பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, March 11, 2007

நினைவின் குட்டை கனவு நதி



சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னதமான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்.

ஒரு மனிதனின் அழகியல் பார்வையையும் இலக்கிய ரசனையையும் அவனுடைய வாழ்க்கைச் சூழலும் சமூகப் பின்புலமும் கல்வியும் அனைத்துக்கும் மேலாக அவனுடைய கருத்துச் சார்புகளும்தான் உருவாக்குகின்றன. அரசியல், இலக்கிய, பண்பாட்டு விசயங்களில், தான் கொண்டிருக்கும் பார்வையின் வர்க்கத் தன்மையை அறியாத மனிதர்கள் உண்டு; பிறரது பார்வையின் வர்க்கத் தன்மையையும் அதன் பின்புலத்தில் இயங்கும் சமூக உளவியலையும் அடையாளம் காணத்தெரியாத ரசிகர்களும் உண்டு. ஆனால் அத்தகையதொரு பார்வையே இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. எனவே எவ்வித சித்தாந்த "கலர் கண்ணாடி'யும் இன்றி அழகியல் பார்வை மற்றும் படைப்பு அனுபவத்தின் வழியாக உண்மையை தரிசனம் செய்ய இயலும் என்ற இவர்களது கூற்று ஒரு முழு மோசடி.

தங்கள் ஞானநிலைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமோ நகைக்கத்தக்கது. "நான் வேறு படைப்பின் பரவச நிலையிலிருக்கும் நான் வேறு; ஆகவே என் வாழ்க்கை வேறு படைப்பு வேறு' என்பதே படைப்பாளிக்கும் படைப்புக்கும் இடையிலான உறவு குறித்து இவர்கள் தரும் விளக்கம். இந்த விளக்கம் இலக்கியத்தின் மீதும் உண்மையின் மீதும் அவர்கள் கொண்ட காதலிலிருந்து பிறக்கவில்லை. சுயநலமும் கோழைத்தனமும் காரியவாதமும் தளும்பி வழியும் தங்கள் இனிய வாழ்க்கையின் மீது இவர்கள் கொண்டிருக்கும் காதல்தான் இந்த தத்துவத்தைப் பிரசவித்திருக்கிறது.

தம் சொந்த வாழ்க்கை மீது மட்டுமே நாட்டம் கொண்ட மனிதர்கள் சமூகத்தில் ஏராளம். அவர்கள் பொதுநலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர்களை எதிர்கொள்ள நேரும்போது கடுகளவேனும் குற்ற உணர்வு கொள்கிறார்கள். ஆனால் இந்த இலக்கிய அற்பர்களோ தங்களுடைய சுயநலத்தை இயல்பானதென்றும் பொது நலநாட்டம் என்பதே பொய் வேடமென்றும் பிரகடனம் செய்கிறார்கள். இது கடைந்தெடுத்த முதலாளித்துவ சித்தாந்தம். இதனை அம்பலப்படுத்த கம்யூனிசத்தால் மட்டுமே இயலும் என்பதாலும், மார்க்சியம் மட்டுமே இதன் மனித விரோதத் தன்மையை அம்மணமாக்குவதாலும், இந்த இலக்கியவாதிகள் தம் இயல்பிலேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். தமது கருத்தை அரசியல் பொருளாதாரத் துறைகளில் நியாயப்படுத்த முடியாதென்பதால் அழகியலுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். ""இலக்கியம் வேறெந்த (அரசியல்) நோக்கத்திற்குமானதல்ல, இலக்கியத்தின் நோக்கம் இலக்கியமே'' என்று கொள்கை வகுக்கிறார்கள்.

இந்தக் கொள்கையாளர்களிடையே நடைபெற்று வருகின்ற கருத்துப் போராட்டங்களின் தன்மையைப் பார்த்தாலே இவர்களுடைய அற்பத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். பிரமிள்சு.ரா., ஞானக்கூத்தன்சு.ரா., ஜெயமோகன்சு.ரா என்ற இந்த குழாயடிச் சண்டை, நாச்சார்மட விவகாரத்தில் அதன் உச்சத்தை எட்டியது. திருவாவடுதுறை சின்ன ஆதினத்தின் கொலை முயற்சிக்கு இணையான இந்த அற்பத்தனம் சுந்தர ராமசாமி செத்த உடனே சென்டிமென்ட்டுக்கு மாறிக் கொண்டது. ""நினைவின் நதியில்'' என்ற சின்ன ஆதினத்தின் இந்த "சுய விமர்சனத்திற்கு' வாசகர்கள் செலுத்திய காணிக்கை தலா ரூபாய் 100. இந்த அற்பவாதக் குட்டையில் குளிப்பதற்கு காசும் கொடுத்து கண்ணீரையும் கொடுத்த வாசகர்களின் ரசனைத்தரத்தை என்னவென்று சொல்ல? தமிழகமே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது மியூசிக் அகாடமி பிடில் வாசித்துக் கொண்டிருந்தது; சு.ரா. அபிமானிகளோ அவருடைய சாவுக்கு அழுது கொண்டிருந்தார்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இவர்களால் இகழப்படும் ரசிகர் மன்ற இளைஞர்கள் கூட தங்களால் இயன்ற மட்டில் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள்.

பொதுவாக இளைஞர்களின் இலக்கிய நாட்டம் என்பது அவர்களுடைய சமூக அக்கறையின் ஒரு வெளிப்பாடாகவே முகிழ்க்கிறது. அவர்களை இலக்கியத்தில் ஆழ அமிழ்த்தி முத்தெடுக்கக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் சு.ரா.க்கள் தங்களது கழிவுகளால் நிரம்பியிருக்கும் அற்பவாதக் குட்டையில் இளைஞர்களை ஊறப்போடுகிறார்கள். சமூக உணர்வு மரத்த, தடித்த தோல்கொண்ட வாரிசுகளை உருவாக்குகிறார்கள். இலக்கியத்தின் உன்னதத்தையோ ரசனையின் நுண்திறனையோ இந்தக் குட்டையில் கிடப்பவர்கள் ஒருக்காலும் எட்ட முடியாது. சமூக அக்கறையும், மக்கள் நலன்மீது மாளாக் காதலும், இதயத்திலிருந்து பெருக்கெடுக்காத வரை தாங்கள் கிடக்கும் இடம் அற்பவாதக் குட்டை என்பதை யாரும் உணரக்கூட முடியாது. கம்யூனிசம் என்பது மனித குலத்தின் ஆகச் சிறந்த கனவு. அது சூக்குமமான அற உணர்வோ, சொல்லில் பிடிபடாத அழகோ அல்ல. திண்ணையும் உறக்கமும் இந்தக் கனவைத் தோற்றுவிப்பதில்லை. விழிப்பில், செயலில், வீதியில், இழப்பில், போராட்டம் எனும் உலைக்களத்தில் மட்டுமே உருகிப் பெருகும் கனவிது.

இந்நூலின் முதற்கட்டுரை அற்பவாதத்தின் நினைவுக்குட்டையை, அதன் முடைநாற்றத்தை உணரச் செய்கிறது. இது சு.ரா.வைப் பற்றியது மட்டுமல்ல, இந்தக் குட்டையில் தோன்றியிருக்கும் மற்றும் தோன்றவிருக்கும் சு.ரா.க்களுக்குமானது என்பதை வாசகர் புரிந்து கொள்ள முடியும். மற்ற கட்டுரைகள் புதிய கலாச்சாரம் இதழில் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வெளியானவை. கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளால் நிரம்பியிருக்கும் இலக்கிய மனங்களைத் தூர்வாற இவை உதவும்; உயிர்த் துடிப்புள்ள மனிதவாழ்வின் மணத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்யும். அற்பவாதக் குட்டையில் கிடப்பவர்கள் கரையேறுங்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள் சேற்றிலிருந்து காலை எடுங்கள்.

ஆசிரியர் குழு,
---------------------------------------------------------------------------------------

வெளியீடு
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
----------------------------------------------------------------------------------------

பொருளடக்கம்















1 comment:

அசுரன் said...

கலைக் கலைக்காத்தான் என்ற போலியான மேட்டிமைத்தனத்தில் உட்கார்ந்து கொண்டு புரியாமல் எழுதி அலம்பும் அற்பவாதிகளை மிகச் சரியாக அடையாளம் காண இந்த புத்தகம் மிகப் பெரிய அளவில் உதவும். குறிப்பாக இந்துத்துவ பெரும் அற்பவாதி ஜெயமோகன் வகையாறாக்களையும் புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவியது.

அசுரன்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •