பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Showing posts with label முன்னேற்றப் பதிப்பகம. Show all posts
Showing posts with label முன்னேற்றப் பதிப்பகம. Show all posts

Monday, November 26, 2007

"குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" - எங்கெல்ஸ்

மனித வரலாற்றில் முதலாளித்துவத்துக்கு முந்திய கட்டத்தை ஆராயும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முழுமையாகக் கையாள முடியும் என்று "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூல் நன்கு நிரூபித்திருக்கிறது. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக- பொருளாதார அமைப்புக்குப் பொருந்துகின்ற வளர்ச்சி விதிகள் பண்டைய சமூகத்துக்கும் பொருந்துகின்றன என்று உலக விஞ்ஞானத்தில் முதன்முதலில் எடுத்துக் காட்டியவர் எங்கெல்ஸ்.
குறிப்பாக, பண்டைய வரலாறு மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகளில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் இருக்கின்றன, எந்த சமூகப் பிரிவுகள், குழுக்களின் அடிப்படையான பொருளாயத நலன்கள் மோதுகின்றனவோ அந்தப் பிரிவுகள், குழுக்களுக்கு இடையில் போராட்டம் நடைபெறுகிறது. முடிவில் பூர்விகச் சமூக பொருளாதார அமைப்பை வர்க்க-பகைமுரண்பாட்டு சமூகத்தின் ஏதாவதொரு வடிவம் - அடிமையுடைமை சமூகம் ( கிரேக்கர்கள், ரோமானியர்கள்) அல்லது நிலப்பிரபுத்துவ சமூகம் (ஜெர்மனியர்கள்) அகற்றுவதற்கு சமூகப் புரட்சி சாதனமாயிற்று.

நவீன மார்க்சிய வரலாற்று விஞ்ஞானம், பண்டைக்கால வரலாற்றுக் துறையில் எங்கெல்சினுடைய படைப்பாற்றல் மிக்க பாரம்பரியத்தை ஆதாரமாகக் கொண்டு அவர் சுட்டிக்காட்டிய பாதையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது; புதிய ஆராய்ச்சி முறை களின் தோற்றத்தினால் அதன் வளர்ச்சியில் ஏற்படுகின்ற திருப்புமுனையில் அது அவருடைய தத்துவப் பாரம்பரியத்துக்கு மீண்டும் மீண்டும் திருப்புகிறது. பூர்விக சமூகத்தின் சாராம்சத்தைப் பற்றியும் வர்க்க - பகைமுரண்பாட்டு சமூக அமைப்புகளை நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் மார்க்சிய மூலவர்கள் உருவாக்கிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வரலாற்றாசிரியர்கள் இன்று திரட்டியுள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன. குறிப்பிட்ட யுகங்கள், கலாச்சார வரலாற்றின் பொது விதிகளின் செயல்பாட்டை அதிகமான விவரங்களுடன் விரித்துக் கூறுவதை இத்தத்துவம் சாத்தியமாக்குகிறது.

இந்த அர்த்தத்தில் எங்கெல்சின் தத்துவப் பாரம்பரியம் அதன் முழுப் பொருத்தத்தையும் கொண்டிருக்கிறது; "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற அவருடைய நூல் பண்டைய வரலாற்றின் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய மெய்யான இயக்கவியல் பகுப்பாய்வுக்கு மூலச்சிறப்பான உதாரணமாக இருக்கிறது.
வெளியீடு
..
முன்னேற்றப் பதிப்பகம்,.
மாஸ்கோ

Sunday, November 25, 2007

"இயற்கையின் இயக்க இயல்" - எங்கெல்ஸ்


பிரெடெரிக் எங்கெல்ஸின் கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளில் ஒன்று, "இயற்கையின் இயக்கவியல்". பத்தென்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த இயற்கை விஞ்ஞானங்களின் பிரதானச் சாதனைகளைப் பற்றி இயக்க இயல் பொருள்முதல்வாத ரீதியில் அமைந்த ஒரு பொதுவுரையை அது அளிக்கிறது; பொருள்முதல்வாத இயக்க இயலை அது வளர்க்கிறது; இயற்கை விஞ்ஞானத்தில் இருந்த இயக்க மறுப்பியல் ரீதியானதும் கருத்துமுதல்வாத ரீதியானதுமான கண்ணோட்டங்களை அது விமர்சிக்கிறது.
வெளியீடு
மாஸ்கோ

Saturday, November 24, 2007

"கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்" - எங்கெல்ஸ்

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் எனும் நூல் "டூரிங்குக்கு மறுப்பு" என்னும் நூலின் மூன்று அத்தியாயங்களைக் கொண்டதாகும்; தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டம் என்ற முறையில் மார்க்சிய போதனையை எளிமையான முறையில் விளக்கி எழுத வேண்டுமென்பதற்காக பி.எங்கெல்ஸ் இந்த அத்தியாயங்களைத் திருத்தி எழுதினார்.

அவர் மார்க்சியத்தின் மூன்று உட்பகுதிகளை இந்நூலில் விளக்குகிறார். இயக்கியல் மற்றும் வராலாற்றுப் பொருள்முதல்வாதம் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவதுடன் மார்க்சினுடைய இரண்டு மாபெரும் கண்டுபிடிப்புகள் -வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விரிந்துரைத்தல் மற்றும் உபரி மதிப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்தது - சோசலிசத்துக்கு விஞ்ஞான அடிப்படையாகக் கொடுத்தன என்று எடுத்துக் காட்டுகிறார்.
..
கற்பனாவாத சோஷலிசத்துக்கும் விஞ்ஞான சோஷலிசத்துக்கும் இடையிலுள்ள அடிப்படையான வேறு பாட்டைச் சுட்டிக்காட்டி வரலாற்றில் கற்பனாவாத சோஷலிசத்தின் பாத்திரத்தையும் குறைகளையும் விளக்கிய பிறகு எங்கெல்ஸ் விஞ்ஞான சோசஷலிசத்தின் தோற்றுவாய்களை சுட்டிக்காட்டுகிறார்.

முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனியார் சுவீகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு ஆகும்; பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலமே அதை ஒழிக்க இயலும் எனபதை எங்கெல்ஸ் தன் நூலின் கடைசி அத்தியாயத்தில் நிரூபிக்கிறார்.





வெளியீடு

..
முன்னேற்றப் பதிப்பகம்,.
மாஸ்கோ





Friday, August 31, 2007

"அரசும் புரட்சியும்" - லெனின்


வர்க்கங்கள் தோன்றியபின் சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இணக்கம் காண இயலாத படிக்கு மாறியதனால் உருவானதே அரசு. இவ்வர்க்கங்கள், தம்மை இப்போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்க, இம்மோதலை தணித்து வரம்புக்குள் வைக்க வெளித்தோற்றத்திற்கு , சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியே அரசு.

"புரட்டல்வாதிகள் அரசை, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்கும் கருவி என மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். ஆனால், இணக்கம் உருவாகவே முடியாத வர்க்கப்பகைமைதான் ஒடுக்கும் வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக - வர்க்க ஆதிக்கத்துக்காக, அரசு எனும் கருவியை உருவாக்கியது" - மார்க்ஸ் , எங்கெல்ஸ்

வர்க்கங்கள் தோன்றுமுன் சமுதாயம் அனைத்தும் ஆயுதபாணியாய் இருந்தது. வர்க்கம் தோன்றி முரண்பாடுகள் முற்றியதும், தம்மை சமுதாயத்திற்கு மேலானதாய்க் காட்டிக் கொள்ளும் அரசு, எல்லோருக்கும் பொதுவானதாய், ஆயுதமேந்திய படைகளையும்; சிறைச்சாலை உள்பட்ட இன்ன பிற ஒடுக்கும் கருவிகளையும் தன்வசப்படுத்திக் கொண்டது.
..
எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட அரசு, சுரண்டும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து கொண்டு மற்ற வர்க்கத்தை ஒடுக்கி வருகிறது.
.
நிலவும் அரசானது இருக்கும் வரை வர்க்க சுரண்டல் -சிறுபான்மை, பெரும்பான்மையை ஒடுக்குதல் இருக்கும். அரசானது உலர்ந்து உதிராமல் நீடித்து கெட்டிப்பட்டு நிற்கும். இதை பலாத்காரப் புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்து தனது அரசை நிறுவும். அவ்வரசு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தை தன்னுள் செரிக்க இடைவிடாது போராடும்.
.
சிறுபான்மையை பெரும்பான்மை - பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் மூலம் ஒடுக்கும். வர்க்கப் பகைமை ஒழிக்கப்பட்டு சுரண்டல் இல்லாமல் போகும். சுரண்டும், சுரண்டப்படும் வர்க்கங்கள் மறைவதால் வர்க்க சுரண்டலை ஒடுக்குதலை காக்கும் அரசின் தேவை இல்லாமல் போகும். அரசு உலர்ந்து உதிரும்.
.
இந்நூலில் அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் விளக்கப்பட்டுள்ளது.
.
வி.இ.லெனின்
.
வெளியீடு
.
.முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
Related:

Thursday, June 7, 2007

"நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" -லெனின்





இந்நூலை வி.இ.லெனின் 1903 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பொழுது, ருஷ்யாவில் தன்னிச்சையான விவசாயிகள் இயக்கம் எழுச்சியடைந்து கொண்டிருந்த தருணத்தில் எழுதினார். விவசாயிகளுக்கு லெனின் விடுத்த முதல் அறைகூவலாகத் திகழ்ந்த இந்நூலில் சமூக - ஜனநாயகத்தின் அடிப்படை லட்சியங்களும் அதன் விவசாய செயல் திட்டமும் எளிய விஞ்ஞான வடிவில் விளக்கப்படுகின்றன. " செல்வமும் வறுமையும், நாட்டுபுறத்திலுள்ள சொத்து உடையவர்களும் தொழிலாளிகளும்", "மக்கள் அனைவருக்கும், தொழிலாளர்களுக்கும் என்ன அபிவிருத்திகளைப் பெறுவதற்காக சமூக-ஜனநாயகவாதிகள் பாடுபடுகிறார்கள்?", "எல்லா விவசாயிகளுக்கும் சமூக- ஜனநாயகவாதிகள் கொண்டுவர முயல்கின்ற அபிவிருத்திகள் என்ன?" என்ற உட்தலைப்புகள் இந்நூல் எவ்வளவு எளிமையானது, புரியக் கூடியது என்று விளக்குகின்றன.

விவசாயிகளின் வர்க்கக் கட்டமைவைப் பற்றிய பகுப்பாய் வின் அடிப்படையில் லெனின், நாட்டுபுறத்தில் வர்க்கப் போராட்டம் நடைபெருவது தவிர்க்க இயலாதது என்ர முடிவிற்கு வருகிறார். விவசாயிகளின் நிலையையும் கடமைகளையும் அவர்களுக்கு விளக்கும் லெனின், தொழிலாளி வர்க்கத்துடனான கூட்டில்தான் கிராமப்புற ஏழை மக்களால் சுரண்டலிலிருந்து இறுதியாக விடுதலையடைய முடியும்;

இந்தொழிலாளி வர்க்கம், பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் அரசியல் விடுதலைக்காகவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழிக்கக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று எழுதினார்.

இச்சிறு நூல் பிரபல மார்க்சியப் பிரசுரத்திற்கு எடுத்துக்காட்டாகும், இது பன்முறை மறுபிரசுரம் செய்யப்பட்டு ருஷ்யக் கிராமங்கள், நகரங்களில் பரப்பப்பட்டது, இது புரட்சிகரச் சமூக-ஜனநாயகக் கருத்துகளை விவசாயிகள் மத்தியில் பரப்புவதில் பெரும் பங்காற்றியது.

முன்னேற்றப் பதிப்பகம்
மாஸ்கோ

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •