பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, August 31, 2007

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்


1871 மார்ச் 18ந் தேதியன்று பாரிஸ் தொழிலாளர்கள் முதலாளி வர்க்க ஆட்சியாளர்களை அந்த நகரத்திலிருந்து வெளியே விரட்டிய பிறகு ஆட்சியதிகாரத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அது என்றைக்குமே மறக்க முடியாத ஒளிமிகுந்த சாதனையாகும்.
..
பத்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 28ந் தேதியன்று உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க அரசாகிய பாரிஸ் கம்யூனை அவர்கள் நிறுவினார்கள். அது முற்றிலும் புதிய ரகத்தைச் சேர்ந்தது. மக்களுக்காக மக்களால் நிர்வகிக்கப்படுவது. அதன் எல்லா சமூக, அரசியல் நடவடிக்கைகளுமே உழைக்கும் மக்களின் - எல்லாவற்றுக்கும் மேலாகத் தொழிலாளி வர்க்கத்தின் - நலன்களுக்காக எடுக்கப்பட்டன.

கம்யூன் 72 நாட்கள் இருந்த பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிற்போக்கு சக்திகளின் தாக்குதலை வீரமாக எதிர்த்த பிறகு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அதன் அனுபவமும் படிப்பினைகளும் உலகப் புரட்சிகர இயக்கத்தின் மீது மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தன.

பாரிஸ் புரட்சி உலக முழுவதிலும் உணர்ச்சிகரமான எதிரொலியையும் பலமான சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தையும் ஏற்படுத்தியது. 1871ம் வருடத்தின் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் கம்யூனை ஆதரித்தும் அதை நசுக்கியவர்கள் செய்த கொடுமைகளை எதிர்த்தும், தப்பி வந்த கம்யூனிவாதிகளை ஆதரித்தும் பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் தொழிலாளர்கள் மாபெரும் பொதுக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

விஞ்ஞான கம்யூனிசத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் தலைமை தாங்கிய உலகத்தின் முதல் வெகுஜனப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் - முதலாம் அகிலம் - இந்த இயக்கத்தை நடத்தியது.

பாரிசில் நடைபெற்ற சம்பவங்களை மார்க்சும் எங்கெல்சும் நுணுக்கமாக கவனித்தார்கள். கம்யூனுடைய தலைவர்கலோடு நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டதோடு அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்கள். கம்யூன் வீழ்ச்சியடைந்த பொழுது வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடி வந்த கம்யூன் வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவி செய்வதற்கும் இயக்கம் நடத்தினார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய எழுத்துக்களிலும் கடிதங்களிலும் பாரிஸ் கம்யூன் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை நுணுக்கமாக ஆராய்ந்தார்கள், பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உலகின் முதல் முயற்சி என்ற விதத்தில் அதன் சாரத்தை எடுத்துக்காட்டினார்கள்.

இந்தப் புரட்சியின் மூலம் மார்க்ஸ் தனது தத்துவத்தின் நடைமுறையை மறுபரிசீலனை செய்து 1872 ஜீன் 24 தேதியில் வெளிவந்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" யின் முன்னுரையில் "இனிமேல் பாட்டாளிவர்க்கம் நிலவுகின்ற முதலாளித்துவ அரசை அப்படியே கைப்பற்றி உபயோகிக்க முடியாது. இதனை தகர்த்து எறிந்து விட்டு தங்களுக்கான அரசை தாங்களே நிறுவ வேண்டும்" என்று முடிவு செய்கிறார்.

இந்நூலில் பாரிஸ் கம்யூனைப் பற்றி மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கட்டுரைகள், வேண்டுகோள்கள், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அதிகார பூர்வமான ஆவணங்கள், சொற்பொழிவுகள், பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த அறிக்கைகள், கடிதங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
.
கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
.
வெளியீடு
.
முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

 • புதிய கலாச்சாரம்


 • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


  செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

 • புதிய ஜனநாயகம்


 • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

  அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

  இணையத்தில் நூல்கள் வாங்க

 • வித்லோகா
 •