமினல்கள்!
---------------- ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப் போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!
அமெரிக்கா:
----------------வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
---------------- திங்கள் சத்யா இனையத்திலிருந்து
காதல் முதல் கருப்பை வரை வாடகைக்கு!
--------------- சேவைத்துறையின் வரம்புகள் எங்கே முடிகின்றன? அவுட்கோர்சிங் என்ற குத்தகை வேலை முறை எந்த எல்லை வரை விரியவிருக்கிறது? அது இன்னும் எத்தனை தூரம் விரிந்தால் இந்தியா வல்லரசு ஆகும்?
சிறுகதை:
நாய்க்கர்
கவிதை :
கல்வி கடவுள் டில்லி பாபு!
கெட்டாலும் மேன்மக்கள்.....
26 வது ஆண்டில் புதிய கலாச்சாரம்
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!
மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் :25, 26
குரல் :11-12, 1-2
உள்நாடு : ரூ 10
ஆண்டு சந்தா: ரூ 150
சந்தா படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
Posted by புத்தகப் பிரியன் at 7/11/2008 01:46:00 PM 0 comments
Labels: கலாச்சார ஏடு, புதிய கலாச்சாரம்
Tuesday, July 1, 2008
"புதிய ஜனநாயகம்" ஜூலை 2008
விலைவாசி உயர்வு : காங், பா.ஜ.க.வின் வில்லத்தனங்கள்
------தலையங்கம் & அட்டைப்பட கட்டுரை
அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?
------பொருளாதார வளர்ச்சிக்கு அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்ற காரணம் மோசடித்தனமானது.
சமூக விரோதிகளின் கூடாராமாகும் சி.பி.எம்.
------ விழுப்புரம் மாவட்டம் - காரப்பட்டு கிராமத்தில் சி.பி.எம் குண்டர்கள் நடத்திய கொலைவெறியாட்டம் அக்கட்சிகள் மக்கள் விரோதத் தன்மையை நிரூபிக்கிறது.
..
"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?"
------தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
விலைவாசி உயர்வு:
பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்
------உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, விளைவாசி உயர்வைச் சமாளிக்கும் தமிழக மக்களின் அவல வாழ்க்கை.
கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...
------பு.மா.இ.மு.வின் முற்றுகைப் போராட்டம் - ஆர்ப்பாட்டம்
நேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்
------ நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாபுராம் பாட்டாரய் அவர்கள் கொடுத்த பேட்டியின் தமிழாக்கம்.
தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்
------பு.ஜ.தொ.மு ஓசூர்.
சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
------புரோக்கர் வேலை செய்து சம்பாதிப்பதே சி.பி.எம்
உள்ளூர்த் தலைவர்களின் முழுநேரப் பணியாகி விட்டது.
அமெரிக்காவின் போர்க் குற்றாங்கள்
------கொரிய தீபகற்பத்தில் 'ஜனநாயக'த்தைக் திணிப்பதற்காக அமெரிக்கா செய்த மனிதப் படுகொலைகள் அம்பலமாகி வருகின்றன.
தமிழக போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சி
------ சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிரான போராட்டட்தை ஒடுக்க, சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட முயலுகிறது, தமிழகப் போலீசு.
அறியப்படாத அமெரிக்கா
------ அமெரிக்காவின் 'செல்வச் செழிப்பின்' பின்னே அதனின் வறுமையும், அழுகலும் மறைக்கப்படுகின்றன.
பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!
------ பாரக் ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகள், புதிய மொந்தை- பழைய கள்ளு என்பது தவிர வேறில்லை.
உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்
------ தீண்டாமைச் சுவரை இடிப்பதில், பிள்ளைவாள்களின் மனம் கோணாதபடி நடந்து கொண்டன, ஓட்டுக் கட்சிகள்.
உரத் தட்டுப்பாடு: அரசு - பதுக்கல் வியாபாரிகளின் கள்ளக்கூட்டணி!
110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே சாலை
(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561
Posted by புத்தகப் பிரியன் at 7/01/2008 07:40:00 PM 0 comments
Labels: அரசியல் ஏடு, புதிய ஜனநாயகம
Tuesday, June 3, 2008
புதிய ஜனநாயகம் ஜூன் 2008
தொழில் வளர்ச்சி:
பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களின் சூறையாடலுக்காக நாளொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மறுகாலனிய 'தொழில் வளர்ச்சி' யைச் சாதிக்கத் துடிக்கும் கருணாநிதி. உலகவங்கியின் திருத்தப்பட்ட மறுகாலனியக் கொள்கைப்படி, இலவச - கவர்ச்சி திட்டங்களால் அதிருப்திக்கு வடிகால் வெட்டும் கருணாநிதி.
மறுகாலனியாக்கத்தால் வாழ்விழந்து நிற்கும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் அறுவடை செய்து ஓட்டுப் பொறுக்க வேண்டும்; மக்களுக்காகத் குரல் கொடுத்துப் போராடுபவரைப் போல காட்டிக் கொள்ள, அடிக்கடி சவடால் அடித்து அறிக்கை வெளியிட்டு அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்க்க வேண்டும்; தமிழகத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக நாடகமாட வேண்டும்; இவற்றின் மூலம் அடுத்த தேர்தல் கூட்டணியிலும் ஆட்சியிலும் அதிக பங்கு கோர வேண்டும் என்பதற்கு மேல் பிழைப்புவாத இராமதாசிடம் வேறு கொள்கையோ, திட்டமோ கிடையாது. அவரது பச்சோந்தி அரசியலைக் கவனித்து வரும் தமிழக மக்கள், இனி அவரை நம்பி ஏமாறவும் முடியாது.
அரசின் முற்றுகை தூள்! தூள்!!
மேற்கு வங்கப் பஞ்சாத்துத் தேர்தல்:
கருத்துரிமைக்குக் கல்லறை
இதைவிட முக்கியமாக அரசின் விளக்கம் "மறுகாலனிய எதிர்ப்பு போரில், நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை" என அடித்து சொல்கிறது. முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கும் என்ற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் கனவில் விழுந்துள்ள சம்மட்டி அடி இது.
காசுமீர்: புதைக்கப்பட்ட உண்மைகள்
அக்னி ஏவுகனைப் பரிசோதனை:
இந்தியத் தரகு முதலாளிகள்:
"தனியார்மயம் - தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!"
மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு
தொகுதி 23
இதழ் 8
ஜூன்2008
விலை ரூ7
..
Posted by புத்தகப் பிரியன் at 6/03/2008 09:56:00 PM 0 comments
Labels: அரசியல் ஏடு, புதிய ஜனநாயகம
Monday, June 2, 2008
தில்லைப் போராட்டம் வெற்றிவிழா உரைகள் - இப்போது விற்பனைவில்...
Posted by புத்தகப் பிரியன் at 6/02/2008 09:53:00 PM 0 comments
Wednesday, April 30, 2008
புதிய ஜனநாயகம் மே 2008
நேபாளம் : வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!
---------அட்டைப்பட சிறப்புக்கட்டுரை
நேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
--------- தேர்தல் முறைகேடுகளோ, வன்முறைகளோ இன்றி நடந்து முடிந்துள்ள நேபாளத் தேர்தல், அமெரிக்க - இந்தியச் சதிகாரர்களின் முகங்களில் கரியைப் பூசிவிட்டது.
தனியார்மயம்... தாராளமயம்... உலகமயம்... போதைமயம்!
---------- சென்னையில் பி.பி.ஒ., கால் செண்டர் நிறுவனங்கள் பெருகுவதற்கு ஏற்ப, போதை மருந்துப் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
விலைவாசி உயர்வு: தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
---------- தனியார்மயத்திற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு, விலைவாசி உயர்வை எதிர்க்கும் அருகதை கிடையாது.
தில்லைப் போராட்டம்: "தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம்
---------- தில்லைப் போராட்டத்தில் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் அடைந்துள்ள வெற்றியை பூசி மெழுகும் "தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பத்தனமான முயற்சி சந்தி சிரிக்கிறது.
மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!
---------- சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நாட்டை வீட்டே துரத்தியடிக்க முடியும் என்பதற்கு கோவா மக்களின் போராட்டம் முன்னுதாரணமாக விளங்குகிறது.
தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்
---------- குண்டு வெடிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் சிக்கவைக்கப்பட்டிருப்பது அம்பலமாகி வருகிறது.
தமிழக விவசாயத் துறை: பன்னாட்டு நிறுவனங்களின் தரகன்!
--------- "வேளாண் தொழில்நூட்ப மேலாண்மை முகமை" என்ற திட்டம் தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க உதவுகிறது.
கொசவோ: தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?
--------- செர்பிய இனவெறி ஆதிக்கத்திலிருந்து மீள, அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டுள்ள கொசாவோவின் விடுதலை உண்மையானதா? ஊனமானதா?
திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?
---------- கடந்த மார்ச் இறுதியில் திபெத்தில் நடந்த கலகம், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்ல, சீன ஆட்சியாளர்கள் மீதான திபெத்திய மக்களின் அதிருப்தியை பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து கொண்டு ஆதாயமடைகின்றன.
பசுவின் புனிதம் ஓட்டுப்பொறுக்கும் தந்திரம்
---------- பா.ஜ.க கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இந்து மதவெறியைத் தூண்டி விடுகிறது.
சி.ஐ.டி.யு: தொழிற்சங்கமா? குண்டர் படையா?
தீண்டாமைச் சுவர்: தமிழகத்தின் இழிவு
புதிய ஜனநாயகம்
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024தொலைபேசி: 94446 32561
Posted by புத்தகப் பிரியன் at 4/30/2008 09:00:00 AM 0 comments
Labels: அரசியல் ஏடு, புதிய ஜனநாயகம்
விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?
வெளியீடு:ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு.,பு.ஜ.தொ.மு.
இரா.சீனிவாசன்
Posted by புத்தகப் பிரியன் at 4/30/2008 08:58:00 AM 0 comments
Friday, April 25, 2008
ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்
போலி மார்க்சிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவராயிருந்தவர் திருவாளர் பி.ராமமூர்த்தி. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலை போரும் திராவிட இயக்கமும்" என்றொரு நூலை அவர் எழுதிவிட்டுப் போயுள்ளார். உண்மையில் அந்நூல், காந்திய - காங்கிரசு- பார்ப்பனிய பார்வையில் விடுதலைப் போரையும் திராவிட இயக்கத்தையும் எடை போடும் ஒரு கம்யூனிசத் துரோகியின் மரணசாசனம்!
திராவிட இயக்கத்தை அம்பலப்படுத்துவதற்காக ஒரு நூல் எழுதப் புறப்பட்ட திருவாளர் ராமமூர்த்தி, தமது கட்சியின் துரோகங்களுக்கான வாக்குமூலமளிப்பதோடு, தானே ஒரு காந்திய - காங்கிரசு- பார்ப்பனியவாதி என்பதை அடையாளம் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தானொரு கைதேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தரகர் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளார். இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில், துரோகிகளின் வரிசையில் முன்னணியில் நின்ற திருவாளர் ராமமூர்த்தி, தள்ளாத வயதிலும் பதவி மோகம் தீராத காரணத்தால் எம்.பி.பதவிக்காக காங்கிரசு எம்.எல்.ஏக்களிடம் இரகசியமாக ஓட்டுப்பிச்சை கேட்டு அம்பலப்பட்டுப் போனார். ஆனாலும், மறைந்த துரோகியை மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளராகவும் விடுதலைப் போராட்டத்தியாகியாகவும் சித்தரித்து, அணிகளையும், மக்களையும் ஏய்த்து அவருக்கு நூற்றாண்டு விழா நடத்தக் கிளம்பியுள்ளனர், போலி கம்யூனிச சி.பி.எம்.கட்சியினர்.
கம்யூனிச துரோகிகளை மட்டுமின்றி நீதிக் கட்சியின் துரோகத்தையும் இனக்காட்டி, வரலாற்று ஆதாரங்களுடன் திருவாளர் ராமமூர்த்தியின் நூல் மீதான விமர்சனம், புதிய ஜனநாயகம் இதழில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் கட்டுரையாக வெளிவந்தது. இக்கம்யூனிசதுரோகியின் அரசியல் வாரிசுகள் அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துவரும் இன்றைய சூழலில், இத்தொடர் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்ற வாசகர்களின் கோரிக்கையை ஏற்று நூலாக வெளியிடுகிறோம். போலி கம்யூனிசத்துக்கு எதிராக அரசியல் - சித்தாந்தப் போராட்டத்தில் புரட்சிகர அணிகளுக்கு இந்நூல் இன்னுமொரு ஆயுதமாகத் திகழும் என்றே நம்புகிறோம்.
புதிய ஜனநாயகம்.
வெளியீடு:
புதிய ஜனநாயகம்,
தொலைபேசி: 94446 32561
விலை ரூ 40
Posted by புத்தகப் பிரியன் at 4/25/2008 03:16:00 PM 0 comments
Labels: புதிய ஜனநாயகம
Wednesday, April 2, 2008
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - ஸ்டாலின்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பெரியதொரு விசயப்பொருளாகும். அதை ஒன்றுவிடாமல் விளக்குவதெனில் ஒரு பெரிய நூல் தொகுதியே தேவைப்படும். ஆகவே எனது உரைகள், லெனினியத்தை விரிவாக எடுத்துரைப்பதாக இருக்க முடியாது என்பது இயற்கையே. அதிகபட்சமாகப் பார்த்தாலும், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிய, இரத்தினச் சுருக்கமான பொழிப்புரையை மட்டுமே வழங்கக் கூடியதாக எனது உரை இருக்கும். இருந்தபோதிலும், இரத்தினச் சுருக்கமான இந்த பொழிப்புரையை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்றே நாள் கருதுகிறேன். லெனினியத்தைப் பயனிறைவாகக் கற்றாய்வதற்கான முறையில், அதற்குத் தேவையான சில அடிப்படை விசயக் கூறுகளை எங்கிருந்து தொடங்குவது என்பதை இந்த உரையின் மூலம் முன்வைக்க இயலும் என்று நான் கருதுகிறேன்.
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விவரமாக எடுத்துக் கூறுவது என்றால், லெனினுடைய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கிக் கூறுவது என்று பொருளாகாது. ஏனென்றால், லெனினுடைய உலகக் கண்ணோட்டமும், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் ஒரே பரப்பெல்லையைச் சேர்ந்தவை அல்ல. லெனின் ஒரு மார்க்சியவாதியாக இருந்தார்; அவருடைய உலகக் கண்ணோட்டத்துக்கு மார்க்சியம் தான் அடிப்படையாக இருந்தது என்பது உண்மை.
எனவே, இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், லெனினியத்தைப் பற்றிய விரிந்துரைத்தல் என்பது, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விரிந்துரைப்பதிலிருந்து தொடங்கியாக வேண்டியதில்லை என்பதுதான், அப்படியானால், லெனினியத்தை விரித்துரைப்பது என்பதன் பொருள் என்னவாக இருக்கும்? லெனினுடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கதும் புதியதுமானவற்றை விரித்துரைப்பது என்றே பொருள்படும்; மார்க்சியம் என்ற பொதுக் கருவூலத்துக்கு லெனின் என்ன பங்களிப்பை வழங்கினார் என்பதை, அவருடைய பெயருடன் இணைந்த குறிபிடத்தக்கதும் புதியதுமான பங்களிப்பை விரித்துரைப்பது என்றே பொருள்படும். இந்தப் பொருளில் மட்டும்தான், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய எனது உடையில் பேசப் போகிறேன்.
அயல்மொழிப் பதிப்பகம், பெய்ஜிங் -1975 இல் வெளியீட்டுள்ள "லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்" (Foundations of Leninisam) எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம்.
வெளியீடு:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367
விலை:
ரூ 75
Posted by புத்தகப் பிரியன் at 4/02/2008 03:11:00 PM 0 comments