பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Showing posts with label லெனின். Show all posts
Showing posts with label லெனின். Show all posts

Saturday, September 1, 2007

"லெனினுக்கு மரணமில்லை"


ரஷ்ய மொழியில் எழுதிய "லெனினின் வாழ்க்கை கதை" என்கிற நவீனம் "
லெனினுக்கு மரணமில்லை" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது.

லெனின் பிறந்தது முதல் மரணம் வரை... பக்கத்தில் இருந்து பார்த்த... ரசித்த... பிரமித்த... ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி - தீர்க்க தரிசனம் - கூரிய பார்வை - காதல் நெஞ்சம் - ஈரம் கசியும் இதயம் - புரட்சிகர சிந்தனை - மனிதத் தன்மையின் மகத்தான சாட்சிகள். ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடன் நாவலில் பேசப்படுகிறது.

பூ. சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் 1977ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது. தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது.
.
மரியா பிரிலெழாயெவா
..
வெளியீடு
..
அலைகள் வெளியீட்டகம்
சென்னை - 600 024
.
விலை ரூ 100
.
Related:

Friday, August 31, 2007

"அரசும் புரட்சியும்" - லெனின்


வர்க்கங்கள் தோன்றியபின் சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இணக்கம் காண இயலாத படிக்கு மாறியதனால் உருவானதே அரசு. இவ்வர்க்கங்கள், தம்மை இப்போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்க, இம்மோதலை தணித்து வரம்புக்குள் வைக்க வெளித்தோற்றத்திற்கு , சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியே அரசு.

"புரட்டல்வாதிகள் அரசை, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்கும் கருவி என மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். ஆனால், இணக்கம் உருவாகவே முடியாத வர்க்கப்பகைமைதான் ஒடுக்கும் வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக - வர்க்க ஆதிக்கத்துக்காக, அரசு எனும் கருவியை உருவாக்கியது" - மார்க்ஸ் , எங்கெல்ஸ்

வர்க்கங்கள் தோன்றுமுன் சமுதாயம் அனைத்தும் ஆயுதபாணியாய் இருந்தது. வர்க்கம் தோன்றி முரண்பாடுகள் முற்றியதும், தம்மை சமுதாயத்திற்கு மேலானதாய்க் காட்டிக் கொள்ளும் அரசு, எல்லோருக்கும் பொதுவானதாய், ஆயுதமேந்திய படைகளையும்; சிறைச்சாலை உள்பட்ட இன்ன பிற ஒடுக்கும் கருவிகளையும் தன்வசப்படுத்திக் கொண்டது.
..
எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட அரசு, சுரண்டும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து கொண்டு மற்ற வர்க்கத்தை ஒடுக்கி வருகிறது.
.
நிலவும் அரசானது இருக்கும் வரை வர்க்க சுரண்டல் -சிறுபான்மை, பெரும்பான்மையை ஒடுக்குதல் இருக்கும். அரசானது உலர்ந்து உதிராமல் நீடித்து கெட்டிப்பட்டு நிற்கும். இதை பலாத்காரப் புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்து தனது அரசை நிறுவும். அவ்வரசு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தை தன்னுள் செரிக்க இடைவிடாது போராடும்.
.
சிறுபான்மையை பெரும்பான்மை - பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் மூலம் ஒடுக்கும். வர்க்கப் பகைமை ஒழிக்கப்பட்டு சுரண்டல் இல்லாமல் போகும். சுரண்டும், சுரண்டப்படும் வர்க்கங்கள் மறைவதால் வர்க்க சுரண்டலை ஒடுக்குதலை காக்கும் அரசின் தேவை இல்லாமல் போகும். அரசு உலர்ந்து உதிரும்.
.
இந்நூலில் அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் விளக்கப்பட்டுள்ளது.
.
வி.இ.லெனின்
.
வெளியீடு
.
.முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
Related:

Saturday, August 18, 2007

பிரெடெரிக் எங்கெல்ஸ் - வி.இ.லெனின்



நாளும் வறுமையும்
நீளும் கொடுமையுங் கண்டு
பீதிக்குள்ளான தொழிலாளி வர்க்கத்தை
ஆளப் பிறந்தவன் நீயடா ! - இதை
யார் மறுப்பார் போராடடா !
என வாழப்பழக்கிய
மனித குலத்தின் இதயக்குரல்
மார்க்சும் , எங்கெல்சும்.

எங்கெல்சை அரசியல்ரீதியாக
அறிமுகம் செய்யும் இந்த நூல்
தொழிலாளி வர்க்கம்
தன்னைத்தானே அறிந்து கொள்ளவும்
தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும்
உதவி செய்கிறது.

(இந்நூல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்" என்ற நூலின் ஒரு தலைப்பிலான பகுதியாகும்)
வெளியீடு & கிடைக்குமிடம்
.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
..
விலை ரூ 6/

Saturday, August 4, 2007

"லெனினும் ரஷ்யப் புரட்சியும்"




புரட்சிக்கு முன் ஜார் நிக்கோலஸ் ஆட்சியின் போர்க்கால சூழல், நடைபெற்ற ஊழல்கள், ஜாரின் மனைவி அரசியல் விவகாரங்களில் தலையீடு, அவரை மிரட்டி அரண்மனையில் இருந்து கொண்டு தன் செயல்களை நிறைவேற்றிக்கொண்ட ரஸ்புடீன் என்ற போக்கிரி என ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பு இருந்த சூழ்நிலை பற்றி விவரிக்கிறது முதல் பகுதி.
..
இரண்டாவது பகுதியில் ரஷ்யப்புரட்சியைப் பற்றியும்; அதில் லெனினுடைய இடத்தையும் பற்றியும் இதே போல புதிய தகவல்களை கொண்டு விவரிக்கிறது இந்த நூல்.

ரஷ்யப்புரட்சி என்பது லெனினுடைய வாழ்க்கையின் மகத்தான சாதனை. அந்த புரட்சியையும் அதில் லெனினுடைய இடத்தையும் மதிப்பிடு செய்கிறது இந்த நூல்.


கிறிஸ்டோபர் ஹில்

தமிழில் நா.தர்மராஜன்
வெளியீடு :
அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை 24
பக்கங்கள் : 126
விலை : 55

Monday, June 25, 2007

ஒரு பொறியியல் வல்லுநர் பார்வையில் ரஷ்யா - வால் ஹனிங்டன்



சோவியத் யூனியனுக்கு ஒரு பொறியியல் வல்லுநரான வால் ஹனிங்டன் சென்ற போது சோசலிச கட்டுமானத்தையும் மக்களின் பங்களிப்பையும் கண்டு அடைந்த பிரமிப்பையும் , அனுபவத்தையும் இந்த நூலில் சொல்கிறார்.

ஆங்கில பதிப்பான இந்நூலினை முழுவதும் ஸ்கேன் செய்து இணைத்து உள்ளோம்.

(க்ளிக் செய்து படிக்கவும்)
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

"அரசு குறித்து - லெனின்" பகுதி IV மற்றும் நிறைவு பகுதி



அரசென்பது, ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்,சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாத போது,அடிமை முறையின் காலக் கட்டத்திற்கு முன்பு மக்கள் அதிக சமத்துவமுடைய, ஆதிகால நிலையிலேயே உழைத்த நாளில், உழைப்பின் உற்பத்தித் திறன் மிக மிகக் கீழ்ப்படியில் இன்னும் இருந்து வந்த சூழ்நிலையில், முற்றிலும் பண்படாத , மிகமிக எளிய வாழ்வுக்கான சாதனங்களைப் பெறுவதே ஆதிகால மனிதனுக்கு அரிதாக இருந்த அந்நாளில், மக்களின் தனித்த ஒரு பிரிவு - சமுதாயத்தின் மற்றப் பகுதியின் மேல் ஆளுகையும், ஆதிக்கமும் புரிய வேண்டித் தனியாக ஒதுங்கிப் பிரிந்த ஒன்று தோன்றவில்லை; தோன்றியிருக்கவும் முடியாது.

இதன் தொடர்ச்சியை கிழே க்ளிக் செய்து படிக்கவும்
*********************************************************************************
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/arasu-IV-1.jpg








"சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போன பொழுது, நிலச் சொந்தக்காரர்களும், ஆலைச் சொந்தக்காரர்களும் எங்குமே இல்லை என்னும் பொழுது, சிலர் மட்டுமே வாரி வாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத பொழுது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது என்னும் நாளில் தான்,அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்பொழுது அரசென்பது இருக்காது, சுரண்டலும் இருக்காது. நம் கம்யூனிஸ்டுக் கட்சியின் நோக்குநிலை இதுவே."பின்னால் நிகழும் விரிவுரைகளில் இந்தப் பொருளை நாம் மீண்டும் ஆராய்வோம்; அதனை ஆராயு மீண்டும் மீண்டும் அதன்பாற் திரும்புவோம் என்றே நம்புகிறேன்.
-
-
முந்தைய மூன்று பகுதிகளை படித்து விட்டு தொடர்ச்சியாக படிக்கவும்
*****************************************************************************

(நேரமின்மை காரணத்தினால் நிறைவு பகுதி ஸ்கேன் செய்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது)

Thursday, June 21, 2007

லெனின் - ஸ்டாலின்



தோழர் லெனினிடம் நிறைந்திருந்த மார்க்சியப் பேராற்றால், கம்யூனிச தலைமைப் பண்புகள் குறித்தும், லெனினிடம் நிறைந்திருந்த சிறப்பான பாட்டாளி வர்க்கப் பண்புகள் குறித்தும் தோழர் ஸ்டாலின் எழுதிய கட்டுரைகளையும் ஸ்டாலினது நேர்காணலையும் கொண்டது இச்சிறுநூல்.
-
பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் குறித்தும், அவர் மார்க்சியத்திற்கும்; உலக பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும்; ரசியப் புரட்சிக்கும் அளித்த மகத்தான பங்களிப்புகள் பற்றி இந்நூல் எளிமையாக விளக்கிச் சொல்கிறது.
வெளியீடு
***********
புதிய ஜனநாயகம்
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024

விலை ரூ 20

Thursday, June 7, 2007

"நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" -லெனின்





இந்நூலை வி.இ.லெனின் 1903 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பொழுது, ருஷ்யாவில் தன்னிச்சையான விவசாயிகள் இயக்கம் எழுச்சியடைந்து கொண்டிருந்த தருணத்தில் எழுதினார். விவசாயிகளுக்கு லெனின் விடுத்த முதல் அறைகூவலாகத் திகழ்ந்த இந்நூலில் சமூக - ஜனநாயகத்தின் அடிப்படை லட்சியங்களும் அதன் விவசாய செயல் திட்டமும் எளிய விஞ்ஞான வடிவில் விளக்கப்படுகின்றன. " செல்வமும் வறுமையும், நாட்டுபுறத்திலுள்ள சொத்து உடையவர்களும் தொழிலாளிகளும்", "மக்கள் அனைவருக்கும், தொழிலாளர்களுக்கும் என்ன அபிவிருத்திகளைப் பெறுவதற்காக சமூக-ஜனநாயகவாதிகள் பாடுபடுகிறார்கள்?", "எல்லா விவசாயிகளுக்கும் சமூக- ஜனநாயகவாதிகள் கொண்டுவர முயல்கின்ற அபிவிருத்திகள் என்ன?" என்ற உட்தலைப்புகள் இந்நூல் எவ்வளவு எளிமையானது, புரியக் கூடியது என்று விளக்குகின்றன.

விவசாயிகளின் வர்க்கக் கட்டமைவைப் பற்றிய பகுப்பாய் வின் அடிப்படையில் லெனின், நாட்டுபுறத்தில் வர்க்கப் போராட்டம் நடைபெருவது தவிர்க்க இயலாதது என்ர முடிவிற்கு வருகிறார். விவசாயிகளின் நிலையையும் கடமைகளையும் அவர்களுக்கு விளக்கும் லெனின், தொழிலாளி வர்க்கத்துடனான கூட்டில்தான் கிராமப்புற ஏழை மக்களால் சுரண்டலிலிருந்து இறுதியாக விடுதலையடைய முடியும்;

இந்தொழிலாளி வர்க்கம், பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் அரசியல் விடுதலைக்காகவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழிக்கக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று எழுதினார்.

இச்சிறு நூல் பிரபல மார்க்சியப் பிரசுரத்திற்கு எடுத்துக்காட்டாகும், இது பன்முறை மறுபிரசுரம் செய்யப்பட்டு ருஷ்யக் கிராமங்கள், நகரங்களில் பரப்பப்பட்டது, இது புரட்சிகரச் சமூக-ஜனநாயகக் கருத்துகளை விவசாயிகள் மத்தியில் பரப்புவதில் பெரும் பங்காற்றியது.

முன்னேற்றப் பதிப்பகம்
மாஸ்கோ

Wednesday, April 18, 2007

"அரசு குறித்து - லெனின் " பகுதி III

பண்டத்திலிருந்து, பண்ட மாற்றத்திலிருந்து, பணத்தின் ஆதிக்கம் தோன்றியதிலிருந்து எழுந்தது மூலதனத்தின் ஆதிக்கம், பதினெட்டாம் நூற்றாண்டில் , அல்லது திட்டவட்டமாகக் கூறினால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் உலககெங்கும் புரட்சிகள் நிகழ்ந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலிருந்தும் பண்ணையடிமை முறை அகற்றப்பட்ட்டது. ரசியாவில் எல்லாவற்றுக்கும் கடைசியாக் இது நிகழ்ந்தது.

கி.பி.1861 -இல் ரசியாவில் ஒரு தீவிர மாற்றம் உண்டாயிற்று. இதன் விளைவாக , சமுதாயத்தின் ஒரு வடிவத்துக்குப் பதிலாக அதனிடத்தில் மற்றொரு வடிவம் ஏற்பட்டது. அதாவது , பண்ணையடிமை முறையை அகற்றி விட்டு, முதலாளித்துவம் வந்தது, இதன் கீழ் வர்க்கப் பிரிவினை தொடர்ந்து இருந்து வந்தது. மேலும் பண்ணையடிமையின் பல்வேறு அடையாளங்களும், மிச்சச் சொச்சங்களும் தொடர்ந்து இருந்து வந்தன என்றாலும், வர்க்கப் பிரிவினை அடிப்படையில் ஒரு புதிய வடிவத்தை மேற்கொள்ளலாயிற்று.

எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மூலதனத்திற்கு உடைமையாளர், நிலத்திற்கு உடைமையாளர் , ஆலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் உடைமையாளர் ஆகியோர் மக்கள் தொகையில் மிக மிகச் சிறுபான்மையினராகவே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் எல்லாருடைய உழைப்பும் முழுக்க முழுக்க இவர்கள் வசத்தில் இருக்கிறது, இதன் நேர்விளைவாக , உழைப்பாளி மக்கள் அடைவரின் மீதும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அவர்களை ஒடுக்குகிறார்கள், சுரண்டுகிறார்கள். உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையினர் பாட்டாளிகளாய் , கூலித் தொழிலாளர்களாய் வாழ்பவர்கள்; அதாவது , உற்பத்தி முறையில் தங்களுக்கே உரிய உழைக்கும் கரங்களை, தங்கள் உழைப்புச் சக்தியை விற்க நிர்ப்பந்திக்கப்படுவதால் மட்டும் பிழைப்புக்கு வேண்டியதைப் பெறுகிறார்கள். குடியானவர்கள் பண்ணையடிமைக் காலத்திலேயே ஒற்றுமை கெட்டு , நசுக்கப்பட்டிருந்தார்கள். பண்ணையடிமை முறை போய் முதலாளித்துவம் நிறைபெறத் தொடங்கிய பொழுது, இவர்களில் ஒரு பகுதியினர் (பெரும்பான்மையினர்) பாட்டாளிகளாக மாற்றப்பட்டனர். மற்றொரு பகுதினர் (சிறுபான்மையினர்) செல்வம் படைத்த குடியானவர்களாக, அதாவது தாங்களே தொழிலாளரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வோராய், நாட்டுபுறத்தைச் சேர்ந்த முதலாளித்துவ வர்ககத்தினாராய் மாற்றமடைந்தனர்.

இந்த அடிப்படை உண்மையை -அதாவது , சமுதாயம் அடிமை முறையின் ஆதிகால வடிவங்களிலிருந்து பண்ணையடிமை நிலைக்கும், பிறகு இறுதியாக , முதலாளித்துவத்திற்கு மாறியதை - எப்பொழுதும் நீங்கல் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த அடிப்படை உண்மையை நினைவில் கொள்வதால் மட்டுந்தான் , எல்லா அரசியல் போதனைகளையும் இந்த அடிப்படைத் திட்டத்தில் வைத்துப் பரிசீலிப்பதால் மட்டுந்தான், இந்தப் போதனைகளைச் சரியான வகையில் மதிப்பிட்டு அறியவும், அவை குறிப்பது என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

மனித இனத்தின் வரலாற்றில் , அடிமை முறையும், பண்ணையடிமை முறையும், முதலாளித்துவமுமான இந்தப் பெருங்காலப் பகுதிகளில் ஒவ்வொன்றும் பத்துக்கணக்கான, நூற்றுக்கணக்கான நூற்றாண்டுகளைக் கொண்டது. மற்றும் ஏராளமான பல அரசியல் வடிவங்களை, வெவ்வேறான அரசியல் போதனைகளை , கருத்தோட்டங்களை, புரட்சிகளையெல்லாம் தோன்றச் செய்துள்ளது.

முதலாளித்துவ அறிஞர்கள் , அரசியல்வாதிகளும் ஆனவர்களின் அரசியல், தத்துவஞானம் இன்னும் பிற போதனைகளுடன் சிறப்பாகத் தொடர்புள்ள இந்தப் பெரும் வேறுபாட்டையும், அளப்பரிய வகைப் பாட்டையும் விளக்கிக் கொள்ள ஒரே ஒரு வர்க்க ஆதிக்கத்தின் வடிவங்களில் ஏற்பட்ட மாறுதல் ஆகியவற்றை வழிகாட்டும் சாதன மாகக் கொண்டு பொருளாதாரம் , அரசியல், ஆன்மிகம் , சம்யம் முதலானவை பற்றிய எல்லாச் சமுதாயப் பிரச்சினைகளையும் ஆராயவதே அந்த வழியாகும்.

இந்த அடிப்படை வர்க்கப் பிரிவினை பற்றிய பார்வை நிலையிலிருந்து நீங்கள் அரசு என்பதை ஆராயவீர்கானால், நான் முன்பே சொல்லியபடி, சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிவதற்கு முன்பு, அரசே இருந்ததில்லை என்பதைக் காண்பீர்கள்.ஆயினும், சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை உண்டாகி, உறுதியாக வேரூன்றி விட்டபொழுது வர்க்கச் சமுதாயம் தோன்றிவிட்ட பொழுது, அரசு என்பதும் கூடவே தோன்றி , உறுதியாகவும் வேரூன்றி விட்டது.

அடிமை முறை, பண்ணயடிமை முறை. முதலாளித்துவ முறை ஆகிய கட்டங்களைக் கடந்து சென்ற, இன்னும் சென்று கொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான நாடுகளை மனித இனத்தின் வரலாறு கண்டிருக்கிறது. எத்தனையோ அரசியல் திடீர் மாற்றங்களும் எத்தனையோ புரட்சிகளும் ஏற்பட்டிருந்தாலும் கூட, அரசின் தோற்றத்தை நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள். இவற்றில் ஒவ்வொரு நாட்டிலும், மாபெரும் வரலாற்று மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினுங்கூட, மனித இனத்தின் வளர்ச்சியோடு வழியாக முதலாளித்துவத்திற்கும், முதலளித்தை எதிர்து உலகெங்கும் பரவிய இன்றையப் போராட்டத்திற்கும் சமுதாயம் மாறிச் சென்றிருக்கும் நிகழ்ச்சியுடனும் தொடர்பு கொண்ட சமுதாயத்தினிறும் தனித்துப் பிரிந்த ஒரு குறிப்பான இயந்திரமாக அது எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது; பகுதியாகவோ அல்லது பெரும்பாலும் முழுக்கவோ ஆளுகை செய்வதில் ஈடுபட்டவரான மக்கள் குழுவினையே அது கொண்டிருந்து வந்திருக்கிறது.

மக்கள் , ஆளப்படுவோராகவும் ஆள்வதில் தேர்ந்தவராகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். கடைசியில் கூறப்பட்டவர்கள், சமுதாயத்திற்கு மேல் உயர்ந்து ஆளுவோர், அரசின் பிரதிநிதிகள் என அழைக்கப்படுவோராய் இருக்கிறனர். இந்த இயந்திரம், மற்றவரை ஆள்கின்ற இந்த்க் குழு, கட்டாயப்படுத்துவதற்கான பொருளாயதப் பலம் கொண்ட ஒரு குறிப்பிட்ட கருவிவை எப்பொழுதும் தன்னிடம் கொண்டிருக்கிறது. ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலக் கட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ, அல்லது மத்தியக் காலத்தில் தோன்றிய சுடு கருவிகள் மூலமோ, அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நூணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள, இன்றையத் தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனைகளை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலமோ, இந்த வன்முறை மக்கள் மீது செலுத்தப் படுமின்றது. வன்முறைக்குரிய வழிமுறைகள் மாறின. ஆனால் அரசு நிலவிய பொழுதெல்லாம், ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் ஒரு பகுதியினர் ஆள்வோராய், ஏவல் கொள்வோராய், ஆதிக்கம் புரிவோராய், தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டி, பொருளாயத நிர்ப்பந்தத்திறுகான ஒர் இயந்திரத்தை வன்முறைக்குரிய இயந்திரத்தை அந்தத் காலத்தின் தொழில் நுணுக்கத் தரத்திற்கு ஒத்த ஆயுதங்களைப் பெற்றிருந்தனர்.

இந்தப் பொது நிகழ்ச்சிகளை ஆராய்வதன் மூலம், வர்க்கங்களே இருந்திராத காலத்தில் சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருந்திராத காலத்தில் அரசென்பது இருந்ததில்லையே ஏன்? என்பதையும், வர்க்கங்கள் தோன்றிய பொழுது அதுவும் தோன்றியது ஏன்? எனபதையும் நம்மையே நாம் கேட்டுப் கொள்வதன் மூலம் மட்டுந்தான், அரசின் சாரம் என்ன? அதன் பாத்திரம் என்ன? என்ற கேள்விக்கான ஒரு திட்டமான விடையை நாம் பெறுவோம்.
(அடுத்தடுத்த பதிவுகளில் )

Tuesday, April 10, 2007

அரசு குறித்து - லெனின் பகுதி II

அரசு எல்லாக் காலங்களிலும் இருந்ததில்லை என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். 'அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே? எவ்வப்போது? சமுதாயத்தில் எங்கே வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசும் தோன்றுகிறது.

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கான முதல் வடிவம்; சமுதாயம் வர்க்கங்களாக , ஆண்டைகள்-அடிமைகள் என்று பிரிக்கிற முதல் வடிவம் தோன்றுவதற்கு முன்பு சந்தைவழிக் குடும்பம் என்றும் கூறுவதுண்டு (கிளான் என்பது குலம், தலைமுறை ஆகியவற்றுக்கு இணங்க மக்கள் கூடி வாழும் முறை). ஆதி மக்கல் இனங்களது வாழ்க்கையின் அந்த ஆதிகாலத்திற்குரிய வெவ்வேறு திட்டமிட்ட அறிகுறிகள் இன்றளவும் தப்பிப் பிழைத்திருக்கின்றன. ஆதிகாலப் பண்பாடு பற்றிய எந்த ஒரு நூலை எடுத்தாலும் , ஆதிகாலக் கம்யூனிசத்தை ஓரளவு ஒத்திருக்கும் காலம் இருந்தது பற்றியும். அடிமைகள் என்று, ஆண்டைகள் என்றும் சமுதாயம் பிரிக்கப் படாத காலம் ஒன்று இருந்தது என்பது பற்றியும் வெவ்வேறு அளவு திட்டமான விளக்கங்களையும், குறிப்புகளையும், நினைவுகளையும் நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள். அக்காலத்தில், அரசு என்படு இருந்ததில்லை. வன்முறைகளைப் பயன்படுத்தும் , வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருந்ததில்லை. அவ்வகை இயந்திரமே அரசு எனப்படும்.

ஆதிகாலச் சமுதாயத்தில், ஒரளவு காட்டுமிராண்டி நிலையை ஒத்த , வளர்ச்சியின் இன்னும் மிகவும் தாழ்ந்த படியிலேயே மக்கள் சிறு, சிறு குலங்களாக வாழ்ந்த காலத்தில் - நாக்ரிகம் படைத்த இன்றைய மனிதச் சமுதாயத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலத்தில், அரசு என்ற ஒன்று இருந்ததற்குரிய அறிகுறிகளே தென்பட்வில்லை. அங்கே வழக்கம் , மரபு இவற்றின் ஆதிக்கத்தையும், குலத் தலைவர்கள் கைத்தாண்ட செல்வாக்கு , மதிப்பு , அதிகாரம் இவற்றையுமே நாம் காண்கிறோம். இந்த அதிகாரம் சில வேளை மகளிருக்கும் அளிக்கப் பெற்றிருந்ததைக் காண்கிறோம்- அன்றைய மகளிர் நிலை இன்றைய மகளிரைப் போல உரிமைகளற்ற ஒடுக்கப்பட்ட நிலை இருந்த்தில்லை.
ஆனால் அந்தக் காலத்தில், மற்றவரை ஆள்வதற்காகவும்,ஆள்வதையே நோக்க மாகக் கொண்டும் ஒரு வகைக் கட்டாயப்படுத்தும் இயந்திரத்தை, அதாவது வன்முறை இயந்திரத்தை முறையாகவும், நிரந்தரமாகவும் கையாளுவதற்காக மக்களிடையே வைக்கப்பட்ட தனி வகையின ஆட்களை நாம் எங்கும் காண்பதில்லை. வன்முறைக்கு மற்றவருடைய சித்ததைப் பணியச் செய்வற்குரிய ஆயுதமேந்திய இராணுவப் பிரிவுகள் ,சிறைச்சாலைகள், வேறு பல சாதனங்கள் முன் சொன்ன இயந்திரங்களின் இன்றைய உருவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசு என்பதன் சாரம் இவை அனைத்திலும் அடங்கியிருக்கிறது. இவற்றை ஆதிகாலக் சமுதாயத்தில் எங்குமே நாம் காண முடிவதில்லை.

முதலாளித்துவ அறிஞர்கள் முன்வைத்துள்ள மதப்போதனைகள் என்று கூறப்படுபவை , உபாயங்கள், தத்துவஞான வாதங்கள்,பல்வேறு கருத்தோட்டங்கள் ஆகியவறறை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, விசயத்தின் உண்மையான சாரத்தை மட்டும் அறிய முயன்றால் , அரசு என்பது மனித்ச் சமுதாயத்தினின்று முழுமையாகப் புறத்தே நிற்கும், ஆளுவத்ற்கான இயந்திரமாக விளங்கிவதை நாம் காண்போம். ஆளுவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஒரு தனிப் பிரிவினர் தோன்றும் பொழுது,பிறருடைய சித்தத்தைக் கட்டாயப்படுத்துவதற்கும், கீழ்ப்படுத்துவதற்குமான தனி இயந்திரம்- சிறைச்சாலைகள், தனிப்பட்ட படைப் பிரிவுகள் , இராணுவக் முதலியவை - அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது , அரசு என்பது தோன்றுகிறது.

என்றாலும், அரசென்பதே இல்லாத காலம் ஒன்றும் இருந்தது. அப்பொழுது, பொதுத் தொடர்புகள், சமுதாயக் கட்டுப்பாடு , வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாம் பழக்க வழக்கம், மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ, குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ, உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப் பெற்றன. மகளிரோ அந்நாளில் ஆடவரோடு சரி நிகரான நிலையைப் பெற்றிருந்ததோடு, பல சமயங்களில் ஆடவரிலும் உயர்ந்த நிலையைக் கூடப்பெற்றிருந்தார்கள். அந்நாளில் ஆளுவதற்கு தனிச்தேர்ச்சி பெற்ற வகையினர் இருந்ததில்லை. எங்கு? எப்பொழுது? சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு பிரிவினர், மற்ற பிரிவினரின் உழைப்பை நிரந்தரமாகத் தன்வயமாகக் கொள்ள முடிகிற, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாளப் பிரிந்ததோ , அங்கு அப்பொழுது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் தனி இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.

சமுதாயம் இவ்வாறு வர்க்கங்களாகப் பிரிந்ததை வரலாற்றின் ஓர் அடிப்படை உண்மையாக எப்போதும் தெளிவாக மனதில் இருத்துதல் வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆடுகளாக விதிவிலக்கில்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மனிதச் சமுதாயங்களின் வளர்ச்சியும் ஒரு பொது விதிக்கு உட்பட்டு , முறையாகவும் , ஒத்தியைந்த வழியிலும் நடந்திருக்கும் எனபதைக் காட்டுகிறது. அவ்வகையில், முதற் கண் சமுதாயம்வர்க்கங்கள் இன்றி இருந்தது. தொடக்கத் காலத்திய தந்தை வழிக் குடும்பம், ஆதிகாலத்திற்குரிய சமுதாயம். அதில் உயர்குடி மக்கள் என்போர் இருந்ததில்லை. பிறகு அடிமை முறையில் அமைந்த சமுதாயத்தை , ஆண்டை - அடிமைச் சமுதாயத்தை நாம் காண்கிறோம். நாகரிகம் படைத்த இன்றைய ஐரோப்பா முழுவதும் இந்தக் கட்டத்தை கடந்து தான் வந்திருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடிமை முறை இங்கு ஆதிக்கம் செலுத்தியது. உலகத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மிகவும் பெருபாலான மக்களினங்கள் இந்தக் கட்டத்தை கடந்து தான் வந்திருக்கின்றன. குறைந்த வளர்ச்சி பெற்ற மக்களினங்களிடையே இன்றளவும் அடிமை முறையின் அடையாளங்கள் நீடித்திருக்கின்றன. இன்றைக்கும், எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவில் , அடிமை முறை ஏற்பாடுகளைக் காணலாம்.

ஆண்டைகளும் - அடிமைகளும் முதன்முதலில் ஏற்பட்ட முக்கிய வர்க்கப் பிரிவுகள் ஆவர். முதலில் கூறப்பட்ட பிரிவினர் (ஆண்டை) நிலமும். கருவிகளும் - அக்கருவிகள் அக்காலத்தில் எவ்வளவுதான் பண்படாத நிலையில் இருந்தாலும் -உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் மட்டுமல்ல, மக்களையுங்கூடத் தம் உடைமையாக்கிக் கொண்டார்கள். இந்த்ப் பிரிவினர் ஆண்டைகள் எனப்பட்டனர். மற்றவுக்காக உழைத்து , உழைப்பை வழங்கியவர்களோ அடிமைகள் எனப்பட்டனர்.

வரலாற்றில் இந்த வடிவத்தைக் தொடர்ந்து இன்னொறு வடிவம் பண்ணையடிமை முறை தோன்றியது. மிகவும் பெரும்பாலான நாடுகளில்,அடிமை முறை தன் வளர்ச்சிப் போக்கில் பண்ணையடிமை முறையாக ஆயிற்று. அப்பொழுது சமுதாயத்தின் அடிப்படைப் பிரிவினை நிலப்பிரபுக்களும், பண்ணையடிமைகளுமாக அமைந்தது. மக்களுக்கிடையே நிலவிய உறவுகளின் வடிவம் மாறலாயிற்று. ஆண்டைகள் அடிமைகளைத் தங்கள் உடைமையாகவே மதித்திருந்தனர். சட்டம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தியதோடு, அடிமையை முழுக்கவும் ஆண்டைக்கே உரிமைப்பட்ட ஒரு பொருளாகக் கருதியது. பண்ணையடிமைக் குடியானவர்களைப் பொறுத்தமட்டில், வர்க்க ஒடுக்கு முறையும், சார்பு நிலையும் தொடர்ந்து இருந்து வந்தன. ஆயினும், குடியானவன் நிலப்பிரபுவின் உடைமையில் உள்ள பொருளாகக் கருதப்படவில்லை. குடியானவனுடைய உழைப்புக்கும், சில குறிப்பான ஊழியங்களைப் புரியும்படி அவனைக் கட்டாயப்படுத்தவும் மட்டும் நிலபிரபு உரிமை கொண்டுருந்தார். ஆனால் நடைமுறையில், குறிப்பாகப் பண்ணையடிமை முறை எல்லா நாடுகளையும் விட நீண்ட காலமாக நிலவி, மிகவும் கொடுமையான வடிவங்களையும் கொண்டுருந்த ரசியாவில், இது அடிமை முறையினின்று எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை என்று உங்களுக்குத் தெரியும்.

இதன்பின், பண்ணையடிமைச் சமுதாயத்தில் வாணிபம் வளர்ச்சியுற்று, உலகச் சந்தை தோன்றி, பணப் புழக்கம் வளர்ச்சியுற்றதோடு கூடவே, ஒரு புதிய வர்க்கம் தோன்றிற்று. அதுதான் முதலாளி வர்க்கம்.

அரசு குறித்து - லெனின் பகுதி I


***********************************************************************************************


அரசு என்ற இந்த நூல் , யா.மி.ஸ்வேர்திலோ பல்கலைக் கழகத்தில் கி.பி. 1919 ஜீலை 11 - இல் , வி.இ.லெனின் ஆற்றிய விரிவுரை ஆகும். கி.பி.1984 இல், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் பதிக்கப்பட்ட இந்த நூல் சில மொழிபெயர்ப்புத் திருத்தங்களுடன் வெளியிடபடுகிறது.

***********************************************************************************
தோழர்கள்ளே ! நீங்கள் முன்மொழிந்த திட்டத்தின்படி இன்றைய உரைக்குரிய பொருள் அரசு என்பதாகும். இப்பொருள் பற்றி ஏற்கெனவே உங்களுக்கு எந்த அளவு தெரிந்த்துள்ளது. என்பதை நான் அறியேன். நான் நினைப்பது சரியானால் உங்களது வகுப்புகள் இப்பொழுதுதான் தொடங்குகின்றன. இப்பொருளை முறையாக நீங்கள் அணுக தொடங்குவது இதுவே முதல் தடவையாகும். அப்படியானால் கடினமான இப்பொருள் பற்றிய முதற் பேச்சில் , எனது உரையில் பலருக்குப் போதிய அளவு தெளிவாகவும்,புரியக் கூடிய விதத்திலும் கருத்துக்களை விளக்குவதில் நான் வெற்றி பெறாமல் போகலாம். அப்படு நேர்ந்து விடுமாயின் , அது பற்றிக் கலக்கமுற வேண்டாம் என்றும் உங்களைப் கேட்டுக் கொள்கிறேன்.


ஏனெனில் , அரசு என்பது பற்றிய பிரச்சினை மிக மிகச் சிக்கலும் கடினமுள்ள ஒன்று; முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் தத்துவஞானிகளால் ஒருவேளை மற்ற எந்தப் பிரச்சினையையும்விட மிகுதியாகக் குழப்பி விடப்பட்ட ஒன்றாகும். ஆகவே இப்பொருளை, ஒரு சுருக்கமான பேச்சில் , ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கக் கூடாது. இப்பொருளை பற்றிய முதற் பேச்சுக்குப்பின், விளங்கிக் கொள்ளாத, அல்லது உங்களுக்குத் தெளிவில்லாத இடங்களை நிங்கள் குறித்து வைத்து, இரண்டாவது , மூன்றாவது, மற்றும் நான்காவது முறையும் அவற்றை அணுக வேண்டும். அவ்வகையில் , நீங்கள் விளங்கிக் கொள்ளாதவற்றைப் படிப்பது மூலமும், தனிப்பட்ட விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றினாலும் , மேலும் நிறைவு செய்து விளக்கம் பெறாலாம். மீண்டும் ஒருமுறை நாம் கூடி உறையாட முடியுமென்று நம்புகிறேன். விரிவுரைகள் , உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்கசும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களிலும் சிலவற்றையேனும் படிப்பதில் நீங்கள் சிறிது நேரம் ஈடுபடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.


சோவியத் கட்சிப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான நூல்நிலையத்தில் உள்ள நூல் பட்டியலிலும், உதவிப் புத்தகங்களிலும் மிகமிக முக்கியமான இந்நூல்களைக் காணக்கூடும் என்பதில் ஐயமில்லை. இந்நூல்களினுடைய வாசகத்தின் சிக்கல் காரனமாக, உங்களில் சிலருக்கு முதலில் திகில் உண்டாகலாம்.இருந்தாலும், இதனால் நீங்கள் ஏதும் கலக்கமடையக்கூடாது என்று மறுபடியும் கூறுகிறேன். முதல் முறை படிக்கும் பொழுது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் பொழுது அல்லது பின்னர் அந்த்ப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட ஒரு கோணத்திலிருந்து அணுகும் பொழுது தெளிவாகி விடும். ஏனென்றால், இந்தப் பிரச்சினை மிகச் சிக்கலானது.


அதோடு , முதலாளித்துவ அறிஞர்களும், எழுத்தாளர்களும் இதனை மிகவும் குழப்பியும் விட்டிருக்கிறார்கள் என்படைத் திரும்பவும் சொல்கிறேன். ஆகவே இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, அதில் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற விரும்பும் யாரும் இதனைப் பல முறையில் முனைந்து பயில வேண்டும். அதனைத் தெளிவாகவும், திண்ணமாகவும் புரிந்து கொள்ளுவதற்குப் பல்வேறு கோணங்களிலிருந்தும் இப்பிரச்சினையைப் பரிசிலீக்க வேண்டும்.


இப்பிரச்சினைக்கே மீண்டும் திரும்புவது என்பது மிகவும் எளிது. ஏனெனில் , அரசியல் முழுவதற்குமே இது அவ்வளவு மூலாதாரமான, அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். மேலும் , தற்காலம் போல அத்தனை புயல் வீசும் புரட்சிகரக் காலங்களில் மட்டும் அல்லாமல், மிக மிக அமைதியான காலங்களில் கூட, ஒவ்வொரு நாளும் எந்த்ச் செய்தித்தாளிலும் ஏதேனும் ஒரு பொருளாதர அல்லது அரசியல் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டு இந்தப் பிரச்சினை உங்களை எதிர்நோக்கும்.


அரசு என்பது என்ன? அதன் தன்மை யாது? அதன் பொருள் என்ன? நம்து கட்சி, முதலாளித்துவத்தைக் தூக்கி எறியப் போராடும் கட்சி, அதாவது கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு விசயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? இக்கேள்விகளுக்கு ஏதேனுமொரு தொடர்பில் ஒவ்வொரு நாளும் நீங்கள் திரும்ப நேரும். மேலும், வெவ்வேறு நிலைமைகளில் , மிகமிக அற்பமான பிரச்சினைகளையொட்டி, மிகவும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிரிகளோடு நடத்தும் உரையாடல்களிலும், விவாதங்களிலும் இந்தப் பிரச்சினை உங்கள் எதிர்நிறக் காண்பீர்கள்.


ஆதலால், உங்கள் படிப்பின் பயனாய் , அரசு என்பது பற்றி நிங்கள் செவிமடிக்கும் உரையாடல்கள். விரிவுரைகள் ஆகியவற்றின் பயனாய் , நீ£ங்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையின்றியே அணுகும் ஆற்றலைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இப்பிரச்சினையைப் பிறர் துணையின்றி ஆராயும் வழியை நீங்கள் கற்றால்தான், உங்கள் கொள்கைத் துணிபுகளில் போதிய அளவு உறுதி கொண்டவர்களாக உங்களை நீங்கள் கருத முடியும் . யாரையும் எதிர்த்து எந்த நேரத்திலும் அவற்றைப் போதிய வெற்றியுடன் பாதுகாத்து நிற்க முடியும்.


இச்சுருக்கமான குறிப்புகளைத் தொடர்ந்து , இனி நான் இப்பிரச்சினையையே ஆராயப் போகிறேன். அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சி, அரசைப் பற்றிக் கொள்ள வேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? இதுவே பிரச்சினை ஆகும்.
(அடுத்தடுத்த சில பதிவுகளில் )

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •